அம்மாக்கள் ஓட்ட இவ்வளவு சூப்பரான காரெல்லாம் இருக்குதா? லிஸ்ட் ரொம்ப சூப்பர்!
ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 11ம் தேதி அம்மாக்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இன்றைய சூழ்நிலையில் ஒரு குடும்பத்தின் தலைவியாக தாய்மார்க் மிக சிரமப்பட்டு உழைக்கிறார்கள். அவர்களுக்கு வாகனம் ஓட்டுவது ஒன்று சளைத்த விஷயம் இல்லை. பல குடும்ப தாய்மார்கள் தற்போது கார் ஓட்டி வருகின்றனர். அப்படியாக இந்தியாவில் அம்மாக்களுக்கு ஏற்ற கார்கள் குறித்த விரிவான விபரங்களை தான் இங்கே காணப்போகிறோம். இந்த பட்டியலில் உள்ள வாகனத்தை வாங்கி நீங்கள் உங்கள் அம்மாவிற்கு பரிசளிக்கலாம். இது கறித்த விரிவான விரபங்களை காணலாம் வாருங்கள்.
இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா கார் தான். இந்த கார் இந்திய மார்கெட்டில் ரூ12.94 லட்சம் முதல் ரூ24.15 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த கார் மொத்தம் 59 வேரியன்ட்களில் விற்பனையாகி வருகுிறது. இதில் பெட்ரோல், டீசல் ஆகிய ஆப்ஷன்கள் உள்ளன.

இந்த காரில் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்களை பொருத்தவரை ஆட்டோமெட்டிக் சிவிடி, ஆட்டோமெட்டிக் டிசிடி, ஆட்டோமெட்டிக் டிசி உள்ளிட்ட ஆப்ஷன்கள் உள்ளன. இந்த ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன் விலை ரூ16.66 லட்சம் முதல்ரூ24.15 லட்சம் என்ற விலையில் விற்பைனயாகிறது. இந்த காரில் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக சிறந்த பாதுகாப்பு ரேட்டிங் மற்றும் குழந்தை சீட் ஆங்கர் ஆகிய அம்சங்கள் இந்த காரில் உள்ளன.
அடுத்ததாக மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யூவி 700 கார் இருக்கிறது. இந்த கார் ரூ17.10 லட்சம் முதல் ரூ30.88 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த கார் மொத்தம் 66 வகையிலான வேரியன்ட்களில் விற்பனையாகி வருகிறது. இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றாக இருக்கிறது. இ்நத காரை வாங்க மக்கள் நீண்ட நாட்கள் காத்திருக்கும் நிலை கூட இருக்கிறது.

இந்த மஹிந்திரா எக்ஸ்யூவி 700 காரில் ஆட்டோமெட்டிக் டிசி என்ற ஒரே ஒரு ஆட்டோமெட்டிக் கியர் ஆப்ஷன்கள் மட்டுமே இருக்கிறது. ஆட்டோமெட்டிக் கியர் ஆப்ஷன்களின் விலை ரூ21.68 லட்சம் முதல் ரூ30.88 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த காரிலும் பாதுகாப்பு அம்சம் சிறப்பாக இருக்கிறது. கிராஷ் டெஸ்ட் சோதனையில் இந்த கார் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது.
அடுத்ததாக டொயோட்டா நிறுவனத்தின் இன்னோவா ஹைகிராஸ் கார் இருக்கிறது. இ்நத கார் ரூ23.29 லட்சம் முதல் ரூ38.04 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. குடும்பத்துடன் அனைவரும் பயணிக்க ஏற்ற காராக இருக்கிறது. இந்த கார் மொத்தம் 11 விதமான வேரியன்ட்களில் விற்பனையாகி வருகிறது. இந்த கார் சிறப்பாக விற்பனையாகி வரும் கார்களில் ஒன்றாக இருக்கிறது.

இந்த காரில் ஆட்டோமெட்டிக் கியர் ஆப்ஷனை பொருத்தவரை சிவிடி மற்றும் இ-சிவிடி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் உள்ளன. இந்த ஆட்டோமெட்டிக் கியர் ஆப்ஷன் கொண்ட கார்களின் விலையை பொருத்தவரை ரூ23.29 லட்சம் முதல் ரூ24.85 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த காரும் பாதுகாப்பில் சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. இந்த கார் அதிக விலையில் விற்பனையாகி வரும் கார்களில் ஒன்றாக இருக்கிறது.
அடுத்த இடத்தில் கியா நிறுவனத்தின் சோனட் கார் இருக்கிறது. இந்த காரின் விலையை பொருத்தவரை ரூ8.99 லட்சம முதல் ரூ18.45 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகுிறது. இந்த கார் மொத்தம்20 விதமான வேரியன்ட்களில் விற்பனையாகி வருகிறது. இந்த கார் குடும்பத்துடன் பயணிக்க ஏற்ற காராக இருக்கிறது.
இந்த காரில் உள்ள ஆட்டோமெட்டிக் வேரியன்டை பொருத்தவரை டிசிடி மற்றும் டார்க் கன்வெர்டர் என்ற இரண்டு விதமான கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் உள்ளன. இந்த ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷனை பொருத்தவரை ரூ14.61 லட்சம் முதல் ரூ18.45 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த காரில் குடும்பத்துடன் பாதுகாப்பாக பயணிக்க சிறப்பாக கார் இது தான்.
அடுத்ததாக மஹிந்திரா நிறுவனத்தின் மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ என் கார் இருக்கிறது. இந்த கார் ரூ16.53 லட்சம் முதல் ரூ29.71 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த கார் இந்தியாவில் பாதுகாப்பான அம்சங்களில் சிறப்பாக காராக இருக்கிறது. இந்த கார் இந்தியர்கள் நீண்ட காலமாக ரசிக்கும் காராக இருக்கிறது.
இந்த காரில் மொத்தம் 46 விதமான வேரியன்ட்களில் விற்பனையாகி வருகிறது. இ்நத காரில் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களில் விற்பனையாகி வருகிறது. இதில் ஆப்டோமெட்டிக் கியர் ஆப்ஷன்களில் டார்க் கன்வெர்டர் கியர் பாக்ஸ் மட்டுமே விற்பனையாகி வருகிறது. ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் ரூ20.31 லட்சம் முதல் ரூ29.71 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.
ஒரு காலத்தில் டிரைவிங் என்றால் அது அண்களுக்கான துறை என்ற பிம்பம் இருந்தது. ஆனால் இன்று அந்த நிலைமை மாறியுள்ளது. பல பெண்கள் இன்று கார் ஓட்ட துவங்கிவிட்டனர். இதற்கு முக்கியமான காரணம் கார் உற்பத்தியாளர்கள் பலர் பெண்கள் சுலபமாக வாகனம் இயக்கும் வகையில் தொழிற்நுட்ப அம்சங்களை பயன்படுத்தி வாகனங்களை உருவாக்கி வருகின்றனர்.
இதில் முக்கியமான விஷயம் கியர் பாக்ஸ் தான். மேனுவல் கியர் பாக்ஸ் பெண்கள் இயக்குவதற்க சிரமமாக இருந்தது. அதற்கு வரப்பிரசாதமாக தான் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன் இருக்கிறது. இதனால் கிளட்ச் மதிக்க வேண்டிய தேவையில்லை. வாகனம் இயக்குவது சுலபமாக இருக்கும். அதே நேரம் ஸ்கூட்டரை இயக்கவது போல தற்போது உள்ள காரை இயக்க முடியும். இதனால் வருங்காலங்களில் அம்மாக்கள் பலர் கார் ஒட்டுவதை பார்க்க முடியும். இன்றைய இளம் பெண்கள் தான் நாளைய அம்மாக்களாக மாறப்போகிறார்கள். இதனால் நீங்கள் நிச்சயம் உங்கள் மனைவியாகிய நாளைய அம்மாக்களுக்கு கூட இந்த பட்டியலில் உள்ள காரை வாங்கி பரிசளிக்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பெண்கள் மிக அதிகமாக மதிக்கப்படுகிறார்கள். பெண்கள் தொடர்ந்து வளர்ச்சியடைய வைக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. அதன்படி நம் வீட்டில் நமது அம்மாவை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர வைத்துள்ளது. இந்த பட்டியலில் உள்ள கார்களை அம்மாக்கள் தினத்தன்று நீங்கள் வாங்கி உங்கள் அம்மாவிற்கு பரிசாக வழங்க முடியும். இந்த அம்மாக்கள் தினத்தில் உலகில் ஒவ்வொரு குழந்தைகளையும் பெற்று வளர்க்கும் தாயின் தியாகத்தையும், அவ்களின் உறுதியையும் அர்ப்பணிப்பையும் நாம் போற்றி மகிழ்வோம்.


Click it and Unblock the Notifications









