4 லட்சம்பேர் இந்த காரை நம்பி வாங்கியிருக்காங்க! அப்படி என்னதாங்க இதுல இருக்குது?
மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ மற்றும் எக்ஸ்யூவி 300 ஆகிய கார்களை இதுவரை 4 லட்சம் பேர் வாங்கியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இ்நத சாதனையை வெறும் 7ஆண்டுகளில் அந்நிறுவமன் செய்துள்ளுது. அதுவும் 3எக்ஸ்ஓ என பெயர் மாறிய பிறகு அதிக அளவில் வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
மஹிந்திரா நிறுவனம் தனது எக்ஸ்யூவி 300 காரை அப்டேட் செய்து தற்போது எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ என்ற பெயரில் விற்பனவை செய்து வருகிறது. இந்நிறுவனம் கடந்த 7 ஆண்டுகளாக விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் கடந்த 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த காரை அப்டேட் செய்து மஹிந்திரா 3எக்ஸ்ஓ என்ற பெயரில் வெயிட்டது. அப்பொழுது இந்த காருக்கான வரவேற்பு அதிகரித்தது.

இந்நிலையில் கடந்த 7 ஆண்டுகளில் மஹிந்திரா எக்ஸ்யூவி 300 மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ ஆகிய இரண்டு கார்களையும் சேர்ந்து மொத்தம் 4 லட்சம் கார்கள் விற்பனையாகியுளு்ளதாக பதிவாகியுள்ளது. இதுவரை நடந்திலேயே கடந்த அக்டோபர் மாதம் தான் அதிகபட்சமாக 12,237 கார்கள் விற்பனையாகியுள்ளன.இது மட்டுமல்லஇந்நிறுவனம் இதுவரை இல்லாத அளவிற்கு கடந்த அக்டோர் மாதம் தான் மொத்தம் 71,624 கார்களை விற்பனை செய்துள்ளது.
இது மட்டுமல்ல இந்த நிதியாண்டில் மஹிந்திரா 3எக்ஸ்ஓ கார் மட்டும் மொத்தம் 71,624 கார்கள் விற்பவனையாகியுள்ளது. இது கடந்த நிதியாண்டில் விற்பனையான 54,726 என்ற எண்ணிக்கையை ஒப்பிடும் போது 84 சதவீதம் அதிகம் ஆகும். மஹிந்திரா நிறுவனத்தில் ஸ்கார்பியோ காருக்கு அடுத்ததாக இரண்டாவது அதிகம் விற்பவனையாகும் காராக இந்த கார் தான் இருக்கிறது. அந்நிறுவனத்தின் பொலிரோ, எக்ஸ்யூவி 700 ஆகிய கார்களை விட அதிக எண்ணிக்கையில் விற்பனையாகி வருகிறது.

மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்யூவி 300 காராக வைத்திருக்கும் போது நடந்த விற்பனவையை விட தற்போது அதிகம் விற்பனையாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. மொத்தம் நடந்த விற்பனையில் 4,06,569 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதில் 39 சதவீதமான கார்கள் எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காராக இது அப்டேட் செய்யப்பட்ட பிறகு நடந்த விற்பனையாகும்.
மஹிந்திரா நிறுவனம் இந்த காரை வெறும் ரூ7.28 லட்சம் என்ற விலையில் விற்பனைசெய்து வருவது அதிக விற்பனைக்கு மற்றுமொரு காரணமாக இருக்கிறது. இந்நிறுவனம் மொத்தம் 29 விதமான வேரியன்ட்களில் கார்களை விற்பனை செய்து வருகிறது. அதன்படி MX1, MX2, MX2 Pro, MX3, MX3 Pro, AX5, AX5 Luxury, AX7 and AX7 Luxury ஆகிய வேரயின்ட்கள் உள்ளன.

இந்த காகரில் உள்ள இன்ஜின் ஆப்ஷனை பொருத்தவரை 1.2 லிட்டர் டிசிஎம்பிஎஃப்ஐ டர்போ பெட்ரோல் இன்ஜின் 111 எச்பி பவரைவ வெளிப்படுத்தும் வைகியல் உருவாக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக 1.2 லிட்டர் டிஜிடிஐ டர்போ பெட்ரோல் இன்ஜின் 131 எச்பி பவரை வெளிப்படுத்துகிறது. இது போக 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷனும் இருக்கிறது. இந்த இன்ஜின்கள் மஏனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்களுடன் வருகிறது. இதன் மைலேஜ் வேரயன்டை பொரத்தது 17.96 முதல் 21.2 கி.மீ வரை மைலேஜை வழங்குகிறது.
இந்த கார் தான் ரூ12 லட்சத்திற்கு குறைவான விலையில் டால்பி அட்மாஸ் சவுண்ட் சிஸ்டத்தை கொண்ட காராக உருவாக்கப்பட்டுள்ளது. REVX A, AX5L, AX7 and AX7L ஆகிய வேரியன்ட்களில் இந்த சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக காரில் 6 ஸ்பீக்கர் சிஸ்டம் பொரத்தப்ப்டடுள்ளது. இது போக இந்தகாரில் பாதுகாப்பு அம்சங்களும் சிறப்பாக உள்ளுது.இந்த காரில் 6 ஏர்பேக்குகள், அனைத்து சீட்டுகளுக்கும் 3 பாயிண்ட் சீட் பெல்ட்கள், 360 டிகிரிகேமரா, பிளைண்ட் வியூ மானிட்டர், லெவல் 2 அடாஸ் தொழிற்நுட்பம் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. இந்த கார் பாரத் என்கேப் சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மஹிந்திரா நிறுவனம் நல்ல விற்பவனையை சமீபகாலமாக பெற்று வருகிறது. இதற்கு அந்நிறுவனத்தின் மாற்றியமைக்கப்பட்ட யுக்தி முக்கியமான காரணம் ஆகும். இ்நத கார்களில் எக்ஸயயூவி 3எக்ஸ்ஓ கார் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த கார் குறித்த உங்கள் கருத்தை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications









