இனி சிஎம் பேரனே நெனச்சாலும் வாங்க முடியாது! வெறும் 2 நிமிடங்களில் விற்று தீர்ந்த காரின் டெலிவரி தொடங்கியது!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மஹிந்திர பிஇ 6 (Mahindra BE 6). இது எலெக்ட்ரிக் எஸ்யூவி (Electric SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இந்த காரின் லிமிடெட் எடிசன் (Limited Edition) மாடல் ஒன்றை, மஹிந்திரா நிறுவனம் கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்தது.
மஹிந்திரா பிஇ 6 பேட்மேன் எடிசன் (Batman Edition) என்ற பெயரில், இந்த லிமிடெட் எடிசன் விற்பனைக்கு களமிறக்கப்பட்டது. முதலில் 300 பிஇ 6 பேட்மேன் எடிசன் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும் என மஹிந்திரா நிறுவனம் அறிவித்தது. பின்னர் இந்த எண்ணிக்கை 999 ஆக அதிகரிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து மஹிந்திரா பிஇ 6 பேட்மேன் எடிசன் மாடலுக்கு முன்பதிவுகளை ஏற்கும் பணிகள், கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி காலை தொடங்கியது. முன்பதிவு தொடங்கப்பட்ட 2 நிமிடங்கள் மற்றும் 15 வினாடிகளிலேயே, 999 மஹிந்திரா பிஇ 6 பேட்மேன் எடிசன் கார்களுக்கு விற்று தீர்ந்து விட்டன.
இதை தொடர்ந்து மஹிந்திரா பிஇ 6 பேட்மேன் எடிசன் கார்களின் டெலிவரி (Delivery) பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக மும்பை (Mumbai) நகரில் தற்போது நடத்தப்பட்ட மெகா டெலிவரி நிகழ்ச்சி ஒன்றில், 16 பிஇ பேட்மேன் எடிசன் கார்களை ஒரே நேரத்தில், மஹிந்திரா நிறுவனம் டெலிவரி செய்துள்ளது.

மஹிந்திரா பிஇ 6 பேட்மேன் எடிசனின் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) 27.79 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது லிமிடெட் எடிசன் மாடல் என்பதால், சாலையில் தனித்து தெரியும். எனவே சற்று விலை அதிகம் என்ற போதிலும், வாடிக்கையாளர்கள் போட்டி போட்டு கொண்டு, மஹிந்திரா பிஇ 6 பேட்மேன் எடிசனை வாங்கியுள்ளனர்.
மஹிந்திரா பிஇ 6 எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் பேக் த்ரீ வேரியண்ட் (Pack Three Variant) அடிப்படையில், பேட்மேன் எடிசன் உருவாக்கப்பட்டுள்ளது. இதில், பாதுகாப்பு வசதிகளை (Safety Features) பொறுத்தவரையில், லெவல் 2 அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது.
இதுதவிர 7 ஏர்பேக்குகள், 4 சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், ஆட்டோ பார்க் அஸிஸ்ட், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் மற்றும் 360 டிகிரி கேமரா போன்றவையும், மஹிந்திரா பிஇ 6 பேட்மேன் எடிசன் மாடலின் மிகவும் முக்கியமான பாதுகாப்பு வசதிகளாக உள்ளன.
மற்ற வசதிகளை பொறுத்தவரையில், 12.3 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ட்யூயல் வயர்லெஸ் செல்போன் சார்ஜர்கள், பனரோமிக் க்ளாஸ் ரூஃப், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, ரியர் வெண்ட்கள் உடன் ட்யூயல் ஸோன் ஆட்டோ ஏசி, 16 ஸ்பீக்கர் ஹார்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம் மற்றும் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய முன் பக்க இருக்கைகள் போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும்.
செயல்திறனை பொறுத்தவரையில், 79 kWh பேட்டரி ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இதனை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 682 கிலோ மீட்டர்கள் பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் சிறப்பான ஒரு டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) ஆக கருதப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் டாடா கர்வ் இவி (Tata Curvv EV), ஹூண்டாய் க்ரெட்டா எலெக்ட்ரிக் (Hyundai Creta Electric) மற்றும் எம்ஜி இஸட்எஸ் இவி (MG ZS EV) ஆகிய எலெக்ட்ரிக் கார்களுக்கு எல்லாம், மஹிந்திரா பிஇ 6 மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications








