சாலையில் எல்லாரும் ஒரு நிமிஷம் நின்னு பார்த்துட்டு போனாங்க! மஹிந்திரா பெருசா எதுக்கோ அடி போடுது

மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தில் சமீபத்தில் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிமுகம் செய்யப்பட்ட எலக்ட்ரிக் கார் (Electric Car), பிஇ 6 (BE 6) ஆகும். ஏற்கனவே விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு விட்ட இந்த எலக்ட்ரிக் காரை மஹிந்திரா நிறுவனம் மீண்டும் சோதனை ஓட்டத்தில் உட்படுத்தி உள்ளது. சமீபத்தில் விற்பனைக்கு வந்த எலக்ட்ரிக் கார் மீண்டும் சாலையில் ஓட்டி பார்க்கப்பட்டு சோதனை செய்யப்பட்டு இருப்பது உங்களில் சிலருக்கு விசித்திரமானதாக தோன்றலாம். வாருங்கள் இதனை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கடந்த சில வருடங்களாக கார்கள் விற்பனையில் கவனிக்கத்தக்க முன்னேற்றம் கண்டுவரும் மஹிந்திரா நிறுவனம் முழு மூச்சில் எலக்ட்ரிக் கார் வணிகத்தில் ஈடுப்பட தயாராகி வருகிறது. எதிர்காலத்தில் அறிமுகம் செய்ய உள்ள எலக்ட்ரிக் கார்களை சில வருடங்களுக்கு முன்னரே அறிவித்துவிட்ட மஹிந்திரா நிறுவனம், கடந்த 2024 டிசம்பரில் அதன் புதிய இரு எலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்தது.

mahindra be6 electric car spotted

பிஇ 6 மற்றும் எக்ஸ்.இ.வி 9இ என்பன அந்த இரு புதிய எலக்ட்ரிக் கார்கள் ஆகும். இதில் குறிப்பாக, விலை குறைவான பிஇ 6 எலக்ட்ரிக் கார் மீது மக்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது. விலை குறைவான எலக்ட்ரிக் கார் என கூறப்பட்டாலும், பிஇ 6 காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.18.90 லட்சத்தில் இருந்து ரூ.26.90 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டு உள்ளன.

மஹிந்திரா பிஇ 6 எலக்ட்ரிக் காரின் விலைமிக்க டாப் வேரியண்ட்களின் டெலிவிரிகள் இந்த மார்ச் மாத மத்தியில் இருந்தும், விலை குறைவான வேரியண்ட்களை புக் செய்த கஸ்டமர்களுக்கு டெலிவிரி கொடுக்கும் பணிகள் அதன்பின்பும் துவங்கப்பட உள்ளது. இந்த நிலையில்தான், பிஇ 6 எலக்ட்ரிக் கார் ஒன்று முழுவதுமாக மறைப்புகளால் மறைக்கப்பட்ட நிலையில் பொது சாலையில் ஓட்டிப் பார்க்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது.

பொதுவாக, விற்பனைக்கு கொண்டுவரப்படும் கார்கள் இவ்வாறு சோதனை செய்யப்படுவது வழக்கமான ஒன்றே. ஆனால், ஏற்கனவே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுவிட்ட கார் மீண்டும் சோதனை ஓட்டத்தில் உட்படுத்தப்பட்டு இருப்பது விசித்திரமாக உள்ளது. அதிலிலும், இந்த கார் முழுவதுமாக மறைக்கப்பட்ட நிலையில் ஓட்டிப் பார்க்கப்பட்டு சோதனை செய்யப்பட்டு இருப்பது பல்வேறு விதமான கேள்விகளை எழுப்புகிறது.

mahindra be6 electric car spotted

ஏனெனில், பிஇ 6 எலக்ட்ரிக் காரின் தோற்றம் நம் எல்லாருக்குமே தெரியும். மார்ச் மாதத்தில் இருந்து சாலைகளில் தென்பட உள்ள காரை மஹிந்திரா இவ்வாறு முழுவதுமாக மறைப்புகளால் மறைக்கப்பட்ட நிலையில் சோதனை செய்திருப்பதற்கு, வரும்காலத்தில் இந்த எலக்ட்ரிக் காரில் கொண்டுவரப்படும் புதிய தொழிற்நுட்ப வசதிகள் அல்லது மென்பொருள் அப்டேட்கள் காரணமாக இருக்கலாம்.

அல்லது, இந்தியாவின் பல்வேறு விதமான கால சுழல்களில் பிஇ 6 எலக்ட்ரிக் கார் எவ்வாறு செயல்படுகிறது என்பதை அறிவதற்காக இந்த சோதனை ஓட்டத்தை மஹிந்திரா நிகழ்த்தி இருக்கலாம். இதன் மூலம் கிடைக்கும் தரவுகளின் வாயிலாக பிஇ 6 எலக்ட்ரிக் காரில் பின்னர் காலத்தில் மஹிந்திரா நிறுவனம் மாற்றங்களை செய்யலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய அப்டேட்களுக்கான சோதனை ஓட்டமாக இருந்தாலும் சரி, அல்லது நிஜ உலக தரவுகளை பெறுவதற்கான சோதனை ஓட்டமாக இருந்தாலும் சரி இரண்டிற்குமே காரை மறைப்புகளால் மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. இருப்பினும், சோதனை காரை மஹிந்திரா மறைத்துள்ளது என்றால், விரைவில் புதிய பிஇ 6 எலக்ட்ரிக் கார் அப்டேட் செய்யப்பட்டு அறிமுகம் செய்யப்படலாம்.

More from DriveSpark

Article Published On: Saturday, March 1, 2025, 5:00 [IST]
English summary
Mahindra be 6 electric car spotted ahead of deliveries start
மேலும்... #mahindra #electric car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+