கேப்டன் மாதிரி கார்ல சும்மா ஜம்முனு போய் இறங்கனுமா? இந்த கார்ல ஒன்ன வாங்குங்க சூப்பரா இருக்கும்!
குடும்பத்துடன் பயணிக்கும் ரக கார்கள் தற்போது மார்கெட்டில் வெகு சிறப்பாக விற்பனையாகி வருகிறது. பலர் இந்த ரக கார்களை தான் விரும்புகிறார்கள்.அதிக நபர்கள் பயணிக்க வேண்டும். பயணம் வசதியாக இருக்க வேண்டும். அதே நேரம் அதிகமான பொருட்களை எடுத்து செல்லும் வசதி இருக்க வேண்டும் என்ற எண்ணம் பலருகஅகம் இருக்கிறது. அதேநேரம் இந்த கார்களை வாங்கும் உரிமையாளர்கள் பலர் நடுவரிசையில் உள்ள சீட்டில் அமர்ந்து பயணிக்கிறார்கள். அவர்களுக்க அந்த சீட் வசதி நிறைந்த சீட்டாக இருக்க வேண்டும் என கருதுகிறார்கள்.அதன்படி இந்தியாவில் விற்பனையாகும் 3 வரிசை சீட்டர் கொண்ட கார்களில் 2வது வரிசை சீட்டில் கேப்டன் சீட் கொண்ட கார்கள் குறித்த விபரங்களை காணலாம்.
மாருதி எக்ஸ்எல் 6 காரை பொருத்தவரை அந்நிறுவனத்தின் பிரிமியம் கார்கள் விற்பனையாகும் நெக்ஸா டீலர்ஷிப்கள் மூலம் விற்பனையாகி வருகிறது. இந்த கார் இந்தியாவில் விற்பனையாகும் எம்பிவி கார்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த காரின் அத்தனை வேரியன்ட்களிலும் இரண்டாவது வரிசை சீட்களில் கேப்டன் சீட்கள் உள்ளன.

இந்த காரில் உள்ள இன்ஜினை பொருத்தவரை 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 103 எச்பி பவரையும் 137என்எம் டார்க் திறனையும் வழங்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 6ஸ்பீடு டாரக் கன்வெர்டர் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் அதிக மைலேஜை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு சிஎன்ஜி ஆப்ஷனும் உள்ளது.
கியா நிறுவனத்தின் கேரன்ஸ் காரிலும் மிட் வேரியன்டான பிரஸ்டீஜ்(ஓ), டாப் வேரியன்டான லக்ஸரி பிளஸ் ஆகிய வேரியன்ட்களில் இரண்டாம் வரிசையில் கேப்டன் சீட்கள் கிடைக்கிறன. இந்த கார் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரண்டு விதமான வேரியன்ட்களில் கிடைக்கிறது. பிரஸ்டீஜ் (ஓ) வேரியன்ட் 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பர்டு பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனுடன் மட்டுமே வருகிறது. இது 115 பிஎச்பி பவரையும் 144 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். இது 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உடன் பொருத்தப்படுகிறது.

லக்ஸரி பிளஸ் வேரியன்டை பொருத்தவரை 1.5 லடி்டர் டர்போ டீசல் இன்ஜின் ஆப்ஷன் இருக்கிறது. இது 116 எச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உடன் உருவாக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் இருக்கிறது. இது 160 எச்பி பவரையும் 253என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 7 ஸ்பீடு டுயல் கிளட்ச் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் காருிலும் இரண்டாவது வரிசை சீட் கேப்டன் சீட்டாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் எஸ் 11 வேரியன்டில் மட்டுமே இது கிடைக்கம். இந்தகாரில் 2.2 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த கார் 130 எச்பி பவரையும் 300 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உடன் உருவாக்கப்பட்டுள்ளது.

எம்ஜி ஹெக்டர் பிளஸ் காரிலும் இரண்டாவது வரிசை சீட் கேப்டன் சீட்களாக உள்ளன. அனைத்து வேரியன்ட்களிலும் இந்த ஆப்ஷன் உள்ளது. இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 143 எச்பி பவரையும்550 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. மற்றொரு இன்ஜின் ஆப்ஷனாக 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 170 எச்பி பவரையும் 350 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. இது மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷனுடன் மட்டுமே விற்பனைக்கு வருகிறது.
அடுத்ததாக மஹிந்திரா எக்ஸ்யூவி 700 காரை பொறுத்தவரை அதன் டாப் வேரியன்ட்களில் மட்டுமே இரண்டாம் வரிசை சீட் கேப்டன் சீட்களாக உள்ளன இந்த காரின் இஞ்சின் ஆப்ஷனை பொருத்தவரை 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 200 எச்பி பவரையும் 342 என்எம் டார்க் திறைனயும் வெளிப்படுத்துகிறது. அடுத்தாக202 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் ஆப்ஷன் இருக்கிறது இது 185 எச்பி பவரையும் 450 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது இதில் 4வீல் டிரைவ் ஆப்ஷன் இல்லை.

அடுத்ததாக டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் காரிலும் இரண்டாம் வரிசை சீட்டில் கேப்டன் சீட் ஆப்ஷன் இருக்கிறது. டாப் வேரியன்ட்களில் இந்த ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் பொருத்தப்பட்டுள்ளன. இதன் இன்ஜினை பொறுத்தவரையில் 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 173 எச்பி பவரையும் 29 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் சிவிடி கியர் பாக்ஸ் உடன் பொருத்தப்பட்டுள்ளது அந்த ஆப்ஷனில் 184 எச்பி பவர் கிடைக்கும்.
அடுத்ததாக டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் கார் இருக்கிறது. இந்த காரின் அனைத்து வேரியன்டகளிலும் இரண்டாம் வரிசை சீட் கேப்டன் சீட்களாக வழங்கப்பட்டுள்ளன. இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை 2.4 லிட்டர் டீசல் டர்போ இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 150 எச்பி பவரையும் 343 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக மஹிந்திரா ஸ்கார்பியோ என் கார் இருக்கிறது. இந்த காரில் டாப் வேரியன்டான இசட் 8எல் வேரியன்டில் மட்டும் இரண்டாம் வரிசை சீட் கேப்டன் சீட்டாக பொருத்தும் ஆப்ஷன் இருக்கிறது. ஆனால் இதில் 4 வீல் டிரைவ்ஆப்ஷன் கிடையாது. இ்நத காரில் உள்ள இன்ஜினை பொருத்தவரை 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் இருக்கிறது. இது 203 பிஎச் பவரையும், 370 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றொரு ஆப்ஷனாக 2.2 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் ஆப்ஷன் இருக்கிறது 175 எச்பி பவரையும் 400 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
ஹூண்டாய் அல்கஸார் காரை பொருத்வரை மிட் வேரின்டான பிளான்டினம் வேரியன்டில் மட்டும் இந்த ஆப்ஷன் இருக்கிறது. இந்த காரில் உள்ன இன்ஜினை பொருத்தவரை 1.5 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் ஆப்ஷன் இருக்கிறது. இது 116 எச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மற்றொரு ஆப்ஷனாக 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் இருக்கிறது. இது 160 எச்பி பவரையும், 253 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
கடைசியாக டாடா நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் காரான சஃபாரி காரில் டாப் வேரியன்டான அக்ம்பிளிஷ் பிளஸ் வேரியன்டில் இரண்டாம் வரிசை சீட்டில் கேப்டன் சீட் ஆப்ஷன் இருக்கிறது. இதில் உள்ள இன்ஜினை பொருத்தவரை 2.0 லிட்டர் டர்போ டீசல் இன்ஜினாக பொருத்தப்பட்டுள்ளது. இது 170 எச்பி பவரையும் 350 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் கியர் பாக்ஸ் உடன் பொருத்தப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் குடும்பத்துடன் பயணிக்க அதிக சீட்டர் கொண்ட கார்களை வாங்க பலர் நினைத்தாலும் வசதியாக செல்ல நினைப்பவர்கள் கேப்டன் சீட் கொண்ட கார்களை தான் விரும்புவார்கள். அதனால் இந்த கார்கள் அவர்களுக்கு நிச்சயம் நல்ல ஆப்ஷனாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications









