இன்னும் 3 நாள் தான்... இந்தியாவே எதிர்பார்க்கும் மஹிந்திரா காரை புக்கிங் போட ரெடி ஆகுங்க!!
மஹிந்திரா (Mahindra) நிறுவனம் தனது புதிய 'எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ' (XUV 7XO) எஸ்யூவி காருக்கான முன்பதிவுகளை டிசம்பர் 15 அன்று மதியம் 12 மணிக்கு தொடங்குவதாக அறிவித்துள்ளது. தற்சமயம் விற்பனையில் உள்ள எக்ஸ்யூவி700 காரின் அப்கிரேட் வெர்சனாக 2026 ஜனவரி 5 அன்று அறிமுகம் செய்யப்பட உள்ள இந்த காரை, டிச.15 முதல் ரூ.21,000 முன்பணமாக செலுத்தி முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கூறியதுபோல், இது தற்போதுள்ள எக்ஸ்யூவி700 காரின் மேம்படுத்தப்பட்ட பதிப்பாகும். இந்த நிலையில், புக்கிங் (Booking) துவங்கப்பட உள்ள தேதி & நேரத்தை அறிவிப்பது தொடர்பாக தற்போது வெளியிடப்பட்டுள்ள டீசர், புதிய எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ காரின் முக்கிய வடிவமைப்பு அம்சங்களை வெளிப்படுத்தியுள்ளது.

அதன்படி பார்க்கும்போது, இரட்டை-பாட் புரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள், டைனமிக் டர்ன் இண்டிகேட்டர்கள், இரட்டை-டோன் அலாய் சக்கரங்கள் மற்றும் கருப்பு நிற ORVM-கள் ஆகியவற்றுடன், புதிய மெரூன் நிற சாயலிலும் இந்த கார் கிடைக்கும். முந்தைய டீசரில் எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ காரின் புதிய கிரில், திருத்தப்பட்ட LED DRL-கள் மற்றும் எக்ஸ்இவி 9எஸ் (XEV 9S) எலக்ட்ரிக் எஸ்யூவி காரில் இருந்து பெறப்பட்ட LED டெயில்லைட்கள் போன்ற அம்சங்கள் ஏற்கனவே தெரியவந்தன.
இவை மட்டுமின்றி, சமீபத்தில் மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்ட எக்ஸ்இவி 9எஸ் எலக்ட்ரிக் எஸ்யூவி காரின் பல மேம்பட்ட அம்சங்களும் இதில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2026 மஹிந்திரா எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ கார் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களுடன், மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும் என்பதை மஹிந்திரா உறுதிப்படுத்தியுள்ளது.

வேரியண்ட்கள் மற்றும் அவை ஒவ்வொன்றிலும் என்னென்ன மாதிரியான வசதிகள் வழங்கப்படும் என்பது குறித்த கூடுதல் விவரங்கள் காரின் முன்பதிவு தொடங்கும் போது அறிவிக்கப்படும். மஹிந்திரா எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ காரை முன்பதிவு செய்ய ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் ரூ.21,000 டோக்கன் தொகையைச் செலுத்த வேண்டும். முன்பதிவு செய்வதற்கு, ஆன்லைனில் அல்லது அருகிலுள்ள டீலர்ஷிப் ஷோரூமுக்கு நேரடியாகச் சென்று முன்பதிவு செய்யலாம்.
ஆஃப்லைனில் முன்பதிவு செய்ய, உங்களுக்கு அருகிலுள்ள மஹிந்திரா ஷோரூமை அணுகி விற்பனை ஆலோசகரிடம் பேசலாம். எரிபொருள் வகை (பெட்ரோல் அல்லது டீசல்) மற்றும் கியர்பாக்ஸ் (மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக்) அடிப்படையில் காரை முன்பதிவு செய்யலாம். டீலர்ஷிப் பணியாளர்கள் ஆவண வேலைகளில் உதவுவார்கள்.

ஆன்லைனில் முன்பதிவு செய்ய, மஹிந்திராவின் அதிகாரப்பூர்வ முன்பதிவு இணையதளத்திற்குச் சென்று 'SUVs' பிரிவில் எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ காரைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் விரும்பிய என்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் விருப்பங்களைத் தேர்ந்தெடுத்து முன்பதிவு செய்யலாம். காரின் வேரியண்ட்கள் குறித்த விவரங்கள் கார் வெளியீட்டிற்கு நெருக்கமாக அறிவிக்கப்படும் என்பதால், எந்த வேரியண்ட்டை வாங்குவது என்பதை அப்போதுதான் தீர்மானிக்க முடியும்.
உங்கள் நகரத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட மஹிந்திரா டீலர்ஷிப் ஷோரூமைத் தேர்ந்தெடுத்த பிறகு, மொபைல் எண் மற்றும் OTP அல்லது மின்னஞ்சல் முகவரி மூலம் உள்நுழைய வேண்டும். கடன் உதவி அல்லது எக்ஸ்சேஞ்ச் விவரங்கள் தேவைப்பட்டால் அவற்றை நிரப்பி, ரூ.21,000 தொகையைச் செலுத்தி முன்பதிவை உடனடியாக உறுதிப்படுத்தலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ ரூ.15 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அறிமுகமான பிறகு, இந்த எஸ்யூவி கார் டாடா சஃபாரி (Tata Safari), ஹூண்டாய் அல்காசர் (Hyundai Alcazar) மற்றும் டிசம்பர் 15 அன்று ஃபேஸ்லிஃப்ட் பெறும் எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் (MG Hector Plus) கார்கள் மட்டுமன்றி, சொந்த மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ என் (Scorpio-N), காரின் போட்டியையும் சமாளிக்க வேண்டியிருக்கும்.


Click it and Unblock the Notifications









