135 நொடியில் அத்தனை காரும் வித்து தீந்துடுச்சு! அப்படி இந்த கார்ல என்னதாங்க இருக்குது!
மஹிந்திரா நிறுவனம் பிஇ6 பேட்மேன் எடிசனை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இந்த கார் ரூ27.79லட்சம் என்ற விலையில் விற்பனைக்குவந்துள்ளது. வெறும் 999 பேர் மட்டுமே இந்த காரை வாங்கலாம் என கூறப்பட்ட நிலையில் வெறும் 135 நொடியில் அத்தனை வாகனங்களும் விற்று தீர்ந்துள்ளன.
மஹிந்திரா நிறுவனம் ஃபிரீடம் நியூ நிகழ்ச்சியில் தனது பிஇ6 பேட்மேன் எடிசனை காட்சிப்படுத்தியது. முதலில் 300 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த காருக்கு நல்ல வரவேற்ப்பை பெற்ற நிலையில் தற்போது 999 கார்களை விற்பனை செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த காருக்கான புக்கிங் இன்று துவங்கியது.இந்த கார் புக்கிங் துவங்கிய 135 நொடியில் 999 கார்களும் புக்கிங்காகிவிட்டன. இந்த காரின் டெலிவரி செப்டம்பர் மாதம் 20ம் தேதி நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மஹிந்திரா நிறுவனம் பிஇ6 பேட்மேட் எடிசனை உருவாக்க வார்னர் பிரதர்ஸ் உடன் பார்ட்னர்ஷிப் வைத்துள்ளது. அந்நிறுவனம் கிரிஸ்டோஃபர் நோலன் என்பவர் டார்க் நைட் டிரையாலஜி படத்தில் உள்ள கதாபாத்திரத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கியுள்ளது.

இந்த கார் பேக் 3 வேரியன்டில் மட்டுமே உருவாக்கிறது. இதில் டார்க் நிற தீம் வழங்கப்பட்டுள்ளது. இதில் சினிமாட்டிக்கான அம்சங்களும், ஆட்டோமொட்டிவ் ஸ்டைலிங்கும் சேர்ந்து இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் 79kWh பேட்டரி பேக் வழங்கப்பட்டுள்ளது. இப்படியான ஸ்பெஷல் எடிசன் கார்களை காண்பது அரிது. முக்கியமான இந்தியாபோன்ற நாடுகளில் இந்த கார்கள் வருவது கடினம் தான். அந்த அளவிற்கு இந்த காரில் தனித்துவமான டிசைன் அம்சங்கள் மற்றும் தனித்துவமான ஃபினிஷ் வழங்கப்பட்டுள்ளது.
இந்த காரில் ஸ்டெயின் பிளாக் வெளிப்புற அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இதில் ஆல்கமி கோல்டு பெயின்ட் சஸ்பென்சன் மற்றும் பிரேக் கேலிபர்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த காரில் 20 இன்ச் அலாய் வீல்கள் எக்ஸ்க்ளூஸிவான டச்களுடன் முன்பக்க டோர் பகுதியில் பேட்மேன் ஸ்டிக்கர்கள், மற்றும் பேட்மேன் எடிசன் என்ற பெயர் பொறிக்கப்பட்ட ஸ்டிக்கர்கள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த காரின் உட்புறம் சீட்களிலும், மற்ற இடங்களிலும் பேட்மேன் லோகோ பொறிக்கப்பட்டுள்ளது. இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்பிளே சிஸ்டத்திலும் இந்த லோகோ வழங்கப்பட்டுள்ளது. இது போக காரின் வெல்கம் அனிமேஷன் மற்றும் வெளிப்புற சத்தம் பேட்மேன் இன்ஸ்பயர்டு தீம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பேட்மேன் ரசிகர்கள் பலர் இருக்கிறார்கள். அதே நேரத்தில் பிஇ6 கார்கள் மக்கள் மத்தியில் வரவேற்ப்பை பெற்று வருகிறது. இந்த கார்கள் எல்லாம் நிச்சயம் பெரிய அளவில் வரவேற்ப்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் பேட்மேன் எடிசன் போல மற்ற பல ஸ்பெஷல் எடிசன்கள் வந்தால் நிச்சயம் மிகப்பெரிய அளவில் விற்பனையை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் குறித்த உங்கள் கருத்தை கமெண்டில் சொல்லுங்கள்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா நிறுவனத்தின் பிஇ 6 பேட்மேன் எடிசனை பொருத்தவரை இந்த கார் மக்களால் அதிகம் விரும்பப்படுவது தெளிவாக தெரிகிறது. இதன் எண்ணிக்கையை அதிகரித்தால் நிச்சம் அதிக மக்கள் இந்த காரை வாங்குவார்கள் என எதிர்பார்க்கலாம். அடுத்த ஸ்பெஷல் எடிசன் எதுவாக இருக்கும் என நீங்கள் நினைப்பதை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications









