மஹிந்திரா நிறுவனம் வாழ்க-னு எல்லாரும் பாட போறாங்க.. முன்னணி கார் மாடலின் விலையை குறைச்சா வேற என்ன செய்வாங்க!

மஹிந்திரா (Mahindra) நிறுவனம் அதன் முன்னணி கார் மாடல் ஒன்றின் விலையை குறைத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எக்ஸ்யூவி 700 (Mahindra XUV700) கார் மாடலின் விலையையே அது குறைத்திருக்கின்றது. முன்னணி நிறுவனங்கள் பல தங்களின் வாகனங்களின் விலையை உயர்த்த இருப்பதாக அறிவித்துக் கொண்டிருக்கின்றன. மாருதி சுஸுகி (Maruti Suzuki), கியா (Kia), டாடா மோட்டார்ஸ் (Tata Motors) மற்றும் ஹூண்டாய் (Hyundai) உள்ளிட்ட நிறுவனங்கள் விரைவில் அதன் கார்களின் விலையை உயர்த்த இருக்கின்றது.

அதாவது, ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இவர்கள் புதிதாக உயர்த்தப்பட்ட விலையிலேயே தங்களின் வாகனங்களை விற்பனைச் செய்ய இருக்கின்றன. இந்த மாதிரியான சூழலிலேயே மற்ற நிறுவனங்களிடம் இருந்து தனித்து நிற்கும் விதமாக மஹிந்திரா நிறுவனம் அதன் பெஸ்ட் செல்லிங் கார் மாடலின் விலையைக் குறைத்திருக்கின்றது.

Mahindra xuv700 pic

ஆமாங்க, நிறுவனத்தின் புகழ்பெற்ற தயாரிப்புகளில் ஒன்றாக எக்ஸ்யூவி 700 உள்ளது. இது ஓர் எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும். இதன் விலையில் ரூ. 75 ஆயிரம் வரை குறைக்கப்பட்டு இருக்கின்றது. மஹிந்திரா நிறுவனம் சில தினங்களுக்கு முன்னரே இந்த கார் மாடலில் ஓர் சிறப்பு பதிப்பு மாடலை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

எக்ஸ்யூவி 700 இபோனி (XUV 700 Ebony Edition) எனும் எடிசனையே அது விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்த நிலையிலேயே வழக்கமான பதிப்பின் விலையில் ரூ. 75 ஆயிரம் விலை குறைப்பை அது செய்திருக்கின்றது. ஏஎக்ஸ்7எல் (AX7L) மற்றும் ஏஎக்ஸ்7 (AX7) ஆகிய வேரியண்டுகளில் உள்ள தேர்வுகளின் விலையையே மஹிந்திரா குறைத்திருக்கின்றது.

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் ஏஎக்ஸ்7எல் பெட்ரோல் ஏடி 7எஸ் (AX7L Petrol AT 7S), ஏஎக்ஸ்7எல் டீசல் எம்டி 7எஸ் (AX7L Diesel MT 7S) மற்றும் ஏஎக்ஸ்7எல் டீசல் ஏடி 7எஸ் (AX7L Diesel AT 7S) ஆகிய வேரியண்டுகளின் விலையிலேயே ரூ. 75 ஆயிரம் குறைக்கப்பட்டு இருக்கின்றது.

இதேபோல், ஏஎக்ஸ்7 பெட்ரோல் ஏடி 7எஸ் (AX7 Petrol AT 7S) மற்றும் ஏஎக்ஸ்7 டீசல் ஏடி 7எஸ் (AX7 Diesel AT 7S) மாடலின் விலையில் ரூ. 45 ஆயிரம் வரை குறைக்கப்பட்டு இருக்கின்றது. இந்த வேரியண்டுகளின் விலை மட்டுமே குறைக்கப்பட்டு இருக்கின்றது.

மற்ற வேரியண்டுகளின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. சமீபத்தில் விற்பனைக்கு வந்த எக்ஸ்யூவி 700 இபோனி எடிசனின் விற்பனையை ஊக்குவிக்கும் பொருட்டே இந்த வேரியண்டுகளின் விலையை மஹிந்திரா நிறுவனம் குறைத்திருக்கின்றது. இதைத்தாண்டி இந்த திடீர் விலைக் குறைப்பிற்கு வேறு காரணம் இல்லை என்பதும் தெரிய வந்திருக்கின்றது.

இன்னும் புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் மஹிந்திரா நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த எக்ஸ்யூவி 700 இபோனி எடிசன், எக்ஸ்யூவி 700 கார் மாடலின் உயர் நிலை தேர்வான ஏஎக்ஸ்7 மற்றும் ஏஎக்ஸ்7எல் ஆகிய வேரியண்டுகளில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கின்றன. இதன் விலையும், வழக்கமான பதிப்பின் விலையும் இணையானதாக இருப்பதாக நிறுவனம் உணர்ந்திருக்கும் என நம்பப்படுகின்றது.

இதன் விளைவாகவே வழக்கமான பதிப்பில் விற்பனைக்குக் கிடைக்கும் ஏஎக்ஸ்7 மற்றும் ஏஎக்ஸ்7எல் வேரியண்டுகளின் விலையை மஹிந்திரா நிறுவனம் குறைத்திருக்கின்றது. புதிய சிறப்பு பதிப்பு மஹிந்திரா எக்ஸ்யூவி 700 இபோனி எடிசன் இந்தியாவில் ரூ. 19.64 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: வழக்கமான பதிப்பைக் காட்டிலும் அதிக அலங்கரிப்பு மற்றும் பிரீமியம் அம்சங்களைத் தாங்கியதாகவே எக்ஸ்யூவி 700 இபோனி எடிசன் தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. வழக்கமான பதிப்பிற்குக் கிடைத்துக் கொண்டிருப்பதைப் போலவே இதற்கும் இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 19, 2025, 19:37 [IST]
English summary
Mahindra announces price reductions on xuv700 suv up to rs 75000 cut on select variants
மேலும்... #mahindra #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+