கம்மி விலையில் இப்படி ஒரு காரா? நாடே இந்த காரை தான் எதிர்பார்த்து! சேல்ஸ் பிச்சுக்கப்போகுது!

இந்தியாவில் மஹிந்திரா நிறுவனம் பிஇ6 என்ற எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை விற்பனை செய்து வருகிறது.இந்த காரின் பேக் 1 வேரியன்ட் தற்போது டீலர்களுக்கு வந்துள்ளது. விரைவில் இந்த காரின் டெலிவரி துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் மக்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்க்கப்படும் வாகனமாக இருக்கிறது. இந்நிலையில் இந்த வாகனத்தின் பேஸ் வேரயன்டின் விற்பனை விரைவில் துவங்குகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

எலெக்ட்ரிக் 4 வீலர் செக்மெண்டில் மஹிந்திராவின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வரகிறது. தற்போது பிஇ6 மற்றமு் எக்ஸ்இவி 9இ ஆகிய கார்களைத அந்நிறுவனம் சிறப்பாக விற்பனை செய்துவருகிறது. இந்த இரண்டு கார்களும் செம ஹிட்டான காரகளாக உள்ளன. இந்நிலையில் இந்நிறுவனம் தொடர்ந்து தனது காரை அப்டேட் செய்து வருகிறது. அதில் புதிய வெர்ஷன்களை கொண்டு வருகிறது.

Mahindra BE 6 Pack 1 in Dealership

இந்த கார் அறிமுகமாகும் போது பேக் 1, பேக் 1 அபவ், பேக் 2, பேக் 3 செலக்ட், பேக் 3 ஆகிய வேரயின்ட்களை அறிமுகப்படுத்தியது. இதன் விலைகள் ரூ18.90 லட்சம் முதல் ரூ26.90 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த கார் அறிமுகமானபோது முதலில் டாப் வேரியன்ட் கார்களின் டெலிவரி மட்டுமே துவங்கியது. பின்னர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பேக் 2 வேரியன்ட்களில் டெலிவரி துவங்கியது.

இந்நிலையில் பேக் 1 வேரியன்ட்கள் தற்போது டீலர்ஷிப்களுக்கு வர துவங்கியுள்ளன. இதனால் இதன் டெலிவரி விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரின் வடிமவைடப்பைபொருத்தவரை டாப் வேரியன்டில் சில பிரிமியம் டச் இருப்பதை உணர முடிகிறது. இந்த காிரன் முன்பக்கம் டுயல் பாட் எல்இடி ஹெட்லைட் வழங்கப்பட்டுள்ளது. ஹூட் பகுதியில் இலுமினேட் செய்யக்கூடிய பிஇ லோகோ உள்ளது. இது போக சி வடிவ எல்இடி டிஆர்எல், ஃபாக் லைட்டுகள், சில்வர் ஸ்கிட் பிளேட், ஆகிய அம்சங்கள் உள்ளது.

Mahindra BE 6 Pack 1 in Dealership

மேலும் இதில் 18 இன்ச் ஸ்டீல் வீல் ஏரோ டைனமிக் பிளாக் கலர், பின்பக்க ஹேண்டில் சி பில்லர் பகுதியில் வழங்கப்பட்டுள்ளது.இதனால் காரின் டிரைவருக்கு ரியர் வியூ மிரரில் சிறப்பான விசிபிளிட்டி கிடைக்கும். கிளாஸ் பிளாக் பாடி கிளாடிக் வாகனத்தின் கீழ் பகுதயில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த காரில் 19இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளது.

பின்பக்கம் எல்இடி டெயில் லைட், லைட் பார் உடன் வழங்கப்பட்டுள்ளது. முக்கியமாக மஹிந்திரா இன்ஃபினிட்டி லோகோ, பிஇ 6 பேட்ஜ் ரூஃப் ஸ்பாய்லர், கனெக்டெட்ட டெயில் லைட் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளது. இந்த பேஸ் வேரயின்ட்டின் உட்புற கட்டமைப்பு சொகுசான மெட்டிரியல் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது,. கேபின் பகுதியில் கருப்பு கிரே டுயல் டோன் தீம் வழங்கப்பட்டுள்ளது.

Mahindra BE 6 Pack 1 in Dealership

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த பிஇ6 கார் மார்கெட்டில் டாடா கர்வ் இவி, ஹூண்டாய் கிரெட்டா இவி, எம்ஜி இசட்எஸ் இவி, வின்ஃபாஸ்ட் விஎஃப்6, ஆகிய கார்களுக்கு போட்டியாக விற்பனையாகி வருகிறது.இந்த கார் மார்கெட்டில் மிக சிறப்பாக விற்பனையாகி வருகிறது. இந்த கார் குறித்த உங்கள் விரிவான கருத்துக்களைட கமெண்டில் சொல்லுங்கள்

More from DriveSpark

Article Published On: Thursday, October 30, 2025, 18:50 [IST]
English summary
Mahindra be 6 pack 1 in dealership deliveries to begin soon
மேலும்... #mahindra #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X