இந்தியாவோட மானத்தையே வாங்கீருச்சு! அந்த நிறுவன தயாரிப்பா! இதுல போனா கடவுளே நெனச்சாலும் காப்பாத்த முடியாது!
உலகம் முழுக்க தற்போது கார்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு, வாடிக்கையாளர்கள் மத்தியில், மிக வேகமாக அதிகரித்து வருகிறது. எனவே மோதல் சோதனைகளில் (Crash Tests) சிறப்பான பாதுகாப்பு ரேட்டிங் (Safety Ratings) பெற்ற கார்களை வாங்குவதற்குதான் வாடிக்கையாளர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
அதாவது கார் விற்பனையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு காரணியாக பாதுகாப்பு ரேட்டிங் தற்போது மாறியுள்ளது. எனவே கார்களை அதிகப்படியான பாதுகாப்பு வசதிகள் (Safety Features) உடன் தயாரித்து, மோதல் சோதனைகளில் சிறப்பான பாதுகாப்பு ரேட்டிங் பெற வேண்டும் என, கார் உற்பத்தி நிறுவனங்கள் விரும்புகின்றன.

ஆனால் ஒரு சில கார்கள் மட்டுமே மோதல் சோதனைகளில் சிறப்பான பாதுகாப்பு ரேட்டிங்கை பெறுகின்றன. எஞ்சிய கார்கள் மோதல் சோதனைகளில் தடுமாறி விடுகின்றன. இந்த வரிசையில் சுஸுகி பலேனோ கார் (Suzuki Baleno) தற்போது மோதல் சோதனைகளில் மிகவும் மோசமாக செயல்பட்டு, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட சுஸுகி பலேனோ கார், லத்தீன் என்சிஏபி (Latin NCAP) அமைப்பால், சமீபத்தில் மோதல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதில், 2 ஏர்பேக்குகளை கொண்ட சுஸுகி பலேனோ கார், வெறும் 1 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை மட்டும் பெற்று, அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மறுபக்கம் 6 ஏர்பேக்குகள் பொருத்தப்பட்ட சுஸுகி பலேனோ கார், 2 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளது. லத்தீன் என்சிஏபி அமைப்பால், மோதல் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட சுஸுகி பலேனோ கார், நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டது ஆகும். லத்தீன் அமெரிக்க சந்தைகளில் இந்த கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஆனால் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno) காருக்கு இந்த முடிவுகள் பொருந்தாது என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏனெனில் லத்தீன் அமெரிக்க நாடுகளில் விற்பனை செய்யப்படும் மாடலுக்கும், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மாடலுக்கும் பாதுகாப்பு வசதிகள் மற்றும் உபகரணங்களில் வேறுபாடுகள் இருக்கலாம்.
இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் மாருதி சுஸுகி பலேனோ கார், சமீபத்தில் பாரத் என்சிஏபி (Bharat NCAP) அமைப்பால், மோதல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அப்போது பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 4 ஸ்டார் ரேட்டிங்கையும், குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 3 ஸ்டார்களையும், மாருதி சுஸுகி பலேனோ பெற்றது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: லத்தீன் என்சிஏபி அமைப்பில் மோதல் சோதனைகளில் வேண்டுமானால், சுஸுகி பலேனோ தடுமாறியிருக்கலாம். ஆனால் பொதுவாக மாருதி சுஸுகி நிறுவன கார்களின் பாதுகாப்பு தற்போது பல மடங்கு உயர்ந்துள்ளது. இதற்கு மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire) மற்றும் மாருதி சுஸுகி விக்டோரிஸ் (Maruti Suzuki Victoris) போன்ற கார்களை உதாரணமாக எடுத்து கொள்ளலாம்.
மாருதி சுஸுகி டிசையர் மற்றும் மாருதி சுஸுகி விக்டோரிஸ் ஆகிய 2 கார்களும், பாரத் என்சிஏபி மற்றும் குளோபல் என்சிஏபி (Global NCAP) என 2 அமைப்புகளின் மோதல் சோதனைகளிலும், முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளன. இதன் காரணமாக மாருதி சுஸுகி நிறுவன கார்கள் மீது வாடிக்கையாளர்களுக்கு தற்போது நம்பகத்தன்மை பல மடங்கு அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications








