எத்தனை பேரது வாழ்க்கை மாற போகுதோ... மஹிந்திரா செய்த காரியத்தால் குவியும் பாராட்டுக்கள்!
மஹிந்திரா (Mahindra) நிறுவனம் தனது வர்த்தக வாகனங்களுக்கு (Commercial Vehicles) பண்டிகைக் காலச் சலுகைகளை அறிவித்துள்ளது. ஜிஎஸ்டி குறைக்கப்பட்டதன் பலனையும், அதோடு கூடுதல் பண்டிகை காலச் சலுகைகளையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதாக மஹிந்திரா தெரிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இங்கே இந்த தொகுப்பில் காணலாம்.
மஹிந்திராவின் இந்த புதியச் சலுகைகளின் மூலம் அதிகப்பட்சமாக ரூ.1.84 லட்சம் வரை சேமிக்கலாம். இதனால், பொலிரோ பிக்-அப் (Bolero Pick-up), மேக்ஸ் பிக்-அப் (Maxx Pick-up), ஜீட்டோ (Jeeto), சுப்ரோ (Supro) போன்ற மஹிந்திராவின் வர்த்தக வாகனங்கள் வாங்குபவர்களுக்கு மிகுந்த இலாபகரமானதாக இருக்கும்.

மேற்கூறப்பட்ட வாகனங்களை பொறுத்து அவற்றிற்கான சலுகைகளும், விலையும் மாறுபடுகின்றன. எனவே, துல்லியமான விலைத் தகவலுக்கு அருகில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட மஹிந்திரா டீலரை அணுகுமாறு மஹிந்திரா கேட்டுக் கொண்டுள்ளது. மேற்கூறப்பட்ட மஹிந்திரா கமர்ஷியல் வாகனங்கள் ஒவ்வொன்றிலும் எவ்வளவு பணத்தை மிச்சப்படுத்தலாம் என்பதை வாகனங்கள் வாரியாக இனி பார்க்கலாம்.
மஹிந்திரா பொலிரோ கேம்பர் (Camper), இப்போது ரூ.9.70 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் இருந்து கிடைக்கிறது. இதில் ரூ.1.28 லட்சம் வரையிலான சலுகைகள் அடங்கும். மஹிந்திரா அறிவித்துள்ள இந்தச் சலுகையில் ரூ.93,000 ஜிஎஸ்டி பலனும், ரூ.35,000 மதிப்பிலான பண்டிகை காலச் சலுகைகளும் உள்ளன.
இதற்கிடையில், மஹிந்திரா சுப்ரோ மாடலுக்கு மிக அதிகமான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த வாகனத்தை வாங்குபவர்களுக்கு மொத்தமாக ரூ.1.84 லட்சம் வரை சலுகைகள் கிடைக்கின்றன. இதில் ரூ.64,000 ஜிஎஸ்டி பலனாகவும், ரூ.1.20 லட்சம் பண்டிகைச் சலுகையாகவும் உள்ளது. மஹிந்திரா சுப்ரோவின் ஆரம்ப விலை ரூ.5.71 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும்.
பொலிரோ கேம்பர்: மஹிந்திராவின் பிக்-அப் டிரக் வாகனமான பொலிரோ கேம்பர் ஆனது பொலிரோ காரின் அடிப்படையிலானது ஆகும். 5- 6 பயணிகளுடன், பின்பக்கத்தில் பொருட்களையும் கொண்டு செல்ல உதவும் இந்த வாகனத்தின் புதிய ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ரூ.9.70 லட்சம் ஆகும். ஜிஎஸ்டி பலன் மூலம் ரூ.0.93 லட்சம் வரை விலை குறைக்கப்பட்டுள்ளது. இதனுடன், பண்டிகை காலச் சலுகைகள் ரூ.0.35 லட்சம் வரை என மொத்த சலுகைகள் ரூ.1.28 லட்சம் வரை ஆகும்.
பொலிரோ பிக்-அப்: இது மேலே கண்ட பொலிரோ கேம்பரை விட அதிக பொருட்களை கொண்டு செல்வதற்கான வாகனம் ஆகும். இதற்கேற்ப, பயணிகளை அழைத்து செல்லும் திறனை குறைவாக கொண்டுள்ள இந்த வாகனத்தின் புதிய ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.9.05 லட்சம். ஜிஎஸ்டி பலன் மூலம் ரூ.0.81 லட்சம் குறைப்பு. பண்டிகை காலச் சலுகைகள் ரூ.0.90 லட்சம் வரை. மொத்த சலுகைகள் ரூ.1.71 லட்சம் வரை.
மேக்ஸ் பிக்-அப்: இதன் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.9.02 லட்சம். ஜிஎஸ்டி பலன் மூலம் ரூ.0.94 லட்சம் குறைப்பு. பண்டிகைச் சலுகைகள் ரூ.0.80 லட்சம் வரை. மொத்த சலுகைகள் ரூ.1.74 லட்சம் வரை. இது இல்லாமல், மேக்ஸ் பிக்-அப் ஹெச்டி (HD) என்கிற வாகனமும் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது. அதன் புதிய ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.7.63 லட்சம். ஜிஎஸ்டி பலன் மூலம் ரூ.0.75 லட்சம் குறைப்பு. பண்டிகை காலச் சலுகைகள் ரூ.0.75 லட்சம் வரை. மொத்த சலுகைகள் ரூ.1.50 லட்சம் வரை.
ஜீட்டோ: மஹிந்திரா உற்பத்தி செய்வதிலேயே அளவில் சிறியதான கமர்ஷியல் வாகனம் இதுவாகும். ஜீட்டோவின் புதிய ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.7.34 லட்சம். ஜிஎஸ்டி பலன் மூலம் ரூ.0.78 லட்சம் குறைப்பு. பண்டிகை காலச் சலுகைகள் ரூ.1.05 லட்சம் வரை. மொத்த சலுகைகள் ரூ.1.83 லட்சம் வரை.
சுப்ரோ: ஜீட்டோவுக்கு அடுத்து மஹிந்திராவின் சிறிய அளவிலான கமர்ஷியல் வாகனமாக சுப்ரோ விளங்குகிறது. இதன் புதிய ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.5.71 லட்சம். ஜிஎஸ்டி பலன் மூலம் ரூ.0.64 லட்சம் குறைப்பு. பண்டிகைச் சலுகைகள் ரூ.1.20 லட்சம் வரை. மொத்த சலுகைகள் ரூ.1.84 லட்சம் வரை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கார்கள் விற்பனையில் மட்டுமின்றி, கமர்ஷியல் வாகனங்கள் விற்பனையிலும் மஹிந்திரா முன்னோடியாக விளங்குகிறது. இதனை மேலும் தக்க வைத்துள்ள இந்த புதிய விலை குறைப்பு மற்றும் பண்டிகை காலச் சலுகைகள் மஹிந்திராவுக்கு மிகவும் உதவியாக இருக்கும். மேலும், இதன் மூலமாக பலருக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications








