இருக்குறது போதாதுன்னு புதிய வேரியன்டையும் கொண்டு வந்துட்டாங்க! இது செம மேட்டரா இருக்குதே!

மஹிந்திரா நிறுவனம் தனது புதிய எலெக்ட்ரிக் கார்களான பிஇ6 மற்றும் எக்ஸ்இவி 9ம ஆகிய கார்களின் புதிய வேரியன்டை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. தற்போது இந்த கார்கள் சிறப்பாக விற்பனையாகி வரும் நிலையில் இந்தியா மார்கெட்டின் தேவையை அறிந்து இந்த வேரியன்ட்களை அறிமுகப்படுத்தும் என அதற்கான ஆவணங்கள் வெளியானது மூலம் தெரியவந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் எலெக்ட்ரிக் கார் உலகையே புரட்டி போட்டது என்றால் மஹிந்திராவின் பிஇ6 மற்றும் எக்ஸ்இவி 9இ ஆகிய வாகனங்கள் தான். ஃப்யூச்சரிஸ்டிக்கான டிசைன் மொழியில் உருவாக்கப்பட்ட இந்த வாகனம் பல விதங்களில் மறக்களை ஈர்த்துள்ளது. இந்நிலையில் இந்த காரில் புதிய வேரியன்டை உருவாக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்கான ஆவணங்கள் தற்போது கசந்துள்ளன.

Mahindra BE 6 and XEV 9e

அதன்படி இந்நிறுவனம் தனது பிஇ 6 மற்றம் எக்ஸ்இவி 9இ ஆகிய கார்களில் பேக் 2 பி79 என்ற வேரியன்டை அறிமுகப்படுத்த திட்டமிடருப்பதாக தெரிகிறது. சமீபத்தில் தான் இந்நிறுவனம் தனது பேக் 2 மாடலை அறிமுகப்படுத்திய நிலையில் அந்த வேரியன்டை விரிவு படுத்தும் நோக்கில் இந்த வேரியன்ட் கொண்டு வரப்பட்டுள்ளது. விற்பனையில் உள்ள பேக் 3 யில் பேக் 3 செலக்ட் என்ற வேரியன்ட் கார் அதிகம் விற்பனையாகி வருகிறது.

இந்த இரண்டு ஆப்ஷன் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற நிலையில் பேக் 2விலும் இரண்டு பேட்டரி ஆப்ஷனை அறிமுகப்படுத்த இந்த புதிய வேரியன்டை அந்நிறுவனம் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதல் பேக் 2வில் 59 kWh பேட்டரி பேக் மட்டுமே இருந்தது. ஆனால் வாடிக்கையாளர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப பேக் 2வில் 79kWh ஆப்ஷன் தற்போது வழங்கப்பட்டுள்ளது.

Mahindra BE 6 and XEV 9e

சரியாக சொல்ல வேண்டும் என்றால் இந்த ஆவணங்களின்படி எக்ஸ்இவி 9இ மற்றம் பிஇ 6 ஆகிய கார்களில் பேக் 2, பேக் 3, பேக் 3 செலக்ட் ஆகிய வேரியன்ட்களில் பி59 மற்றும் பி79 ஆகிய 2 பேட்டரி ஆப்ஷன்களும், பிஇ6 பேக் ஒன் காரில் பி59 என ஒரே வேரியன்ட் என மொசத்தம் 7 விதமான வேரியன்ட்களில் இந்த இரண்டு கார்களும் விற்பனைக்கு வருகிறது.

இதில் 79kWh பேட்டரி உள்ள கார் 656 கிமீ ரேஞ்சை வழங்குகிறது. அதே போல 59 பேட்டரி பேக் கொண்ட கார் 542 கி.மீ ரேஞ்சையும் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காரின் வடிவமைப்பு ஃப்யூச்சரிஸ்டிக்காக இருப்பதால் பலர் இந்த காரை விரும்பி வாங்கி வருகின்றனர். இந்த காரின் சிறப்பான லுக்கே இந்த காருக்கு நல்ல வரவேற்ப்பை வழங்கியுள்ளது. இதனால் பலர் இந்த காரை விரும்பி வாங்கி வருகின்றனர்.

Mahindra BE 6 and XEV 9e

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த கார்களில் புதிய வேரியன்ட் வருவது நிச்சயம் வாடிக்கையாளர்களுக்கு நல்ல விஷயம் தான். இந்த கார் நிச்சயம் மார்கெட்டில் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த உங்கள் கருத்தை கமெண்டை காணலாம் வாருங்கள்.

More from DriveSpark

Article Published On: Friday, July 25, 2025, 22:45 [IST]
English summary
Mahindra be 6 and xev 9e new variants homologated details
மேலும்... #mahindra #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X