ரொம்ப காலமா இருக்காங்க இப்போதான் முதல் ஷோரூமை திறந்திருக்காங்களா.. பெரும் நிறுவனங்களுக்கு போட்டியளிக்க அதிரடி!

உலக புகழ்பெற்ற கார் உற்பத்தி நிறுவனம் லோட்டஸ் (Lotus). பல ஆண்டு காலமாக இந்த நிறுவனம் உலக சந்தையில் கார்களை வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே லோட்டஸ் நிறுவனம் தலைநகர் டெல்லியில் தன்னுடைய புதிய கார் ஷோரூமே அண்மையில் திறந்தது. இதுவே நிறுவனம் இந்தியாவில் திறக்கும் முதல் கார் ஷோரூம் ஆகும். நிறுவனத்தின் கார்கள் இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால், இப்போதே அது முதல் முறையாக ஷோரூமை திறக்கின்றது. கடந்த 16 ஆம் தேதி அன்றே ஷோரூமை அது திறந்தது.

டெல்லி ஷோரூமைத் தொடர்ந்து நாட்டின் மேலும் சில முக்கிய நகரங்களிலும் அது ஷோரூமை திறக்க திட்டமிட்டு இருக்கின்றது. அந்தவகையில், நிறுவனம் அடுத்ததாக மும்பை மற்றும் பெங்களூரூ ஆகிய நகரங்களிலேயே ஷோரூமை திறக்கப் போவதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதுமட்டுமல்ல நிறுவனத்தின் லிஸ்ட்டில் வேறு சில நகரங்களும் இருப்பது தெரிய வந்திருக்கின்றது. இதன் வாயிலாக நிறுவனம் இந்தியாவின் லக்சூரி கார் பிரிவை வளைத்து போட வேண்டும் என்கிற எண்ணத்தில் இருக்கின்றது என்பது தெளிவாகத் தெரிகின்றது.

Lotus launches showroom and models in india

இதை உறுதிப்படுத்தும் விதமாக நிறுவனம் தன்னுடைய ஷோரூம் நெட்வொர்க்கை விரிவாக்கம் செய்யும் பணியிலும் களமிறங்கி இருக்கின்றது. மும்பை, டெல்லி மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் அது சர்வீஸ் மையங்களைத் திறந்து வைத்திருக்கின்றது. விரைவில் மேலும் சில நகரங்களிலும் சர்வீஸ் மையங்கள் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆகையால், கூடிய விரைவில் போர்ஷே (Porsche) மற்றும் ஃபெர்ராரி (Ferrari) போன்ற பெரும் நிறுவனங்களுக்கு சவால்விடுக்கும் அளவிற்கு லோட்டஸ் நிறுவனம் இந்திய சந்தையில் மிகப் பெரிய வளர்ச்சியைக் காணும் எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கேற்ப இரண்டு தரமான கார் மாடல்களை அது சமீபத்தில் நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. ஒன்று ஐசிஇ கார் மாடல் ஆகும். மற்றொன்று எலெக்ட்ரிக் கார் (Electric Car)-மாடல் ஆகும்

எமிரா (Emira) மற்றும் எமியா ஜிடி (Emeya GT) ஆகிய கார் மாடல்களையே அது காட்சிப்படுத்தியது. இதில் எமிரா-வே ஐசிஇ எஞ்சின் கொண்ட ஸ்போர்ட்ஸ் வகை கார் மாடல் ஆகும். எமியா, என்பது நான்கு டோர்கள் கொண்ட எலெக்ட்ரிக் ஜிடி வகை கார் மாடல்களாகும். இந்த கார்களையே அது சமீபத்தில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

லோட்டஸ் எமியா ஜிடி: நான்கு டோர்களுடன் மிகவும் கவர்ச்சியான தோற்றத்தில் இந்த கார் மாடல் காட்சியளிக்கின்றது. இதன் கவர்ச்சியான தோற்றத்திற்கு சிறப்பு சேர்க்கும் விதமாக பின் பக்கத்தில் டிஃப்யூசர் மற்றும் ஸ்பாய்ளர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன. இவையே எமியா ஜிடிக்கு அதிக கட்டுமஸ்தான தோற்றத்தை வழங்குகின்றன.

இதுதவிர, இந்த கூபே ஸ்டைல் கொண்டிருக்கும் இந்த கார் மாடலில் ஏகப்பட்ட சொகுசு அம்சங்களையும் லோட்டஸ் வழங்கி இருக்கின்றது. மிக முக்கியமாக 905 பிஎச்பி ஆற்றலை உருவாக்கக் கூடிய எலெக்ட்ரிக் மோட்டாரையே இந்த காரில் லோட்டஸ் வழங்கி இருக்கின்றது. தொடர்ந்து, அதிக வேகத்தில் சார்ஜாகும் திறனும் இந்த காருக்கு வழங்கப்பட்டு இருக்கின்றது.

வெறும் 14 நிமிடங்களில் 10 சதவீதத்தில் இருந்து இந்த கார் 80 சதவீத சார்ஜை பெறுகின்ற வசதியையே லோட்டஸ் வழங்கி இருக்கின்றது. ஆனால், ஃபாஸ்ட் சார்ஜிங் மையங்களினாலேயே இது சாத்தியம் ஆகும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 250 கிமீ ஆகும். ஓர் முழு சார்ஜில் இந்த காரில் 435 கிமீ முதல் 540 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

லோட்டஸ் எமிரா: இது ஓர் ஐசிஇ எஞ்சின் கொண்ட கார் மாடல் ஆகும். இந்த காருக்கு ரூ. 3.22 கோடி விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. 2.0 லிட்டர், 4 சிலிண்டர் எஞ்சினே இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது ஓர் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட எஞ்சின் ஆகும்.

இதுதவிர, 3.5 லிட்டர் 406 எச்பி திறனை வெளியேற்றக் கூடிய எஞ்சினும் இந்த கார் மாடலில் ஆப்ஷனாக வழங்கப்படுகின்றது. இது டொயோட்டாவால் தயாரிக்கப்பட்ட மோட்டார் ஆகும். இதுவும் அதிக ஆடம்பர அம்சங்களைத் தாங்கிய காராகக் காட்சியளிக்கின்றது. இதனால்தான் இதன் விலை ரூ. 3.22 கோடியாக இருக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: லோட்டஸ் நிறுவனத்தின் இந்திய விரிவாக்க பணிகள் மற்ற சொகுசு மற்றும் ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. நிறுவனம் இந்தியர்களை வளைத்துப் போடும் ஓர் முயற்சியாகவே ஷோரூமை திறத்தல் மற்றும் சர்வீஸ் மையங்களை அதிகப்படுத்துதல் உள்ளிட்டவற்றை மேற்கொண்டு வருகின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, January 24, 2025, 12:40 [IST]
English summary
Lotus expands into indian market with showroom and new high performance models
மேலும்... #lotus #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+