வெறும் 999 பேர் தான் இந்த காரை வாங்க முடியும்! புக்கிங் எப்ப ஸ்டார்ட் ஆகுது தெரியுமா?
மஹிந்திரா நிறுவனம் தனது பிஇ 6 ஃபார்முலா இ எடிசன் காரை வெளியிட்ட நிலையில் இந்த காருக்கான புக்கிங் வரும் ஜனவரி மாதம் 14ம் தேதி முதல் புக்கிங்துவங்குகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
மஹிந்திரா நிறுவனம் தனது பிஇ6 ஸ்பெஷல் எடிசன் கார்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இதன் ஸ்பெஷல் எடிசன் கார்கள் மக்கள் மத்தியில் பிரபலமாகிவருகிறது. இந்நிறுவனம் பேட்மேன் எடிசன் காரை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இது லிமிடெட் எடிசன் காராக அறிமுகமானது. இதற்கு நல்ல வரவேற்ப்பு கிடைத்தது.

இந்நிலையில் தற்போது ஃபார்முலா இ எடிசனை வெளியிட்டுள்ளது.இந்த கார் சமீபத்தில் பெங்களூருவில் நடந்த ஸ்கிரீம் எலெக்ட்ரிக் என்ற நிகழ்வில் வெளியிடப்பட்டது.இந்த காரும் ஒரு லிமிடெட் எடிசன் காராக வருகிறது. இந்த கார் வெறும் 999 கார்கள் மட்டுமே தயாரிக்கப்போவதாக அறிவித்துள்ளது.
இந்த காரின்விலை விபரங்களும் வெளியிகியள்ளுது. இதில் எஃப்இ2 வேரயன்ட் ரூ23.69 லட்சம் என்ற விலையிலும் எஃப் இ3 வாகனம் 24.49 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த காரின் வடிவமைப்பில் ஃபார்முலா இ காரின் வடிவமைப்பின் சில அம்சங்களை கொண்டுள்ளது. இந்த லிமிடெட் எடிசன் வாகனத்தை வாங்கும் சில முக்கிய தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காரை ஆன்லைனில் மட்டுமே புக் செய்ய முடியும். வரும் டிசம்பர் மாதம் மத்தியில் இந்த காருக்கான ஆன்லைன் பதிவு துவங்கும். இதில் காரை முன்பதிவு செய்ய முடியாது. இந்த கார் தேவைப்படுபவர்கள் ADD To CarT மூலம் கார்ட்டில் ஆட் செய்து கொள்ள முடியும். அப்பொழது அவர்களுக்க ஏற்ற கான்ஃபிகரேஷனில் இந்த காரை மாற்றியமைத்து அதை ஆட் செய்ய முடியும். இப்படியாக கார்ட்டில் ஆட் செய்யப்பட்ட கார்களுக்கான புக்கிங் வரும் ஜனவரி 14ம் தேதி துவங்கும் வெறும் 999 பேர் மட்டுமே இந்த காரை பெற முடியும்.
இந்த காரின் வெளிப்புறத்தில் ஃபார்முலா இ காரின் இன்ஸ்பிரேஷன் டிசைன் இடம்ப ெறும். முக்கியமாக ஸ்போர்ட்டியான பாடி கிராஃபிக்ஸ், ஆர்20 அலாய் வீல்கள், ஃபிக்ஸட் கிளாஸ் ரூஃப், எல்இடி டிஆர்எல், வட்ட வடிவிலான எல்இடி புரொஜெக்டர் லைட்டுகள் இடம் பெறும்மெக்கானிக்கல மாற்றம் எதுவும் இருக்காது அதே 210 kW எலெக்டர்ிக் மோட்டார் 282 எச்பி பவர் மற்றும் 380 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் வகையில் வழங்கப்பட்டிருக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பிஇ6 காருக்கு நல்ல வரவேற்புகிடைத்த நிலையில் இந்த காரை மக்கள் மக்கள் விரும்பி வாங்கி வருகின்றனர். இதில் லிமிடெட்ட எடிசன் என்பது இந்த கார் விரும்பிகளுக்கு ஒரு வரப்பிரசாதம் தான். இந்த கார் புக்கிங் துவங்கிய ஒரு சில நிமிடங்களிலேயே புக்கிங் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications









