இவ்ளோ கம்மியான விலையில் எலெக்ட்ரிக் காரா! இந்தியாவையே திரும்பி பார்க்க வைக்க போகும் முன்னணி நிறுவனம்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ரெனால்ட் ட்ரைபர் (Renault Triber). இது மிகவும் விலை குறைவான 7 சீட்டர் எம்பிவி ரக கார்களில் (7 Seater MPV Cars) ஒன்றாகும். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ரெனால்ட் ட்ரைபர் காரின் ஆரம்ப விலை வெறும் 5.76 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது.

இது ரெனால்ட் இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். இந்த சூழலில், ரெனால்ட் ட்ரைபர் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல், கடந்த ஜூலை மாதம் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த புதிய மாடல் தற்போது தென் ஆப்ரிக்க சந்தையிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Renault Triber

தென் ஆப்ரிக்காவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாடல், இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுபவை ஆகும். இங்கிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்திய மதிப்பில் கணக்கிட்டால், தென் ஆப்ரிக்க சந்தையில் ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ஆரம்ப விலை 11.08 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து கார்வாலே தளம் செய்தி வெளியிட்டுள்ளது. தென் ஆப்ரிக்க சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 1.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 65 பிஹெச்பி பவர் மற்றும் 96 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

Renault Triber MPV

அதே சமயம் இந்த இன்ஜின் உடன், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மறுபக்கம் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் வழங்கப்பட்டு வரும் அதே வசதிகள்தான், அப்படியே தென் ஆப்ரிக்க சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள மாடலிலும் கொடுக்கப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் கார், தென் ஆப்ரிக்க சாலைகளை அலங்கரிக்க போவது நாம் அனைவரும் பெருமைப்பட வேண்டிய ஒரு விஷயம்தான் என்பதில் துளியும் சந்தேகம் கிடையாது. தென் ஆப்ரிக்க சந்தை மட்டுமல்லாது, இந்திய சந்தையிலும், ரெனால்ட் நிறுவனம் வரும் காலங்களில் பல்வேறு புதிய கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

இதில், ரெனால்ட் க்விட் இவி (Renault Kwid EV) எலெக்ட்ரிக் கார் மிகவும் முக்கியமான ஒன்றாகும். ரெனால்ட் க்விட் இ-டெக் (Renault Kwid E-Tech) என்ற பெயரில், பிரேசில் சந்தையில் தற்போது இந்த எலெக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து இந்திய சந்தையிலும் இந்த கார் விற்பனைக்கு களமிறக்கப்படவுள்ளது.

அனேகமாக இந்திய சந்தையில் ரெனால்ட் க்விட் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை வெறும் 6 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நடக்கும்பட்சத்தில், டாடா டியாகோ இவி (Tata Tiago EV) மற்றும் எம்ஜி கோமெட் இவி (MG Comet EV) ஆகிய எலெக்ட்ரிக் கார்களுக்கு எல்லாம் இது மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Sunday, October 12, 2025, 23:00 [IST]
English summary
Made in india renault triber mpv launched in south africa check all details here
மேலும்... #renault #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+