இந்த காருக்கெல்லாம் இனி 40 சதவீதம் வரி! ஆனா விலை பெருசா கூடாது ஏன் தெரியுமா?
இந்தியாவில் வரும் செப்டம்பர் 22ம் தேதி முதல் ஜிஎஸ்டி வரியில் மாற்றம் கொண்டு வரப்படுகிறது. ஆட்டோமொபைல் செக்டாரில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சிறிய ரக கார்கள், மற்றும் பைக்குகளுக்கு 28 சதவீதமாக இருந்த வரி 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. பெரிய ரக வாகனங்களுக்கு 40 சதவீதம் வரி விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் படி எந்தெந்த வாகனங்களுக்கு எவ்வளவு வரி விதிக்கப்படும் என விரிவாக காணலாம் வாருங்கள்.
ஜிஎஸ்டி கவுன்சில் வெளியிட்டுள்ள தகவலின்படி பெட்ரோல், பெட்ரோல் ஹைபிரிட், எல்பிஜி, சிஎன்ஜி கார்கள் 1200 சிசி மற்றும் 4000 மிமீ நீளத்திற்கு குறைவாக இருந்தால் அந்த வாகனங்களுக்கம், டீசல், டீசல் ஹைபிரிட் கார்கள் 1500 சிசி மற்றும் 4000 நீளத்திற்கு குறைவாக இருந்தாலும் பைக்ககளை பொருத்தவரை 350 சிசிக்கு குறைான இன்ஜின் திறன் கொண்ட வாகனங்களுக்கும், 3 வீலர்களுக்கும் மோட்டார் வாகன சரக்கு வாகனங்களுக்க 18 சதவீதம் என சொல்லப்பட்டுள்ளது. இது தவிற மற்ற வாகனங்களுக்கு 40 சதவீதம் வரி விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாருதி நிறுவனத்தின் கிராண்ட் விட்டாரா, இன்று அறிமுகமான விக்டோரியஸ், எர்டிகா, இன்விக்டோ, ஆகிய கார்களுக்கு 40 சதவீதம் வரி விதிக்கப்படும். அதே போல டாடா நிறுவனத்தின் கர்வ், ஹாரியர், சஃபாரி ஆகிய கார்களுக்கு 40 சதவீதம் வரி விதிக்கப்படும். மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ,எக்ஸ்யூவி 700, ஆகிய கார்களுக்கும், ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா, அல்கஸார், டுஸான் உள்ளிட்ட கார்களுக்கும் 40 சதவீதவம் வரி விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கியா நிறுவனத்தின் செல்டோஸ், கேரன்ஸ் எம்பிவி காருகளுக்கும், டொயோட்டா நிறுவனம் அர்பன் க்ரூஸர் ஹைரைடர், ரூமியான், ஃபார்ச்சூனர், லெஜென்டர், இன்னோவா ஹைகிராஸ், இன்னோவா கிரெஸ்டா, கேம்ரி, வில்ஃபயர், ஹில்லிக்ஸ், லேண்ட் க்ரூஸர் 300 ஆகிய கார்களுக்கு 40 சதவீதம் வரி விதிக்கப்படும். இந்த பட்டியலில் ஹோண்டா எலவேட் காரும் இடம் பிடித்துள்ளது.

எம்ஜி நிறுவத்தின் ஹெக்டர், எம்ஜி குளோஸ்டர், மற்றும் போக்ஸ்வேகன் பிராண்டில் டைகுன், விர்டுஸ், டிகுவான் ஆகிய கார்களுக்கு 40 சதவீத வரி விதிப்பு விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்கோடா மற்றும் குஷாக் ஆகிய கார்களுக்கு 40 சதவீதம் வரி விதிப்பு வருகிறது. இந்த பட்டியலில் இன்னும் முழுமை பெறவில்லை.
40% ஜிஎஸ்டி பெறும் கார்களின் பட்டியல்:
| பிராண்ட் | மாடல் | பழைய வரி (ஜிஎஸ்டி+செஸ்) | புதிய வரி |
| மாருதி | கிராண்ட் விட்டாரா | 28+22 | 40 |
| விக்டோரியஸ் | - | 40 | |
| எர்டிகா | 28+15 | 40 | |
| இன்விக்டோ | 28+15 | 40 | |
| டாடா | கர்வ் | 28+22 | 40 |
| ஹாரியர் | 28+22 | 40 | |
| சஃபாரி | 28+22 | 40 | |
| மஹிந்திரா | ஸ்கார்பியோ | 28+22 | 40 |
| எக்ஸ்யூவி 700 | 28+22 | 40 | |
| ஹூண்டாய் | கிரெட்டா | 28+17 | 40 |
| அல்கஸார் | 28+22 | 40 | |
| டுஸான் | 28+11 | 40 | |
| கியா | செல்டோஸ் | 28+17 | 40 |
| கேரன்ஸ் | 28+22 | 40 | |
| டொயோட்டா | அர்பன் க்ரூஸர் ஹைரைடர் | 28+22 | 40 |
| ரூமியான் | 28+22 | 40 | |
| இன்னோவா ஹைகிராஸ் | 28+15 | 40 | |
| கேம்ரி | 28+22 | 40 | |
| வில் ஃபயர் | 28+22 | 40 | |
| ஹில்லிக்ஸ் | 28+22 | 40 | |
| லேண்ட் க்ரூஸர் 300 டி | 28+22 | 40 | |
| எம்ஜி | ஹெக்டர் | 28+22 | 40 |
| குளோஸ்டர் | 28+22 | 40 | |
| ஃபோக்ஸ்வேகன் | டிகுவான் | 28+22 | 40 |
| டைகுன் | 28+22 | 40 | |
| விர்டுஸ் | 28+22 | 40 |
* பட்டியல் முழுமை பெறவில்லை
இந்த கார்களுக்கு எல்லாம் 40 சதவீத வரி என்பதால் இந்த கார்களின் விலை எல்லாம் அதிகமாகும் என நினைக்க வேண்டாம். இந்த கார்களுக்கு தற்போது 28 சதவீத ஜிஎஸ்டி வரி போக 22 சதவீத செஸ் வரியும் விதிக்கப்படுகிறது. அப்படி பார்த்தால் தற்போது 50 சதவீத வரி விதிக்கப்படுகிறது. இது 40 சதவீதமாக குறைக்கப்படுகிறது என்றே சொல்லலாம். அதே நேரம் சில கார்களுக்கு செஸ் வரி மாறுபடும். சில வாகனங்களுக்க 31 சதவீதமாக இருந்த வரி தற்போது 40 சதவீதமாக மாற்றப்பட்டுள்ளது.

இந்த வரி விதிப்பால் சொகுசு கார்களின் விலையும் ஒரளவிற்கு குறையும் என எதிர்பார்க்கலாம். முக்கியமாக இன்னோவா, ஹாரியர், உள்ளிட்ட கார்களின் விலை குறைய வாய்ப்புள்ளது. இந்த கார்களை வாங்குவதால் விலை குறையும் என நினைக்க வேண்டாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த ஜிஎஸ்டி வரி விதிப்பில் கார்களில் பெரிய அளவில் சொகுசு கார் வரி விதிப்பில் மாற்றம் இல்லை என்றே சொல்லலாம். பெரும்பாலான கார்களுக்கு விலை குறைய வாய்ப்புள்ளது. சில கார்களுக்கு மிக குறைவாக விலையேற்றம் இருக்கும் எனவும் எதிர்பார்க்கலாம். இது விற்பனையை பாதிக்கும் அளவிற்கு அதிகமாக இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications









