வெறும் இரண்டே நிமிடங்களில் விற்று தீர்ந்த மஹிந்திரா கார்! இனி மூட்டை மூட்டையா பணத்தை கொட்டினாலும் கிடைக்காது!

பொதுவாக ஒவ்வொரு ஆண்டு இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டும் மஹிந்திரா (Mahindra) நிறுவனம் புதிய கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யும். அத்துடன் கான்செப்ட் கார்களையும் பொது பார்வைக்கு கொண்டு வரும். இதன்படி சமீபத்தில் கொண்டாடப்பட்ட சுதந்திர தினத்தை முன்னிட்டு, மஹிந்திரா நிறுவனம் ஏராளமான கான்செப்ட் கார்களை பொது பார்வைக்கு காட்சிப்படுத்தியது.

அத்துடன் சுதந்திர தினத்திற்கு முந்தைய நாள் (ஆகஸ்ட் 14), பிஇ 6 எலெக்ட்ரிக் எஸ்யூவி (Mahindra BE 6 Electric SUV) காரின், லிமிடெட் எடிசன் மாடல் ஒன்றையும் மஹிந்திரா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. மஹிந்திரா பிஇ 6 பேட்மேன் எடிசன் (Batman Edition) என்ற பெயரில் இந்த லிமிடெட் எடிசன் விற்பனைக்கு களமிறக்கப்பட்டது.

Mahindra BE 6 Batman Edition

விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட நாளில், வெறும் 300 பிஇ 6 பேட்மேன் எடிசன் கார்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படும் என மஹிந்திரா நிறுவனம் அறிவித்திருந்தது. ஆனால் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த காரணத்தால், பிஇ 6 பேட்மேன் எடிசன் காரின் உற்பத்தி எண்ணிக்கையை மஹிந்திரா நிறுவனம் உயர்த்தி அறிவித்தது.

இதன்படி ஒட்டுமொத்தமாக 999 மஹிந்திரா பிஇ 6 பேட்மேன் எடிசன் கார்கள் உற்பத்தி செய்யப்படவுள்ளன. அதாவது வெறும் 999 வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே மஹிந்திரா பிஇ 6 பேட்மேன் எடிசன் கிடைக்கும். இதன் காரணமாக முன்பதிவுகள் (Bookings) தொடங்கப்பட்ட ஒரு சில நிமிடங்களிலேயே மஹிந்திரா பிஇ 6 பேட்மேன் எடிசன் விற்று தீர்ந்து விடும் என டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கூறியிருந்தது.

Mahindra BE 6 Batman Edition Launch Event

நாங்கள் என்ன கூறினோமோ, அது தற்போது அப்படியே நடந்துள்ளது. ஆம், வெறும் 135 வினாடிகளில், அனைத்து மஹிந்திரா பிஇ 6 பேட்மேன் எடிசன் கார்களும் விற்று தீர்ந்து விட்டன. பிஇ 6 பேட்மேன் எடிசனுக்கு முன்பதிவுகளை ஏற்கும் பணிகள், ஆகஸ்ட் 23ம் தேதி (நேற்று) காலை 11 மணிக்கு தொடங்கும் என மஹிந்திரா நிறுவனம் அறிவித்திருந்தது.

இதன்படி நேற்று காலை சரியாக 11 மணிக்கு முன்பதிவுகள் தொடங்கப்பட்டன. முன்பதிவுகள் தொடங்கப்பட்ட 135 வினாடிகளில், அதாவது 2 நிமிடங்கள் மற்றும் 15 வினாடிகளிலேயே, 999 மஹிந்திரா பிஇ 6 பேட்மேன் எடிசன் கார்களும் புக்கிங் செய்யப்பட்டு விட்டன. இந்த லக்கி கஸ்டமர்கள் அனைவருக்கும், கூடிய விரைவில் மஹிந்திரா பிஇ 6 பேட்மேன் எடிசன் கார்கள் டெலிவரி (Delivery) செய்யப்படும்.

சரியாக சொல்வதென்றால், மஹிந்திரா பிஇ 6 பேட்மேன் எடிசனின் டெலிவரி பணிகள், சர்வதேச பேட்மேன் தினமான (International Batman Day) செப்டம்பர் 20ம் தேதி தொடங்கப்படவுள்ளன. எனவே கூடிய விரைவில் மஹிந்திரா பிஇ 6 பேட்மேன் எடிசன் கார்களை நாம் சாலையில் பார்க்க போகிறோம்.

மஹிந்திரா பிஇ 6 பேட்மேன் எடிசனின் விலை 27.79 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். விலை உயர்ந்த ஒன்றாக இருந்தாலும் கூட, பேட்மேனை மனதில் வைத்து உருவாக்கி, வர்த்தக ரீதியில் விற்பனைக்கு களமிறக்கப்பட்டுள்ள உலகின் முதல் எஸ்யூவி கார் இதுதான். எனவேதான் விலையை பொருட்படுத்தாமல், 999 மஹிந்திரா பிஇ 6 பேட்மேன் எடிசன் கார்களையும், 135 வினாடிகளிலேயே வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பொதுவாக லிமிடெட் எடிசன் கார்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே உற்பத்தி செய்யப்படும். எனவே லிமிடெட் எடிசன் கார்கள், சாலையில் தனித்து தெரியும். மஹிந்திரா பிஇ 6 பேட்மேன் எடிசனுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதற்கு இது மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாகும். இதுதவிர இந்தியாவில் பேட்மேனுக்கு ரசிகர்கள் அதிகம் என்பது நாங்கள் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை.

More from DriveSpark

Article Published On: Sunday, August 24, 2025, 20:19 [IST]
English summary
Mahindra be 6 batman edition sold out in just 2 minutes and 15 seconds check all details here
மேலும்... #mahindra #electric car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+