ரூ4 லட்சம் கம்மியான விலையில் அதிக தூரம் பயணிக்கும் காரை வாங்கலாம்! இப்ப என்ன விலை தெரியுமா?
மஹிந்திரா நிறுவனம் தனது BE 6 மற்றும் XEV 9E ஆகிய கார்களின் லாங் ரேஞ்ச் வேரியன்ட்களை ரூ4 லட்சம் குறைவான விலையில் தற்போது வாங்க முடியும் என அறிவித்துள்ளது. அந்த வித தள்ளுபடிகளுமே இல்லாமல் இந்த கார்களின் விலை ரூ4 லட்சம் வரை குறைந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்
மஹிந்திரா நிறுவனம் தனது BE6 மற்றும் XEV 9E ஆகிய கார்களின் பேக் 2 வேரியன்டை சமீபத்தில் தான் தயாரிக்க துவங்கி டெலிவரியையும் செய்ய துவங்கியுள்ளது. இந்த காரின் டாப் வேரியன்டான பேக் 3 வேரியன்ட் தான் இவ்வளவு காலம் விற்பனையில் இருந்தது. இந்நிலையில் பேக் 2 வேரியன்ட் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது.

இந்த கார் முதலில் அறிமுகமானபோது இதில் 59kWh மற்றும் 79kWh ஆகிய இரண்டு பேட்டரி பேக் இருப்பதாகவும், இதில் டாப் வேரியன்டில் மட்டுமே 79kWh பேட்டரி பேக் ஆப்ஷன் இருப்பதாகவும், மற்ற வேரியன்ட்களில் 59kWh பேட்டரி பேக் ஆப்ஷன் மட்டுமே இருப்பதாகவும் அறிவித்திருந்தது. ஆனால் இதுவரை நடந்த பேக் 3 வேரியன்டின் விற்பனையில் மக்கள் மத்தியில் 79 kWh பேட்டரிய பேக்கிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதை தொடர்ந்து பேக் 2 வேரியன்டிலும் 79kWh பேட்டரி பேக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது BE 6 காரின் 59kWh பேட்டரி பேக் பேக் 2 வேரியன்ட்கார் 21.6 லட்சம் என்ற விலையிலும், 79kWh பேட்டரி பேக் கார் ரூ23.5 லட்சம் என்ற விலையிலும், எக்ஸ்இவி9இ காரின் 59kWh பேட்டரி பேக் பேக் 2 வேரியன்ட் ரூ 24.9 லட்சம் என்ற விலையிலும், 79kWh பேட்டரி பேக் வேரியன்ட் 26.5 லட்சம் என்ற விலையிலும் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது.

| Model (PACK TWO) | 59kWh | 79kWh | Difference |
| BE6 | ₹21.9 லட்சம் | ₹23.5 Lakh | ₹1.6 லட்சம் |
| XEV 9E | ₹24.9 லட்சம் | ₹26.5 லட்சம் | ₹1.6 லட்சம் |
இந்த இரண்டு பேட்டரி பேக்கிற்கு இடையே உள்ள வித்தியாசத்தை பார்க்கும் போது ரூ 1.6 லட்சம் தான் 79 kWh பேட்டரி பேக் காரின் விலை அதிகமாக உள்ளது. ரூ20 லட்சத்திற்கு மேல் வாகனம் வாங்கும் பலருக்கு இது வெறும் 15 சதவீத விலை அதிகமாகவே இருப்பதால் பலர் அதிக ரேஞ்ச் தரும் 79kWh பேட்டரி பேக்கை வாங்க வாய்ப்புள்ளது. ஏற்கனவே 59kWh பேட்டரி பேக் காரை புக் செய்தவர்கள் தேவை என்றால் அந்த புக்கிங்கை 79kWh பேட்டரி பேக்கிற்கு மாற்றிக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விலையை ஒப்பிடும் போது BE 6 79kWh பேட்டரி பேக் கொண்ட பேக் 3 காரின் விலையை விட பேக் 2 காரின் விலை ரூ3.4 லட்சம் குறைவாக உள்ளது. அதே போல XEV 9E காரின் 79kWh பேட்டரி பேக் கொண்ட பேக் 3 காரின் விலை விட அதே பேட்டரி பேக் ஆப்ஷன் கொண்ட பேக் 2 காரின் விலை ரூ4 லட்சம் குறைவாக உள்ளது.

| MAHINDRA BE 6 & XEV 9E PACK TWO அம்சங்கள் | ||
| பாதுகாப்பு | தொழிற்நுட்பம் | டிசைன், சொகுசு வசதி |
| 6 ஏர்பேக்குகள் | இரண்டு 12.6-inch ஸ்கிரீன் (BE 6) மூன்று 12.6-inch ஸ்கிரீன் (XEV 9e) | கிளாஸ் ரூஃப் |
| அனைத்து வீல்களிலும் டிஸ்க் பிரேக் | 16 ஸ்பீக்கர் ஹார்மன் கார்டன் ஆடியோ சிஸ்டம் | 19 இன்ச் அலாய் வீல்கள் |
| அடாஸ் (லெவல் 2) | டால்பி அட்மாஸ் | லெதர் சீட் அப்ஹோல்ஸரி |
| ஃபாக் லைட்டுகள் | வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ ஆப்பிள் கார்பிளே | ஸீக்கோன்ஷியல் டர்ன் இன்டிகேட்டர் |
| கார்னர் லைட்டுகள் | கேபின் ப்ரீ கூலிங் | ஆட்டோமெட்டிக் ஹெட்லைட் |
| பிரேக் பை வயர் | வயர்லெஸ் சார்ஜர் | ரெயின் சென்சிங் வைப்பர்கள் |
| எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் | அமேசான் அலெக்ஸா | ஆட்டோ டிம்மிங் ஐஆர்விஎம் |
| முன், பின்பக்க பிரேக்கிங் சென்சார் | ஆட்டோ ஃபோல்டிங் ஓஆர்விஎம் | |
| டிபிஎம்எஸ் | 65W டைப் சி சார்ஜர் | |
| ஆட்டோ டிஃபாக்கர் | பின்பக்க ஏசி வென்ட்கள் | |
| ஸ்டார்ட்டப் லைட் சீக்கோன்ஸ் | ||
மஹிந்திரா எக்ஸ்இவி BE 6 மற்றும் XEV 9E ஆகிய கார்களின் பேக் 3 வேரியன்ட்கள் ஏற்கனவே விற்பனையாகி வரும் நிலையில் தற்போது பேக் 2 வேரியன்ட்களின் தயாரிப்பு துவங்கியுள்ளது. ஜூலை மாத இறுதிக்குள் இந்த காரின் தயாரிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வேரியன்ட் விற்பனை துவங்கிய பிறகு அந்நிறுவனம் ஒட்டு மொத்த விற்பனையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மக்கள் எலெக்ட்ரிக் கார்களை நோக்கி நகர்ந்து வரும் நிலையில் மக்கள் மத்தியில் நீண்ட தூரம் பயணிக்கும் கார்கள் மீது மோகம் அதிகமாக இருப்பது தெரியவருகிறது. கொஞ்சம் விலை அதிகமாக இருந்தாலும் மக்கள் அதை பொருட்படுத்தாமல் அதிக ரேஞ்ச் தரும் கார்களை தான் விரும்புகின்றனர் என்பது தெளிவாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications









