21 கி.மீ மைலேஜ், 8 லட்சம் விலை இவ்வளவு பேர் இந்த காரை வாங்கிட்டாங்களா? டாடாவிற்கு ஆப்பு ரெடி!
மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ கார் கடந்த ஜூன் மாதம் சிறப்பான விற்பனையை பெற்றுள்ளது. கடந்தாண்டு ஜூன் மாத விற்பனையை ஒப்பிடும் போது சிறிது சரிவு தான் என்றாலும், கடந்த ஜூன் மாத விற்பனை சிறப்பான எண்களாக இருப்பதாகவே பார்க்கப்படுகிறது. இந்த கார் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் குறைந்த விலையில் கம்பேக்ட் எஸ்யூவி கார்கள் வந்தால் மார்கெட்டில் நிச்சயம் அந்த கார்களுக்கான தேவை அதிகமாக இருக்கிறது. இப்படியாக இந்தியாவில் டாடா நெக்ஸான், ஹூண்டாய் வென்யூ, மாருதி பிரெஸ்ஸா, கியா சோனட் உள்ளிட்ட பல கார்கள் இந்த செக்மெண்டல் சிறப்பாக விற்பனையாகி வருகிறது.

இந்நிலையில் இதை எல்லாம் தூக்கி சாப்பிடும் வகையில் மஹிந்திரா நிறுவனம் கடந்தாண்டு 3எக்ஸ்ஓ என்ற காரை இந்திய மார்கெட்டில் அறிமுகப்படுத்தியது. இந்த கார் வெறும் ரூ7.99 லட்சம் என்ற விலையில் தான் விற்பனையாகி வருகிறது. இந்த கார் இந்திய மார்கெட்டில் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட வடிவமைப்பு, அம்சங்கள், மற்றும் வசதிகள் கொண்ட காராக அறிமுகமானது.
கடந்த ஜூன் மாதம் மட்டும் மொத்தம் 7,089 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு ஜூன் மாதம் 8500 கார்கள் விற்பனையாகியிருந்தது. இது 17 சதவீத விற்பனை சரிவு என்றாலும் கடந்தாண்டு ஜூன் மாதம் விற்பனைக்கு அறிமுகமாகி ஒரு மாத காலம் தான் ஆகியிருந்தததால் புக்கிங் செய்தவர்கள் பலர் இந்த காருக்காக காத்திருந்து தயாரிப்பு மொத்தத்தையும் வாங்கி தீர்த்தார்கள். ஆனால் கடந்த ஜூன் மாதம் ஆர்கானிக் விற்பனை நடந்துள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரை பொருத்தவரை 3 விதமான இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன. அதன்படி 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பயர்டு பெட்ரோல் இன்ஜின், 1.2 லிட்டர் டர்போ சார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின், 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆகிய ஆப்ஷன்கள் உள்ளன. இதில் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்களும் உள்ளன. இந்த கார் சிட்டி மற்றும் ஹைவே பயன்பாட்டிற்கு ஏற்றதாக உள்ளது.
இந்த காரின் மைலேஜை பொருத்தவரை பெட்ரோல் மேனுவல் கார் 19.34 கி.மீ மைலேஜையும், பெட்ரோல் ஆட்டோமெட்டிக் கார் 18.06 லிட்டர் மைலேஜையும், டீசல் மேனுவல் கார் 20.6 கிமீ மைலேஜையும், டீசல் ஆட்டோமெட்டிக் கார் 21.2 கி.மீ மைலேஜையும் வழங்குகிறது. இந்த காரில் 10.25 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டுயல் ஸோன் கிளைமேட் கண்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜிங், 360 டிகிரி கேமரா, வென்டிலேட்டட் முன்பக்க சீட்டுகள், உயரம் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய டிரைவர் சீட்டுகள் உள்ளன.

பாதுகாப்பு விஷயங்களை பொருத்தவரை இந்த கார் 5 ஸ்டார் ரேட்டிங்கை பாரத் என்கேப் சோதனையில் பெற்றுள்ளது. இதில் அடாஸ் 2 பாதுகாப்பு அம்சம், 4 வீல்களிலும் டிஸ்க் பிரேக், ஹில் ஹோல்டு, ஹில் டிசென்ட், டிராக்ஷன் கண்ட்ரோல் உள்ளிட்ட ஏகப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா நிறுவனத்தின் 3எக்ஸ்ஓ கார் தற்போது வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்று வருகிறது. இந்த கார் நிச்சயம் எதிர்காலத்தில் நல்ல விற்பனையை பெறும் என எதிர்பார்க்கலாம். இந்த காரை மக்கள் விரும்பி வாங்குவதற்கு பின்னால் உள்ள ரகசியம் என்ன? விரிவாக காணலாம் வாருங்கள்.


Click it and Unblock the Notifications









