நாடே இந்த காரை ரோட்ல பார்க்கதான் வெயிட்டிங்! டெலிவரி ஸ்டார்ட் ஆகிடுச்சு!

மஹிந்திரா நிறுவனம் தனது பிஇ6 காரின் பேட்மேன் எடிசனை கடந்த சில நாட்களுக்கு முன்னர் விற்பனைக்காக கொண்டு வந்தது. இது ஒரு லிமிடெட்ட எடிசன் கார் வெறும் 999 பேர் மட்டுமே வாங்க முடியும் என்ற சூழலில இந்த காரை வாங்கிய ஒருவர் அதை டெலிவரி எடுத்த வீடியோவை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

மஹிந்திரா நிறுவனம் இந்தாண்டு துவக்கத்தில் தனது புதிய இவி கார்களாக பிஇ6 மற்றும் எக்ஸ்இவி 9இ ஆகிய கார்களை விற்பனைக்கு கொண்டு வருவதாக அறிவித்தது. இதன்படி இதன் அறிமுகங்கள் இருந்தன. இந்த காரின் வடிவமைப்பிற்காக இரண்டு கார்களும் சிறப்பான விற்பனையை பெற்றது. குறிப்பாக பிஇ6 கார் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

Mahindra BE6 Batman Edition

இந்நிலையில் இந்த பிஇ6 காரின் பேட் மேட் எடிசன் என்ற லிமிடெட் எடிசன் காரை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியது. முதலில் வெறும் 399 பேர் மட்டுமே இதை வாங்க முடியும் என அறிவித்திருந்தது. பின்னர் இதை 699 ஆக உயர்த்தியது. அப்பொழுதும் அதிக அளவில் தேவை இருந்தததால் 999 பேர் மட்டுமே இதை வாங்க முடியும் என தயாரிப்பு எண்ணிக்கையை அதிகப்படத்தியது.

இந்த கார் பேட்மேன் தீமில் சில வடிவமைப்பு மாற்றங்களை கொண்டதாக இருக்கிறது. இந்நிலையில் இந்த காரின் டெலிவரியை அந்நிறுவனம் துவங்கியுள்ளது.இந்தியாவிலேயே 999 பேரால் தான் இந்த காரை வாங்க முடியும் என்பதால் இந்த காரை சாலையில் பார்க்க பலர் ஆர்வமாக காத்திருக்கிறார். இந்நிலையில் இந்த காரை வாங்கிய ஒருவர் அதை டெலிவரி எடுக்கும் புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

Mahindra BE6 Batman Edition

ரெட்டிட் தளத்தில் ரெட் பாண்டா என்ற பக்கத்தில் இந்த புகைப்படங்கள் பதிவாகியுள்ளது. இந்த காரின் வடிவமைப்பைபொருத்தவரை முழு கருப்பு நிற வெளிப்புற வடிவமைப்பு இதில் வழங்கப்பட்டுள்ளது. முன்பக்க கதவு பகுதியில் பேட்மேட் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுளு்ளது. இந்த காரில் ஆர்20 ஆய்ல் வீல்கள் அக்ரஸிவான லுக்கிற்காக வழங்கப்பட்டுள்ளது. இந்தகாரின் சஸ்பென்சன் மற்றும் பிரேக் கேலிபர்கள் தங்க நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது.

இந்த காரின் ஹப் கேப், முன்பக்க குவாட்டர் பேனல், பின்பக்க பம்பர் , ஜன்னல், பின்பக்க விண்ட் ஷீல்டு பகுதியில் பேட்மேட் லோகோ இடம் பெற்றள்ளது. இந்த கார் ரூ27.29 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த புகைப்படம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. பலர் இந்த காரை வாங்கியவரை பாதுகாத்து வருகின்றனர்.

Mahindra BE6 Batman Edition

மஹிந்திரா பிஇ6 காரின் டாப் வேரியன்டில் மட்டுமே இந்த பேட் மேட் எடிசன் உருவாக்கப்பட்டுள்ளது. பேட்மேன் கார் அதிகபிரபலமான கதாபாத்திரம் என்பதால் இந்த காரில் அதன் எடிசன் வரும்போது வரவேற்பு அதிகரித்துள்ளது. இருந்தாலும் இது லிமிடெட்ட் எடிசன் காராக இருந்ததால் பலரால் இந்த காரை வாங்க முடியவில்லை.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த காரை அவர் வாங்கியது குறித்த பதிவில் பலர் இந்தகாரை வாங்க முயற்சித்து முடியவில்லை என கருத்திட்டுள்ளனர். இந்நிலையில் இதன் அடுத்த எடிசன்கள் இந்தியாவை மையப்படுத்திய எடிசனாக வந்தால் நிச்சயம் மிகப்பெரிய வெற்றியை பெறும் என எதிர்பார்க்கலாம்.

Article Published On: Wednesday, October 8, 2025, 9:30 [IST]
English summary
Mahindra be6 batman edition delhi man drives home electric suv
மேலும்... #mahindra #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X