நருடோ கிரே நிறத்தில் கார்! வெறும் 500 பேர் தான் இதை வாங்க முடியும்! விலை என்ன தெரியுமா?

லெக்ஸஸ் நிறுவனம் சமீபத்தில் தனது வி8 இன்ஜின் உடன் கூடிய ஐஎஸ்500 காரின் கிளைமேக்ஸ் எடிசன் என்ற லிமிடெட் எடிசன் காரை ஜப்பான் மார்கெட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. வெறும் 500 கார்கள் மட்டுமே இந்த தயாரிக்கப்படவுள்ளது. இந்த காரில் அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கிறது? இதை விலை எவ்வளவு? விரிவான விபரங்களை இங்கே காணலாம் வாருங்கள்.

லெக்ஸஸ் நிறுவனத்தின் இந்த ஸ்பெஷல் எடிசன் கார் ஜப்பான் மார்கெட்டில் மட்டுமே விற்பனைக்கு அறிமுகமாகியுள்ள நிலையில் இது 95 லட்சம் ஜப்பான் யென் என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ரூ51.2 லட்சம் என்ற விலையில் அறிமுகமாகியுள்ளது. இந்த காரில் ஃபெர்பார்மென்ஸ் மற்றும் ஸ்டைலிங் ஆகிய அம்சங்களில் அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த கார் வரும் ஆகஸ்ட் மாதம் ஜப்பான் ஷோரூம்களுக்கு வரவுள்ளது.

Lexus IS500 Clima Edition

இந்த காரை அந்நிறுவனம் லெக்ஸஸ் கார் கலெக்டர்கள், ஆர்வலர்கள், அந்நிறுவனத்தின் பாராமரியத்தை பாதுகாப்பாவர்களுக்காக விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இந்த ஐஎஸ்500 கிளைமேக்ஸ் எடிசன் கார் நருட்டோ கிரே நிறத்தில் வெளிப்புற பெயிண்ட் வழங்கப்பட்டுள்ளது. இந்த காரின் வடிவமைப்பு அக்ரஸிவான லுக்கில் வழங்கப்பட்டுள்ளது. இந்த கார் குறைந்த எடை கொண்ட அதே நேரம் அதிக உறுதி தன்மை கொண்ட பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக இதில் 19 இன்ச் மேட் கருப்பு நிற அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த காரின் கேபின் பகுதி ரேடிகேல் ஃபேஸ்லிஃப்டை பெற்றுள்ளது. இது சிவப்பு மற்றும் கருப்பு நிறத்தில் உட்புறத்தை கொண்டுள்ளது. ட-டெக்ஸ் போலி லெதர் மற்றும் அல்ட்ராசூடி கொண்டு சீட்டுகள் மற்றும் டோர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. டெக்சர்டு லெதர் கொண்டு ஸ்டியரிங் வீல் கியர் நாப் வழங்கப்பட்டுள்ளது. சிவப்பு நிறத்தில் சீட்பெல்ட்கள்வழங்கப்பட்டள்ளது. காரில் ஆங்காங்கே சிவப்பு நிறத்தில் ஸ்போர்ட்டியான ஆம்பியன்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

Lexus IS500 Clima Edition

இந்த வடிவமைப்பு லெக்ஸஸ் நிறுவனத்தின் டிரேடுமார்க் பில்டு குவாலிட்டியை கொண்டுள்ளது. இந்த காரின் உள்ளே இருக்கும் ஸ்கிரீனில் இந்த கார் கிளைமேக்ஸ் எடிசன் என்பதற்கான ஸ்டார்ட் அப் அனிமேஷன் வழங்கப்பட்டுள்ளது. இது போக லெதர் என்கிரேவ் செய்யப்பட்ட அனலாக் கிளாக், பேட்ஜ் செய்யப்பட்ட டோர் சில்கள் ஆகியவை எக்ஸ்க்ளுஸிவாக வழங்கப்பட்டுள்ளன.

இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை 5.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பயர்டு வி8 பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 472 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும். சாதாரண எடிசன் காரிலும் இதே இன்ஜின் தான் இருக்கிறது. இதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்த காரில் பிரம்போ பேக்கேஜ் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. சாதாரண எடிசன் காரில் 356 மிமீ பிரேக் இருக்கிறது. இந்த காரில் 6 பிஸ்டன், ரெட் கேலிபர் கொண்ட 380 மிமீ பில்லர் ஃபின் பிரேக் ரோட்டர்கள் பொருத்தப்ப்டடுள்ளன.

Lexus IS500 Clima Edition

இந்த பிரேக்குகளை விரைவாக கூலாகும் அம்சம் கொண்டது. இதனால் சாதாரண எடிசன் காரை விட இதில் பிரேக்கிங் பெர்ஃபார்மென்ஸ் சிறப்பாக இருக்கும். மற்ற மெக்கானிக்கல் அம்சங்கள் எல்லாம் சாதாரண ஐஎஸ்500 எஃப் காரில் இருப்பது போல தான் இருக்கிறது. இதில் 8.0 இன்ச் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமென்ட் செட்டப் அப்படியே இருகு்கிறது. அதில் கிளைமேட் எடிசனிற்காக தனித்துவமான கிராஃபிக்ஸ் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: லெக்ஸஸ் நிறுவனம் இந்த காரை வி8 இன்ஜினில் வரும் கடைசி செடான் கார் என்பதால் கிளைமேக்ஸ் எடிசன் என பெயர் வைத்துள்ளது. இந்நிறுவனம் எஸ்யூவி காரில் தனது கவனத்தை மாற்றியுள்ளது. ஜப்பான் மார்கெட்டில் மட்டும் வெறும் 500 பேரால் மட்டுமே இந்த காரை வாங்க முடியும். இந்த கார் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Monday, June 23, 2025, 8:20 [IST]
English summary
Lexus is500 climax edition launched final v8 sedan limited 500 units
மேலும்... #lexus
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X