ஏழை மக்கள் எல்லாம் கார் வாங்கவே கூடாதுனு நினைக்குறாங்களா என்ன? ஏப்ரலில் பெரிய இடியை இறக்க போகும் மஹிந்திரா!

மஹிந்திரா (Mahindra), இந்தியாவின் முன்னணி கார் நிறுவனம் என்பதை நான் கூற வேண்டியது இருக்காது என நினைகிறேன். ஏனெனில், அந்த அளவிற்கு மஹிந்திரா கார்கள் ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கில் விற்பனை செய்யப்படுகின்றன. இருப்பினும், மற்ற கார் நிறுவனங்களை போன்றது தானே மஹிந்திராவும். ஆதலால், ஒவ்வொரு குறிப்பிட்ட கால இடைவெளியிலும் கார்களின் விலைகளை மஹிந்திரா அதிகரிப்பதில் ஆச்சிரியம் ஒன்றுமில்லை. அந்த வரிசையில், விரைவில் மீண்டும் மஹிந்திரா கார்களின் விலைகள் அதிகரிக்கப்பட உள்ளன. வருகிற ஏப்ரல் மாதம் முதல் கொண்டுவரப்பட உள்ள இந்த விலை அதிகரிப்பை மஹிந்திரா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தற்போது அறிவித்துள்ளது.

ஏப்ரல் மாதத்தில் ஒவ்வொரு புதிய நிதியாண்டு துவங்கும்போதும் கார்களின் விலைகள் அதிகரிக்கப்படுவது வாடிக்கையான ஒன்றாகும். முந்தைய நிதியாண்டில் எவ்வளவு வருவாய் கிடைத்தது? அதில் இலாபம் என்ன? செலவு என்ன? என்பன போன்றவற்றை எல்லாம் மார்ச் 31ஆம் தேதிக்குள் கணக்கிட்டு கார்களின் விலைகளை அதிகரிப்பதா? அல்லது வேண்டாமா? என்கிற முடிவுக்கு கார் நிறுவனங்கள் வருகின்றன.

mahindra announces price hike

இதில் நிறைய நேரங்களில், எதிர்கால வணிகத்தை கருத்தில் கொண்டு கார்களின் விலைகளை வேறு வழியில்லாமல் கார் கம்பெனிகள் அதிகரிக்கின்றன. இதனாலேயே இந்த மார்ச் மாதம் துவங்கியதில் இருந்து கார்களின் விலை அதிகரிப்பு குறித்த அறிவிப்புகளை மாருதி சுஸுகி (Maruti Suzuki), ஹூண்டாய் (Hyundai) போன்ற முன்னணி கார் நிறுவனங்களில் இருந்து பார்க்க முடிகிறது.

இந்த வரிசையில், மஹிந்திராவும் தனது கார்களின் விலைகளை வருகிற ஏப்ரல் மாதம் முதல் அதிகரிக்க உள்ளதாக தற்போது அறிவித்துள்ளது. தனது அனைத்து விதமான கார்களின் விலைகளையும் வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 3% வரையில் அதிகரிக்க உள்ளதாக மஹிந்திரா அறிவித்துள்ளது. அதாவது, மஹிந்திரா கார்களின் விலைகள் அதிகப்பட்சமாக 3% வரையில் உயர்த்தப்பட உள்ளன.

mahindra announces price hike

மஹிந்திரா கார்கள் மட்டுமின்றி, மஹிந்திராவில் உற்பத்தி செய்யப்படும் கமர்ஷியல் வாகனங்களின் விலைகளும் 3% வரையில் உயர்த்தப்பட உள்ளதாக மஹிந்திரா அறிவித்துள்ளது. வழக்கம்போல், இந்த விலை அதிகரிப்புக்கும் வாகனங்களை உற்பத்தி செய்வதில் தொடர்ந்து அதிகரித்துவரும் செலவுகளையும், போக்குவரத்து செலவீனங்களையும் காரணங்களாக மஹிந்திரா சுட்டிக்காட்டி உள்ளது.

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பே 1945ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட மஹிந்திரா க்ரூப் இந்தியாவை தாண்டி பல வெளிநாடுகளிலும் தனது நெட்வொர்க்கை விரிவுப்படுத்தி உள்ளது. ஆட்டோமொபைல் மட்டுமின்றி, பல்வேறு துறைகளில் மஹிந்திரா க்ரூப்பின் நிறுவனங்கள் செயல்படுகின்றன. தற்சமயம், 100க்கும் அதிகமான நாடுகளில் மஹிந்திரா க்ரூப்பின் நிறுவனங்கள் செயல்படுகின்றன.

mahindra announces price hike

இந்த நிறுவனங்களில் ஒட்டுமொத்தமாக சுமார் 2.6 லட்சத்திற்கும் அதிகமான பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். இந்த அளவிற்கு உலகின் பிரம்மாண்டமான நிறுவனங்களுள் ஒன்றாக உருவெடுத்து நிற்கும் மஹிந்திரா க்ரூப் கிராம புறங்களின் வளர்ச்சியை மேம்படுத்துவதிலும், நகர்புற வாழ்க்கை தரத்தை ஒழுங்குப்படுத்துவதிலும் தெளிவான சிந்தனைகள் மற்றும் திட்டங்கள் உடன் செயல்பட்டு வருகிறது.

கார்கள் விற்பனையை பொறுத்தவரையில், டாடா மோட்டார்ஸ் மற்றும் ஹூண்டாய் நிறுவனங்களுக்கு அடுத்து இந்தியாவின் 3வது மிக பெரும் கார் நிறுவனமாக மஹிந்திரா விளங்குகிறது. கடந்த பிப்ரவரி மாத விற்பனையில் ஹூண்டாயையும் முந்தி 2வது இடத்தை பிடித்து மஹிந்திரா ஆச்சிரியப்படுத்தி இருந்தது. இந்த நிலையில்தான், விரைவில் மஹிந்திரா கார்களின் விலைகள் அதிகரிக்கப்பட உள்ளன.

mahindra announces price hike

மஹிந்திரா & மஹிந்திராவின் ஆட்டோமொபைல் பிரிவில் இருந்து சமீபத்தில் பிஇ 6 (BE 6) மற்றும் எக்ஸ்.இ.வி 9இ (XEV 9e) என இரு எலக்ட்ரிக் கார்கள் (Electric Cars) அறிமுகம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்த எலக்ட்ரிக் கார்களின் முன்பதிவுகள் துவங்கப்பட்ட நிலையில், இந்த மார்ச் மாதத்தில் புக் செய்த கஸ்டமர்களுக்கு இந்த எலக்ட்ரிக் கார்களை டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கார்கள் விற்பனையில் மட்டுமின்றி, கமர்ஷியல் வாகனங்கள் விற்பனையிலும் மஹிந்திரா நிறுவனம் முன்னிலையில் உள்ளது. ஆதலால், மஹிந்திராவின் இந்த விலை அதிகரிப்பானது ஒட்டுமொத்த மஹிந்திரா வாகனங்களின் விற்பனையை பாதிக்கக்கூடும் என கருதப்படுகிறது. ஆதலால், இதனை சமாளிக்க விரைவில் மஹிந்திரா ஏதேனும் அவசர கால நடவடிக்கையை எடுக்கும் என எதிர்பார்க்கிறோம்.

FAQs
மஹிந்திராவில் இருந்து அடுத்ததாக எதிர்பார்க்கப்படும் கார் அறிமுகங்கள் என்னென்ன?

மஹிந்திரா எக்ஸ்.இ.வி 7இ மற்றும் தார்.இ என்கிற எலக்ட்ரிக் கார்களின் அறிமுகங்கள்.

மஹிந்திரா க்ரூப் எந்தெந்த துறைகளில் முன்னிலையில் உள்ளது?

ஆட்டோமொபைல் வாகனங்கள், விவசாய உபகரணங்கள், தகவல்தொடர்பு தொழிற்நுட்பங்கள் மற்றும் நிதி சேவைகள்.

உலகின் மிக பெரும் டிராக்டர் உற்பத்தி நிறுவனம் எது?

மஹிந்திரா & மஹிந்திரா.

DriveSpark Automotive

More from DriveSpark

Article Published On: Friday, March 21, 2025, 22:57 [IST]
English summary
Mahindra announces price hike across all vehicles from april 2025
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X