ஷோரூமில் இருந்து டெலிவிரி எடுத்ததும் முதலாவதாக செய்தது இதைதான்! மஹிந்திரா கம்பெனியே பார்த்து அசந்து போய்டும்!

மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் பிஇ 6 (BE 6) மற்றும் எக்ஸ்.இ.வி 9இ (XEV 9e) என்கிற இரு எலக்ட்ரிக் கார்கள் (Electric Cars) அறிமுகம் செய்யப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இவை இரண்டிற்கும் கடந்த பிப்ரவரி மாதத்தில் முன்பதிவுகள் துவங்கப்பட்டு, புக் செய்தவர்களுக்கு மார்ச் மாத மத்தியில் இருந்து கார்கள் டெலிவிரி செய்யப்பட்டு வருகிறது. தற்போதைக்கு இந்த எலக்ட்ரிக் கார்களின் டாப் வேரியண்ட்களை புக் செய்தவர்களுக்கு மட்டுமே டெலிவிரி செய்யப்பட்டு வருவதால், சாலைக்கு வந்துள்ள விலைமிக்க பிஇ 6 மற்றும் எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் கார்கள் பார்ப்போரை வெகுவாக கவர்ந்துள்ளன.

ஏனெனில், அந்த அளவிற்கு இந்த புதிய மஹிந்திரா எலக்ட்ரிக் கார்களின் தோற்றம் மக்கள் பலரை வெகு கவர்ந்துள்ளது. டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தில் பணியாற்றிய போது நெக்ஸான் (Nexon), பஞ்ச் (Punch) உள்ளிட்ட வெற்றிக்கரமான கார்களை வடிவமைத்த கார் டிசைனர் பிரதாப் போஸ் (Pratap Bose) மஹிந்திராவுக்கு மாறிய பின்னர் பிஇ6 மற்றும் எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் கார்கள் மூலம் மீண்டும் தான் யார் என்பதை காட்டிவிட்டார்.

mahindra be 6 electric car modification

இந்த இரண்டில் விலைமிக்க காரான எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் காரை தான் அதிக எண்ணிக்கையிலான கஸ்டமர்கள் வாங்கி வருகின்றனர் என்று புள்ளி விபரங்கள் தெரிவித்தாலும், பிஇ 6 எலக்ட்ரிக் காரின் தோற்றத்தையும் நாம் குறைத்து மதிப்பிட முடியாது. அந்த அளவிற்கு, மிகவும் அட்வான்ஸான தோற்றத்தை கொண்டதாக இருப்பினும் இங்கு ஒரு மஹிந்திரா பிஇ 6 எலக்ட்ரிக் கார் பிரத்யேகமான மஞ்சள் நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

பிஇ 6 எலக்ட்ரிக் காருக்கு மஞ்சள் நிற கலர் ஆப்ஷன் எதையும் மஹிந்திரா வழங்குவது இல்லை. இந்த தொகுப்பில் நாம் பார்க்கும் நபர் காரை டெலிவிரி பெற்று தனியாக இவ்வாறான நிறத்திற்கு மாற்றியுள்ளார். இதன்பின் இதை பார்த்து மேலும் சில பிஇ 6 எலக்ட்ரிக் கார் ஓனர்கள் மஞ்சள் நிறத்திற்கு காரை மாற்றக்கூடும். இருப்பினும், இதுதான் இந்தியாவில் முதல் மஞ்சள் நிற பிஇ 6 கார் ஆகும்.

mahindra be 6 electric car modification

கார் முழுக்க முழுக்க மஞ்சள் நிறம் கிடையாது. காரின் முன்பக்கத்தில் கிரில் மற்றும் பொனெட் பகுதிகள் கருப்பு நிறத்தில் உள்ளன. அதேபோல், கார் விண்டோ லைன்கள், பின்புறத்தை காட்டும் வெளிப்பக்க கண்ணாடிகள், கதவுகளின் வெளிப்பக்கத்தில் வழங்கப்படும் பிளாஸ்டிக் பேனல்கள் மற்றும் பின்பக்க ஸ்பாய்லர் (Spoiler) உள்ளிட்டவையும் கருப்பு நிறத்தில் உள்ளன.

இந்த கருப்பு நிறங்களை காருக்கு இவர்கள் வழங்கவில்லை; மஞ்சள் நிறம் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. ஏனெனில், இந்த பிஇ 6 கார் வாங்கப்பட்ட போதே கருப்பு நிறத்தில் இருந்தது. இவ்வாறு மஞ்சள்- கருப்பு என இரு நிறங்கள் கலந்த கலவையாக இருப்பதினாலேயே இந்த குறிப்பிட்ட மஹிந்திரா பிஇ 6 எலக்ட்ரிக் கார் ஸ்பெஷலானதாக காட்சியளிக்கிறது.

காரை முழுவதுமாக மஞ்சள் நிறத்திற்கு மட்டும் மாற்றி இருந்தாலும், பார்ப்பதற்கு இந்த அளவிற்கு லுக்காக இருந்திருக்காது. இந்த மஞ்சள் நிற மஹிந்திரா பிஇ 6 எலக்ட்ரிக் கார் தொடர்பாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவிற்கு நெட்டிசன்கள் பலரும் லைக் மற்றும் கமெண்ட் செய்துள்ளனர். மஹிந்திரா நிறுவனத்தின் கார் டிசைனர் பிரதாப் போஸ் அவர்களும் இதுகுறித்த இன்ஸ்டா பதிவுக்கு தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

மஹிந்திரா பிஇ 6 எலக்ட்ரிக் காரை இவ்வாறு மாற்றியுள்ள உரிமையாளர் ஒரு கார் ஆர்வலர் ஆவார். கேரளாவின் கோட்டாயத்தில் வசிக்கும் இவர் 'கோஸ்ட் 6 கேரேஜ்' (Ghost 6 Garage) என்கிற பெயரில் கார் கேரேஜ் ஒன்றை வைத்துள்ளார். இவரது கேரேஜில் மஞ்சள் நிறத்திலான டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner) கார் ஒன்றும் உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஞ்சள் மற்றும் கருப்பு நிறங்கள் கலந்த இந்த பெயிண்ட் ஆனது மஹிந்திரா பிஇ 6 எலக்ட்ரிக் காருக்கு மிகவும் எடுப்பாக உள்ளது. இந்த காரின் ஸ்டைலை இது இன்னும் தூக்கிக் காட்டுகிறது. இவ்வாறான ட்யூயல்-டோன் பெயிண்ட் ஆப்ஷன்களை மஹிந்திரா நிறுவனமே வழங்கலாம். ஒவ்வொரு காரையும் உருவாக்க நீண்ட நேரமாகிவிடும் என மஹிந்திரா தயங்குகிறதா என தெரியவில்லை.

More from DriveSpark

Article Published On: Tuesday, June 10, 2025, 5:00 [IST]
English summary
Mahindra be 6 electric car in yellow black dual tone colour in kerala
மேலும்... #car modification #electric car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+