வெறும் 999 பேர் மட்டும் வாங்கிய காரின் டெலிவரி துவங்கியது! இதை ரோட்டுல பார்க்கவே கூட்டம் கூடுமே!

மஹிந்திரா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தனது பிஇ6 பேட்மேன் எடிசன் காரின் டெலிவரியை தற்போது அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் மொத்தம் 999 கார்களை மட்டுமே விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த கார்களுக்கான டெலிவரி துவங்கியுள்ள நிலையில் இதைசாலையில் பார்க்க மக்கள் பலர் ஆர்வமாக இருக்கின்றனர். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

மஹிந்திரா நிறுவனம் தனது பிஇ6 பேட்மேன் எடிசன் காரின் டெலிவரியை தற்போது துவங்கியுள்ளது. பண்டிகை காலம் என்பதால் இந்த தருணத்தில் இந்த காரை வாங்க மக்கள் பலர் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். இதனால் உடனடியாக இந்த காரின் டெலிவரிகள் நடந்து வருகிறது. இந்த காரின் அறிமுகத்தின் போது வெறும் 300 கார்களை மட்டுமே தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் இதற்கு மிகப்பெரிய வரவேற்புகிடைத்த நிலையில் கூடுதலாக 699 கார்களையும் சேர்த்து மொத்தம் 999 கார்களை தயாரிக்க அந்நிறுவனம் முடிவு செய்தது.

Mahindra BE6 Batmat Edition Delivery

இந்த கார் ரூ27.79 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வந்தது. இது சாதார எடிசனின் டாப் வேரியன்டான பேக் 3 வேரியன்டை விட ரூ89,000 அதிகமான விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

இந்த பிஇ6 பேட்மேஜ் எடிசனில் கருப்பு நிற ஃபினிஷ் வழங்கப்பட்டுள்ளது. பாடி முழுவதுமே கருப்பு நிறமாக உள்ளது. இது தூரத்திலிருந்து பார்க்கும் போது ஒரு பிரிமியம் லுக்கை தருகிறது. இதன் சஸ்பென்சன் மற்றும் பிரேக் கேலிடபர் பகுதிகள் கேலால்டு ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இந்த காரில் 20 இன்ச் அலாய் வீல் பொருத்தப்பட்டள்ளது. இந்த காரின் முன்பக்க கதவு பகுதியில் பேட்மேட் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. பின்பக்கம் BE 6X The Dark Knight பேட்ஜிங் பகுதியும் வழங்கப்பட்டுள்ளது.

Mahindra BE6 Batmat Edition Delivery

இந்த காரின் உட்பகுதி சார்க்கோல் லெதர் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் கோல்டு செஃபியா ஸ்டிச்சிங் செய்யப்ப்டடுள்ளது. ஸ்டியரிங் வீல் பகுதியில் கோல்டு அசென்ட்கள் உள்ளது. முக்கியமாக டச் கண்ட்ரோலர், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளது. மேலும் சீட் பகுதியில் பேட்மேன் லோகோ எம்போஸ் செய்யப்பட்டுள்ளது. பின் ஸ்டிரிப் கிராஃபிக் டேஷ் போர்டு பகுதியில் வழங்கப்பட்டுள்ளது. இதில் உள்ள இன்ஃபேடெயின்மென்ட சிஸ்டத்தில் பேட்மேனே அனிமேஷன் வழங்கப்பட்டுள்ளது.

இந்த காரில் 79kWh பேட்டரி பேக் வழங்கப்பட்டுள்ளது. இது முழு சார்ஜில் 683 கி.மீ பயணிக்கும் திறன் கொண்டது. ரியல் வேர்ல்டில் ஏசி பயன்பாட்டுடன் 500 கி.மீ வரை ரேஞ்ச் பெற முடிகிறது. இது லிமிட்டெட் எடிசன் என்பதால் இது எக்ஸ்க்ளூசிவாகவும், வித்தியாசமான டிசைன் உடனும் இருக்கிறது.

இந்த காரின் அறிவிப்பு வரும்போதே எதிர்பார்ப்பு எகிறியது. இதனால் இந்த காருக்கான புக்கிங் குவிந்ததது. வாகன எண்ணிக்கையையும் அந்நிறுவனம் அதிகரித்தது. இதனால் இந்த காரை சாலையில் பார்க்க பலர் காத்திருக்கிறார்கள். முக்கியமாக பேட்மேன் ரசிகர்கள் பலர் இந்த காரை போட்டி போட்டு வாங்கியதால் முதல் நாளே அத்தனை கார்களும் புக்காகிவிட்டன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகனங்களுக்கு தற்போது டிமாண்ட் அதிகமாகி வருகிறது. இந்நிலையில் இந்த நிறுவனம் தனது காரில் பேட்மேன் லிமிடெட் எடிசனை அறிமுகப்படுத்தியது சிறப்பான வரவேற்ப்பை பெற்றுள்ளது. இதே காரில் அடுத்தடுத்த வெர்ஷனில் லிமிடெட் எடிசன் வந்தாலும் மிகப்பெரிய அளவில் விற்பனையாகும்.

More from DriveSpark

Article Published On: Saturday, September 27, 2025, 12:30 [IST]
English summary
Mahindra be6 batman edition delivery begins
மேலும்... #mahindra #india #electric vehicles
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+