ஷோரூமில் இருந்து அவசர அவசரமா டெலிவிரி எடுத்தது இதற்குதானா? இன்ஸ்சூரன்ஸில் ஒரு நயா பைசாவை வாங்க முடியாது!!

மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட பிஇ 6 (BE 6) எலக்ட்ரிக் காருக்கு (Electric Car) மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. கடந்த 2024 டிசம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட மஹிந்திரா பிஇ 6 எலக்ட்ரிக் காருக்கு கடந்த பிப்ரவரி மாதத்தில் அதிகாரப்பூர்வமாக முன்பதிவுகள் துவங்கப்பட்டது. அதனை தொடர்ந்து மார்ச் மாத மத்தியில் இருந்து காரின் டெலிவிரிகள் அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட்டன. தற்போதைக்கு டெலிவிரி செய்யப்படுவது, விலை குறைவான பிஇ 6 எலக்ட்ரிக் கார்கள் ஆகும்.

விலைமிக்க பிஇ 6 எலக்ட்ரிக் கார்களின் டெலிவிரிகளை வருகிற ஜூன் மாதத்தில் இருந்து ஆரம்பிக்க மஹிந்திரா திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், விலை குறைவான பிஇ 6 எலக்ட்ரிக் காரை டெலிவிரி பெற்ற கஸ்டமர் ஒருவர், ஷோரூமில் இருந்து வெளியே எடுத்த உடனே காரின் அலாய் சக்கரங்களை மாற்றியுள்ளார்.

mahindra be 6 car modified

மஹிந்திரா ஷோரூமில் இருந்து நேராக 3ஆம் தரப்பு கார் மாடிஃபிகேஷன் (Modification) நிறுவனம் ஒன்றிடம் சென்ற இந்த பிஇ 6 கார் உரிமையாளர், காரில் மஹிந்திரா தொழிற்சாலையில் பொருத்தப்பட்ட சக்கரங்களை நீக்கி 19-இன்ச்சில் அளவில் பெரியதான சக்கரங்களை பொருத்திக் கொண்டுள்ளார். இந்த ஆஃப்டர்-மார்க்கெட் (Aftermarket) அலாய் சக்கரங்களை ஏடி வீல்ஸ் (AD Wheels) என்கிற நிறுவனம் உருவாக்கியுள்ளது.

மலேசியா நாட்டை சேர்ந்த கார் சக்கர உற்பத்தி நிறுவனமான ஏடி வீல்ஸ், குறிப்பாக எலக்ட்ரிக் கார்களுக்கு ஏற்ற சக்கரங்களை உருவாக்குவதில் கைத்தேர்ந்ததாக உள்ளது. காரின் எடைக்கு இணையாக, எடை குறைவான அலாய் சக்கரங்கள் இந்த ஆரஞ்சு நிறத்திலான மஹிந்திரா பிஇ 6 எலக்ட்ரிக் காரில் பொருத்தப்பட்டு உள்ளன.

mahindra be 6 car modified

சக்கரங்கள் மாற்றப்பட்டதால் காரின் தோற்றமே மாறிவிட்டது. நீங்கள் என்னதான்... எலக்ட்ரிக் கார்களுக்காக என்றே சக்கரங்களை உருவாக்கும் நிறுவனத்திடம் சென்றிருந்தாலும், இந்த சக்கரங்கள் பிஇ 6 எலக்ட்ரிக் காருக்காக என்று பார்த்து பார்த்து உருவாக்கப்பட்ட சக்கரங்கள் கிடையாது. எந்தவொரு வாகனத்திலும் சக்கரங்கள் மிக முக்கியமான பாகம் ஆகும்.

காரின் செயல்படுதிறனை தீர்மானிக்கக்கூடிய முக்கிய இடத்தில் சக்கரங்கள் உள்ளன. காரின் அடித்தளமான சேசிஸை தாங்கி நிற்பதும், நேரடியாக தரையுடன் தொடர்பில் இருப்பதும் சக்கரங்கள் ஆகும். இதனாலேயே ஒவ்வொரு காருக்கும் என்று பிரத்யேகமான அளவுகளில் மற்றும் டிசைன்களில் சக்கரங்கள் உருவாக்கப்படுகின்றன. சக்கரத்தின் டிசைனில் வழங்கப்படும் ஒவ்வொரு நுணுக்கங்களுக்கும் காரணம் உள்ளது.

இதனாலேயே பிஇ 6 எலக்ட்ரிக் காரில் பொருத்தப்படும் அலாய் சக்கரங்களை முழுக்க முழுக்க மஹிந்திரா நிறுவனம் தான் உருவாக்குகிறது. காரின் சக்கரங்களை நீக்கி வேறொன்று பொருத்துவதை நாங்கள் எப்போதும் பரிந்துரைக்க மாட்டோம் என கூறும் மஹிந்திரா நிறுவனம் அதன் எலக்ட்ரிக் கார்களில் குட்இயர் (Goodyear) நிறுவனத்தின் டயர்களை (Tyres) பொருத்துகிறது. இவர்கள் காரின் டயர்களை மாற்றியதுபோல் தெரியவில்லை.

ஆஃப்டர்-மார்க்கெட் சக்கரங்களில் பிஇ 6 காரின் வழக்கமான குட்இயர் டயர்களை தான் பொருத்தி உள்ளனர். இந்த டயர்களுக்கு உள்ளே நிரப்பப்படுகிறது. இது டயரின் இரைச்சலை வெகுவாக குறைக்கிறது. சக்கரங்கள் உடன் சேர்த்து டயர்களும் எந்தவொரு வாகனத்திலும் அத்தியாவசியமான பாகம் ஆகும். இந்த ஆரஞ்ச் நிற பிஇ 6 காரில் டயர்களையும் மாற்றி இருந்தால், காரின் ரேஞ்ச் மேலும் 5% வரையில் குறைந்திருக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த மஹிந்திரா பிஇ 6 எலக்ட்ரிக் கார் உரிமையாளர் சாலையில் மற்ற பிஇ 6 கார்களில் தனித்து தெரிய வேண்டும் என விரும்பியுள்ளார் என்பதை எங்களால் புரிந்துக்கொள்ள முடிகிறது. இருப்பினும், இவ்வாறான கார் மாடிஃபிகேஷன்களுக்கு சட்டமும் சரி, இயந்திரநுட்பவியலும் சரி ஒத்துக்கொள்வது இல்லை. ஆகையால், இவ்வாறான மாடிஃபிகேஷன்களை தவிர்ப்பது நல்லது. மேலும், இவ்வாறான மாடிஃபிகேஷன்களால் காரின் இன்ஸ்சூரன்ஸ் மற்றும் வாரண்டி அடிவாங்கும் என்பதை மறக்காதீர்கள்.

More from DriveSpark

Article Published On: Friday, May 16, 2025, 5:00 [IST]
English summary
Mahindra be6 electric car modified with after market alloy wheels
மேலும்... #car modification #alloy wheel #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+