அடிமாட்டு விலையில் புதிய மஹிந்திரா பிஇ6 காரா? நவ26ம் தேதி சர்பிரைஸ் தரப்போறாங்க!

மஹிந்திரா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது பிஇ6 காரின் புதிய வெர்ஷனை வரும் நவம்பர் 26ம் தேதி அறிமுகப்படுத்தப்போவதாக தெரிவித்துள்ளது. இது குறித்த டீசரையும் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே இந்நிறுவனம் எக்ஸ்இவி 9எஸ் காரை வெளியிட திட்டமிட்டுள்ள நிலையில் தற்போது இந்த கார் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

மஹிந்திரா நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் 3 வரிசை சீட்டர் கொண்ட எக்ஸ்இவி 9எஸ் என்ற காரை வரும் 27ம்விற்பனைக்கு அறிமுகப்படுத்துகிறது. இந்த கார் அந்நிறுவனத்தின் எலெக்ட்ரிக்லைன் அப்பை விரிவுபடுத்துகிறது. பெங்களூருவில் நடக்கவுள்ள ஸ்கிராம் எலெக்ட்ரிக் நிகழ்வில் இந்த கார் அறிமுகமாகிறது. இது குறித்த டீரும் வெளியாகியுள்ளது.

Mahindra be 6 TEASER

இந்நிலையில் புதிய டீசரை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் ஒரு எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை அந்நிறுவனம் வரும் 26ம் தேதி வெளியிடப்போவதாக தெரிவித்திருந்தது. இந்த காரின் வடிவமைப்பை பார்க்கும் போது இது பிஇ6 காராக இருக்கும் என தோன்றுகிறது. இந்த கார் பிஇ 6 காரின் ஸ்பெஷல் எடிசனாக இருக்கலாம் என சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பிஇ6 பேட்மேன் லிமிடெட் எடிசன் காருகு்க நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் அதன் ஸ்பெஷல் எடிசன் ஒன்றை வெளியிடலாம் என பரவலாக பேசப்படுகிறது. இந்நிறுவனம் ஃபார்முலா இ போட்டியை பரைசாற்றும் வகையில் ஒரு ஸ்பெஷல் எடிசைன வெளியிடவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதே நேரம் சிவப்பு நிற பாடி கலர் இருப்பதால் பேட் மேன் எடிசன் போல டெட்பூல் எடிசன் கூட வெளியாக வாய்ப்புள்ளது.

இதற்கிடையில் மக்கள் மத்தியில் பிஇ6 காரின் குறைந்த விலை எடிசன் காராக இருக்கலாம் என்ற பேச்சும் இருக்கிறது. இ்நத கார் மக்கள் மத்தயில் நல்ல வரவேற்ப்பை பெற்ற நிலையில் இதன் குறைந்த விலை கார் விற்பனைக்கு வந்தால் நிச்சயம் விற்பனை அதிகமாக வாய்ப்புள்ளது. ஆனால் அதற்கான சாத்தியம் குறைவு தான். இதை ஒரு மைக்ரோ எஸ்யூவியாக மாற்றி விற்பனைக்கு கொண்டு வந்தால் பஞ்ச், எக்ஸ்டர் மார்கெட் எல்லாம் காலியாகிவிடும்.

இந்த டீசரில் சி வடிவ எல்இடி டிஆர்எல் அம்சங்கள் காட்டப்படவில்லை. இதனால் டிசைனில் செலவை குறைக்க சில மாற்றங்களை செய்து வெளியிட வாயப்புகள் உள்ளது.இது தான் இந்தியாவில் இந்த காரின் விற்பனை சிறப்பாக இருப்பதால் குறைந்த விலையில் விற்பனைக்கு வந்தால் இன்னும் அதிகம் விற்பனையாகும் என்பதால் இந்த எடிசன் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது,.

மஹிந்திரா நிறுவனம் தனது எக்ஸ்இவி 9எஸ் காரை வெளியிடும் அதே நிகழ்வில்தான் இந்த காரையும் வெளியிடுகிறது. ஆனால் எக்ஸ்இவி 9எஸ் கார் தான் இந்த நிகழ்ச்சியில் ஒரு ஸ்டாராக இருகு்கும். இந்த இரண்டு கார்களும் இன்குளோவ் பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்பட்டது. தான். ஒரே விதமான பேட்டரி ஆப்ஷனை கொண்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து:இந்தியாவில் பிஇ6 காருக்கு நல்ல வரவேற்ப்பு கிடைத்துள்ளது. குறிப்பாக இதன் பேட்மேட் எடிசன் கார் விற்பனைக்கு வ்நத அன்றே புக்கிங் எல்லாம் தீர்ந்து போனது . இதே போல ஸ்பெஷல் எடிசன் ஏதாவது வருமா? அல்லது விலை குறைந்த வேரியன்ட் வருமா? பொருத்திருந்து பார்ப்போம்!

More from DriveSpark

Article Published On: Thursday, November 20, 2025, 18:05 [IST]
English summary
Mahindra be6 teaser electric suv nov 26 launch
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+