எல்லா இடத்துலயும் ஐயா கில்லி... மஹிந்திராவால் உருவாக்க முடியாத வாகனம் என்ன இருக்கு சொல்லுங்க!
மஹிந்திரா (Mahindra), இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனம். குறிப்பாக, கடந்த சில மாதங்களாக கார்கள் விற்பனையில் மஹிந்திராவின் வளர்ச்சி அபரிதமானதாக இருந்து வருகிறது. இதற்கேற்ப சமீப காலமாக மஹிந்திராவில் இருந்து அறிமுகம் செய்யப்படும் கார்கள் மக்கள் மத்தியில் மிகுந்த கவனத்தை பெற்றுள்ளன. அந்த வகையில், மஹிந்திராவின் லேட்டஸ்ட் அறிமுகமான பிஇ 6 எலக்ட்ரிக் கார் (BE 6 Electric Car) ஆனது மார்க்கெட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த பிஇ 6 எலக்ட்ரிக் காருக்கும், மஹிந்திராவில் இருந்து ஏற்கனவே மிகுந்த பரபரப்புக்கு மத்தியில் விற்பனை செய்யப்பட்டு கொண்டிருக்கும் தார் ராக்ஸ் (Thar ROXX) வாகனத்திற்கும் இடையேயான ஒற்றுமை & வேற்றுமைகளை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
வெளிப்பக்க தோற்றம்: பிஇ 6 ஆனது மிகவும் அட்வான்ஸான தோற்றத்தை கொண்டுள்ளது. சிறந்த ஏரோடைனாமிக்ஸுக்காக காரின் முன்பக்கத்தில் பொனெட் உடன் காற்று துளைகள் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளன. மேலும், 7-வடிவ எல்இடி டிஆர்எல்-கள் மற்றும் புதிய மஹிந்திரா லோகோ ஆனது காருக்கு புதுமையான வடிவத்தை கொடுக்கிறது. இந்த மாடர்ன் மஹிந்திரா எலக்ட்ரிக் காரில் 20-இன்ச் ஏரோ-ஆப்டிமைஸ்டு அலாய் சக்கரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மறுப்பக்கம், தார் ராக்ஸ் ஆனது முற்றிலும் வேறுப்பட்ட பழமையான தோற்றத்தை கொண்ட ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனம் ஆகும். இதற்கேற்ப இந்த வாகனத்தின் முன்பக்கத்தில் வட்ட வடிவில் ஹெட்லைட்கள், பெரிய அளவிலான கிரில் பகுதி, ஃபாக் விளக்குகள் உடன் ஸ்போர்டியான பம்பர் பகுதி உள்ளிட்டவையும் வழங்கப்படுகின்றன.
உட்புற வசதிகள்: உட்புற வசதிகளை பார்ப்பதற்கு முன்னர், இந்த மஹிந்திரா வாகனங்கள் இரண்டும் பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் முழு 5 நட்சத்திரங்களை பெற்றுள்ளதை கூறியே ஆக வேண்டும். பிஇ 6 எலக்ட்ரிக் கார் ஆனது வெளிப்புறத்திற்கு ஏற்ப உட்புறத்தையும் நன்கு மாடர்ன் தரத்தில் கொண்டதாக உள்ளது.

இந்த எலக்ட்ரிக் காரின் டேஸ்போர்டில் இன்ஃபோடெயின்மெண்ட் மற்றும் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டருக்கு என 12.3 இன்ச்சில் இரு திரைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், தார் ராக்ஸ் வாகனத்தில் இந்த திரைகள் சற்று சிறியதாக 10.25 இன்ச்சில் வழங்கப்படுகின்றன. அதேபோல், பிஇ6 எலக்ட்ரிக் காரில் 7 ஏர்பேக்குகளும், தார் ராக்ஸில் 6 ஏர்பேக்குகளும் வழங்கப்படுகின்றன.
பவர்டிரெயின்: மஹிந்திராவின் இன்க்லோ பிளாட்ஃபார்ம் (INGLO Platform)-இல் உருவாக்கப்பட்ட பிஇ 6 எலக்ட்ரிக் கார் 59kWh மற்றும் 79kWh என 2 விதமான பேட்டரி ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், தார் ராக்ஸ் வாகனமும் 2.0 லிட்டர் எம் ஸ்டாலியன் டர்போ பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் எம்ஹாவ்க் டர்போ டீசல் என 2 விதமான என்ஜின் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது.

விலை: பிஇ 6 எலக்ட்ரிக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.18.90 லட்சத்தில் இருந்து ரூ.26.90 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டு உள்ளன. மறுப்பக்கம், தார் ராக்ஸ் ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனத்தின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.12.99 லட்சத்தில் இருந்து ரூ.23.09 லட்சம் வரையில் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா மோட்டார்ஸ் மற்றும் எம்ஜி மோட்டார் நிறுவனங்களை தொடர்ந்து, மஹிந்திராவும் எலக்ட்ரிக் கார்கள் விஷயத்தில் தீவிரம் காட்டி வருகிறது. இதற்கு, பிஇ 6 எலக்ட்ரிக் கார் ஆனது மஹிந்திராவின் கீ பிளேயராக இருக்கும் என எதிர்பார்க்கிறோம். அதேநேரம், கிளாசிக்கான வாகனங்களை எதிர்பார்ப்போர்க்கு மஹிந்திராவின் தார் ராக்ஸ் ஆனது எப்போதும் போல் சிறப்பான விற்பனை மாடலாக விளங்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை.


Click it and Unblock the Notifications









