நாடே எதிர்பார்த்த காரின் டெலிவரியை துவங்கிய மஹிந்திரா! டாடா எல்லாம் இனி ஒரமா போக வேண்டியது தான்!
மஹிந்திரா நிறுவனம் பிஇ6 மற்றும் எக்ஸ்இவி 9இ ஆகிய கார்களின் பேக் 2 வேரியன்ட்களில் டெலிவரி துவங்கியுள்ளது. ஏற்கனவே இந்த காரின் பேக் 3 வேரியன்ட் ஏற்கனவே டெலிவரி செய்யப்படும் நிலையில் தற்போது பேக் 2 வேரியன்டின் டெலிவரி துவங்கியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
மஹிந்திரா நிறுவனம் பிஇ6 மற்றும் எக்ஸ்இவி 9இ ஆகிய எலெக்ட்ரிக் கார்களை ஏற்கனவே இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் காத்திருப்பு காலத்தை குறைக்க ஒவ்வொர வேரியன்டிற்கும் ஒவ்வொரு காலகட்டத்தில் டெலிவரி என்ற திட்டத்தை அறிவித்திருந்தது. அதன்படி பேக் 3 வேரியன்டிற்கு கடந்த மார்ச் மாதமும், பேக் 3 செலக்ட் வேரியன்ட்டிற்கு கடந்த ஜூன் மாதமும் விற்பனையை துவங்கியது.

இந்நிலையில் தற்போது தனது பேக் 2 வேரியன்டிற்கான டெலிவரியை நாடு முழுவதும் துவங்கியுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த காரை புக் செய்தவர்கள் வரிசையாக தங்கள் டெலிவரியை பெறத்துவங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார்கள் குறித்த விரிவான விபரங்களை இனி காணலாம்.
மஹிந்திரா பிஇ6 பேக் 2 வேரியன்ட் கார் ரூ22.65 லட்சம் என்ற விலையில் 59kWh பேட்டரி ஆப்ஷன் கொண்ட காரும். 79 kWh பேட்டரி ஆப்ஷன் கொண்ட கார் ரூ24.25 லடசம் என்ற விலையிலும் விற்பனையாகி வருகிறது. மஹிந்திரா எக்ஸ் இவி 9இ கார் ரூ25.65 லட்சம் என்ற விலையில் 59kWh பேட்டரி பேக் கொண்ட காரும், 79kWh பேட்டரி பேக் கொண்ட கார் ரூ27.25 லட்சம் என்ற விலையிலும் விற்பனையாகி வருகிறது.

இந்த கார்கள் எம்ஐடிசி தரவுகளின்படி படி எக்ஸ்இவி 9இ கார் 656 கி.மீ ரேஞ்சையும், பிஇ 6 கார் 682 கி.மீ ரேஞ்சையும் வழங்குகிறது. இது 79kWh பேட்டரி பேக் கொண்ட கார்களின் ரேஞ்ச் விபரம் தான். இதுவே 59kWh பேட்டரி பேக் கொண்ட எக்ஸ்இவி 9இ கார் 542 கி.மீ ரேஞ்சையும், பிஇ 6 கார் 535 கி.மீ ரேஞ்சையும் வழங்குகிறது.
இந்த கார்களில் பெரிய பேட்டரி பேக்கான 79kWh பேட்டரி பேக் கொண்ட வேரியன்ட் 282 பிஎச்பி பவரையும், 59 kWh பேட்டரி பேக் கொண்ட வேரியன்ட் 228 பிஎச்பி பவரையும் வெளிப்படுத்துகிறது. டார்க்கை பொருத்தவரை இரண்டு பேட்டரி ஆப்ஷன்களிலும் 380 என்எம் டார்க் திறனை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

மஹிந்திராவின் பேக் 2 வேரியன்டில் உள்ள எக்ஸ்இவி 9இ மற்றும் பிஇ6 ஆகிய கார்களில் அதிக அம்சங்கள் உட்புறமும் வெளிப்புறமும் வழங்கப்பட்டுள்ளது. இரண்டு கார்களிலும் முழு எல்இடி லைட்டில் , 19 இன்ச் அலாய் வீல்கள், இலுமினேட் செய்யக்கூடிய லோகோ உள்ளிட்ட அம்சங்கள் இருக்கிறது.
காரில் உள்ளே இரண்டு கார்களிலும் லெதர் சீட்டுகள், பிஇ6 காரில் 12.3 இன்ச் ஸ்கிரீன்கள், எக்ஸ்இவி 9இ காரில் 3 ஸ்கிரீன் லேஅவுட் டுயல் ஸோன் ஆட்டோமெட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், பின்பக்க ஏசி வென்ட்கள், வயர்லெஸ் போன் சார்ஜர், பானரோமிக் சன்ரூஃப், பவர்டு வென்டிலேட்டட் முன்பக்க சீட்டுகள் இதில் பொருத்தப்பட்டுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா நிறுவனம் நீண்ட காத்திருப்பு காலத்திற்கு பெயர் போனது. இந்நிறுவனம் இந்த பெயரை தற்போது எடுக்ககூடாது என கருதி வேரியன்ட் வாரியிலான டெலிவரி திட்டத்தை அறிவித்தது. இது நிச்சயம் அந்நிறுவனத்திற்கு கை கொடுத்துள்ளது என்றே சொல்லலாம்.


Click it and Unblock the Notifications









