உலகத்துலயே முதல் கார்! மாஸ் காட்டிய மஹிந்திரா! கோடி ரூபாய் கொட்டி கொடுத்தாலும் 300 பேருக்குதான் கிடைக்கும்!
இந்தியாவை சேர்ந்த மஹிந்திரா (Mahindra) நிறுவனம் ஒவ்வொரு ஆண்டு சுதந்திர தினத்தன்றும் (Independence Day), புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்வது வழக்கம். இந்த வரிசையில் நடப்பு 2025ம் ஆண்டு சுதந்திர தினத்தன்றும் மஹிந்திரா நிறுவனம் பல்வேறு புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்யவுள்ளது.
அவை என்னென்ன? என்பதை இந்த செய்தியின் இறுதியில் பார்க்கலாம். ஆனால் இவற்றுக்கெல்லாம் முன்னதாக இன்றே (ஆகஸ்ட் 14), மஹிந்திரா நிறுவனத்தின் சுதந்திர தின கொண்டாட்டங்கள் களை கட்ட தொடங்கியுள்ளன. ஆம், மஹிந்திரா நிறுவனம் சற்று நேரத்திற்கு முன்பாக, மஹிந்திரா பிஇ 6 பேட்மேன் எடிசனை (Mahindra BE 6 Batman Edition) அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

மஹிந்திரா பிஇ 6 காரானது, எலெக்ட்ரிக் எஸ்யூவி (Electric SUV) ரகத்தை சேர்ந்தது ஆகும். இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவி ரக காரின் பேட்மேன் எடிசனைதான் மஹிந்திரா நிறுவனம் தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.
மஹிந்திரா பிஇ 6 எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் டாப் வேரியண்ட்-ஆக உள்ள பேக் த்ரீ 79 kwh வேரியண்ட் (Pack Three 79 kWh Variant) அடிப்படையில், பேட்மேன் எடிசன் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே 79 kWh பேட்டரி தொகுப்பை இது கொண்டிருக்கும். இதன் ஸ்டாண்டர்டு வேரியண்ட்டின் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) 683 கிலோ மீட்டர்கள் ஆகும்.

எனவே பேட்மேன் எடிசனின் டிரைவிங் ரேஞ்சும் 683 கிலோ மீட்டர்களாகதான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பேட்மேன் எடிசன் என்பதால், கருப்பு நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் பேட்மேன் லோகோ மற்றும் ஸ்டிக்கர்களும் கொடுக்கப்பட்டுள்ளன. எனவே பேட்மேன் ரசிகர்களுக்கு இது விருந்து படைப்பதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பேட்மேனை மனதில் வைத்து உருவாக்கப்பட்டு, வர்த்தக ரீதியில் விற்பனைக்கு கிடைக்கும் உலகின் முதல் எஸ்யூவி இதுதான் என மஹிந்திரா நிறுவனம் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட பெருமை வாய்ந்த மஹிந்திரா பிஇ 6 பேட்மேன் எடிசனின் விலை 27.79 லட்ச ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். மஹிந்திரா நிறுவனம் ஒட்டுமொத்தமாக வெறும் 300 பிஇ 6 பேட்மேன் எடிசன்களை மட்டுமே தயாரிக்கவுள்ளது. எனவே இந்த லிமிடெட் எடிசன் மாடல் வெறும் 300 பேருக்கு மட்டுமே கிடைக்கும். மஹிந்திரா பிஇ 6 பேட்மேன் எடிசனுக்கு முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகள் வரும் ஆகஸ்ட் 23ம் தேதி தொடங்கப்படவுள்ளன.
300 பேருக்கு மட்டுமே கிடைக்கும் என்பதால், முன்பதிவு தொடங்கப்பட்ட சில நிமிடங்களிலேயே, மஹிந்திரா பிஇ6 பேட்மேன் எடிசன் அனைத்தும் 'புக்கிங்' செய்யப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, மஹிந்திரா பிஇ6 பேட்மேன் எடிசனை டெலிவரி (Delivery) செய்யும் பணிகள் வரும் செப்டம்பர் 20ம் தேதி தொடங்கப்படவுள்ளன.
அன்றைய நாள் சர்வதேச பேட்மேன் தினம் (International Batman Day) என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். பிஇ 6 பேட்மேன் எடிசனை தொடர்ந்து, சுதந்திர தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக மஹிந்திரா நிறுவனம் நாளை (ஆகஸ்ட் 15), 4 கான்செப்ட் எஸ்யூவி கார்களை அறிமுகம் செய்யவுள்ளது.
அவை விஷன் எஸ் (Vision S), விஷன் எக்ஸ் (Vision X), விஷன் டி (Vision T) மற்றும் விஷன் எஸ்எக்ஸ்டி (Vision SXT) ஆகியவை ஆகும். இந்த 4 கான்செப்ட் எஸ்யூவி கார்கள் மட்டுமல்லாது, ஒரு புதிய காம்பேக்ட் எஸ்யூவி காரையும் மஹிந்திரா நிறுவனம் நாளை அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்தியாவின் பேட்மேனுக்கு அதிக எண்ணிக்கையிலான ரசிகர்கள் உள்ளனர். எனவே மஹிந்திரா நிறுவனம் தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ள பிஇ 6 பேட்மேன் எடிசன், வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கருதுகிறது.


Click it and Unblock the Notifications








