மஹிந்திரா எலக்ட்ரிக் காரின் விலையை பெருசு பெருசா எதிர்பார்த்தோம்.. எல்லாருக்கும் ஷாக் கொடுத்த முழு விலை விபரம்

மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தில் இருந்து மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய எலக்ட்ரிக் கார்கள் (Electric Cars) பிஇ 6 (BE 6) மற்றும் எக்ஸ்.இ.வி 9இ (XEV 9e) ஆகும். கடந்த 2024 டிசம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த எலக்ட்ரிக் கார்களுக்கான முன்பதிவுகள் வருகிற பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு துவங்கப்பட உள்ள நிலையில், இந்த மஹிந்திரா எலக்ட்ரிக் கார்களின் விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களுக்கு மெல்ல மெல்ல வரவேற்பு அதிகரித்து வருகிறது. இதனை பயன்படுத்திக் கொள்ளும் விதமாக மஹிந்திரா நிறுவனமும் அதன் புது, புது எலக்ட்ரிக் கார்களை வரிசையாக அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. அந்த வரிசையில் அறிமுகம் செய்யப்பட்டவையே பிஇ 6 மற்றும் எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் கார்கள் ஆகும்.

mahindra be6 and xev 9e

மஹிந்திராவில் இருந்து ஏற்கனவே எக்ஸ்யூவி400 எலக்ட்ரிக் கார் விற்பனை செய்யப்பட்டு வந்தாலும், பிஇ 6 மற்றும் எக்ஸ்இவி 9இ ஆனது முற்றிலும் வேறுப்பட்ட எலக்ட்ரிக் கார்களாக விளங்குகின்றன. அதாவது, அந்த அளவிற்கு இந்த புதிய கார்கள் தோற்றத்தில் வித்தியாசமானவைகளாகவும், ஸ்பெஷல் ஆனவைகளாகவும் காட்சியளிக்கின்றன.

கடந்த டிசம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட போது பிஇ 6 மற்றும் எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் கார்களின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே அறிவிக்கப்பட்டன. பிஇ 6 எலக்ட்ரிக் காரின் ஆரம்ப விலையாக ரூ.18.90 லட்சமும், எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை ரூ.21.90 லட்சமும் நிர்ணயிக்கப்பட்டன.

mahindra be6 and xev 9e

இந்த நிலையில், இந்த எலக்ட்ரிக் கார்களின் மற்ற வேரியண்ட்களின் விலைகளும் புக்கிங் துவங்கப்படுவதற்கு முன்பாக அறிவிக்கப்பட்டுள்ளன. பேக் ஒன், பேக் ஒன் அபோவ், பேக் டூ, பேக் த்ரீ செலக்ட் மற்றும் பேக் த்ரீ என 5 விதமான வேரியண்ட்களில் 59kWh மற்றும் 79kWh என 2 விதமான பேட்டரி ஆப்ஷன்களில் மஹிந்திரா பிஇ 6 எலக்ட்ரிக் கார் விற்பனை செய்யப்பட உள்ளது.

அறிமுகத்தின் போது அறிவிக்கப்பட்ட ரூ.18.90 லட்சம் விலையானது பிஇ 6 எலக்ட்ரிக் காரின் பேக் ஒன் வேரியண்ட்டின் விலை ஆகும். இந்த காரின் மற்ற 4 வேரியண்ட்களின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் முறையே ரூ.20.50 லட்சம், ரூ.21.90 லட்சம், ரூ.24.50 லட்சம் மற்றும் ரூ.26.90 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளன.

mahindra be6 and xev 9e

மறுப்பக்கம், எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் காரின் ஆரம்ப விலையான ரூ.21.90 லட்சத்தில் பேக் ஒன் வேரியண்ட் கிடைக்கும். பேக் ஒன் அபோவ் என்கிற வேரியண்ட் இந்த காருக்கு கிடையாது. மற்ற 3 வேரியண்ட்களின் விலைகள் முறையே ரூ.24.90 லட்சம், ரூ.27.90 லட்சம், ரூ.30.50 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளன. 79kWh பேட்டரி ஆனது இந்த இரு கார்களிலும் டாப் வேரியண்ட்டான பேக் த்ரீ-இல் மட்டுமே கிடைக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா பிஇ 6 எலக்ட்ரிக் காரின் விலை ஆனது நாம் எதிர்பார்த்த ஒன்று தான். ஆனால், எக்ஸ்இவி 9இ ஆனது நாம் எதிர்பார்த்ததை விட குறைவானதாக உள்ளது. டிசம்பரில் அறிமுகத்தின்போது இந்த காரின் விலையாக ரூ.21.90 லட்சமாக அறிவிக்கப்பட்ட போதே சற்று ஆச்சிரியமாக இருந்தது. தற்போது மற்ற வேரியண்ட்களின் விலைகளும் நம்மை ஆச்சிரியமூட்டுகின்றன.

More from DriveSpark

Article Published On: Thursday, February 6, 2025, 11:40 [IST]
English summary
Mahindra be 6 and xev 9e electric cars full price details announced
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X