உலகையே மிரள வைத்த இந்திய நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்கள்! கொஞ்சம் விட்டா டெஸ்லாவையே தூக்கி சாப்பிட்றும்!
இந்திய சந்தையில் அதிக எலெக்ட்ரிக் கார்களை (Electric Cars) விற்பனை செய்யும் நிறுவனங்களில் ஒன்றாக மஹிந்திரா (Mahindra) மாறியுள்ளது. இதற்கு மஹிந்திரா பிஇ 6 (Mahindra BE 6) மற்றும் மஹிந்திரா எக்ஸ்இவி 9இ (Mahindra XEV 9e) ஆகிய 2 எலெக்ட்ரிக் கார்கள்தான் மிகவும் முக்கியமான காரணம்.
இந்த 2 எலெக்ட்ரிக் கார்களின் டெலிவரி பணியும், கடந்த மார்ச் மாதத்தில் தொடங்கப்பட்டன. அதாவது இந்த 2 எலெக்ட்ரிக் கார்களின் டெலிவரி பணியும் தொடங்கப்பட்டு சுமார் 7 மாதங்கள் மட்டுமே ஆகின்றன. ஆனால் அதற்குள்ளாகவே ஒட்டுமொத்தமாக 30 ஆயிரம் பிஇ 6 மற்றும் எக்ஸ்இவி 9இ ஆகிய 2 எலெக்ட்ரிக் கார்களையும் மஹிந்திரா நிறுவனம் விற்பனை செய்து அசத்தியிருக்கிறது.

மஹிந்திரா பிஇ 6 எலெக்ட்ரிக் காரில், 59 kWh மற்றும் 79 kWH என மொத்தம் 2 பேட்டரி ஆப்ஷன்கள் (Battery Options) வழங்கப்படுகின்றன. இதே பேட்டரி ஆப்ஷன்கள்தான், மஹிந்திரா எக்ஸ்இவி 9இ எலெக்ட்ரிக் காரிலும் கொடுக்கப்படுகின்றன. இதில், மஹிந்திரா பிஇ6 எலெக்ட்ரிக் காரின் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) 557 கிலோ மீட்டர்கள் (59 kWh) மற்றும் 683 கிலோ மீட்டர்களாக (79 kWH) உள்ளன.
அதே நேரத்தில் மஹிந்திரா எக்ஸ்இவி 9இ எலெக்ட்ரிக் காரின் டிரைவிங் ரேஞ்ச் 542 கிலோ மீட்டர்கள் (59 kWh) மற்றும் 656 கிலோ மீட்டர்களாக (79 kWH) இருக்கின்றன. இவை மஹிந்திரா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள டிரைவிங் ரேஞ்ச் ஆகும்.

அதே சமயம் மஹிந்திரா பிஇ 6, மஹிந்திரா எக்ஸ்இவி 9இ ஆகிய 2 எலெக்ட்ரிக் கார்களிலும், 7 ஏர்பேக்குகள் மற்றும் அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) என ஏராளமான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. அதிநவீன தொழில்நுட்ப வசதிகள், சிறப்பான டிரைவிங் ரேஞ்ச், சௌகரியமான கேபின், கம்பீரமான டிசைன் போன்ற காரணங்களால் இந்த 2 எலெக்ட்ரிக் கார்களும், இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் கவனம் ஈர்த்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மஹிந்திரா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்களின் விற்பனை எண்ணிக்கை எதிர்காலத்தில் மேலும் உயரும். ஏனெனில் ஏராளமான புதிய எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய மஹிந்திரா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதில், மஹிந்திர எக்ஸ்இவி 9எஸ் (Mahindra XEV 9S) வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
இதுதான் மஹிந்திரா நிறுவனத்தின் முதல் 7 சீட்டர் எலெக்ட்ரிக் எஸ்யூவி ரக கார் (Mahindra's First 7-Seater Electric SUV) ஆகும். இது 7 சீட்டர் கார் என்பதால், மூன்று வரிசை இருக்கை அமைப்பை கொண்டிருக்கும். இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்த எலெக்ட்ரிக் கார், வரும் நவம்பர் 27ம் தேதி (November 27) அறிமுகம் செய்யப்படவுள்ளது.
அனேகமாக இந்த எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 22 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 35 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படலாம். இவை எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். ஆனால் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் நாளில்தான், அதிகாரப்பூர்வமான விலை எவ்வளவு? என்பது அறிவிக்கப்படும்.


Click it and Unblock the Notifications








