எப்படி பார்த்தாலும் டாடா கார் கஸ்டமர்கள் குறைந்து இருப்பது தெரியுது! கூட்டம் அப்படியே மஹிந்திராவுக்கு மாறுது!
மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தின் சமீப கால வளர்ச்சி ஆனது மிகவும் ஆச்சிரியப்படும் வகையில் உள்ளது. குறிப்பாக, 2025ஆம் ஆண்டு பிறந்ததே மஹிந்திராவுக்கு தான் என்பது போல், ஹூண்டாய் (Hyundai) மற்றும் டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனங்களை முந்தி ஆச்சிரியப்படுத்தி வருகிறது. இது நடந்து முடிந்த ஜூலை மாத விற்பனையிலும் எதிரொலித்து உள்ளது.
கடந்த ஜூலை மாதத்தில் மொத்தம் 41 ஆயிரத்து 871 கார்களை மஹிந்திரா விற்பனை செய்துள்ளது. இது கடந்த மாதங்களில் மஹிந்திரா விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கையை விட சற்று குறைவு என்றாலும், ஹூண்டாய் மற்றும் டாடாவை முந்தி உள்ளது. ஹூண்டாயில் இருந்து கடந்த ஜூலை மாதத்தில் 43 ஆயிரத்து 973 கார்களை விற்பனை செய்யப்பட்டுள்ளன.

அதுவே, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெறும் 40 ஆயிரத்து 175 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. அதாவது, மஹிந்திராவுக்கும், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு இடையே கிட்டத்தட்ட 10 ஆயிரம் கார்கள் வித்தியாசம் உள்ளன. ஆனால், கடந்த 2024ஆம் ஆண்டின் மத்தியில் நிலைமையே வேறு. பஞ்ச் (Punch) காருக்கு கிடைத்த சிறப்பான வரவேற்பால் இரண்டாவது இடத்திற்கு கூட டாடா மோட்டார்ஸ் முந்தியது.
இவ்வளவு நேரம் நாம் பார்த்தது எல்லாம் இந்தியாவில் கார்கள் விற்பனையில் 2வது, 3வது மற்றும் 4வது இடங்களை மாறி மாறி பிடித்துவரும் நிறுவனங்களை ஆகும். முதலிடத்தில் எந்தவொரு இடையூறும் இல்லாமல் மாருதி சுஸுகி (Maruti Suzuki) கால் மேல் கால் போட்டு அமர்ந்துள்ளது. அதேபோல், இவ்வளவு நேரம் நாம் பார்த்தது எல்லாம் கார் நிறுவனங்கள் ஒட்டுமொத்தமாக விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கை ஆகும்.

அதாவது, இதில் கார்ப்பிரேட் நிறுவனங்களுக்கு மொத்தமாக வழங்கப்பட்ட கார்களின் எண்ணிக்கையும் அடங்குகின்றன. இந்தியாவில் சில்லறையாக மக்களுக்கு எத்தனை வாகனங்கள் விற்பனை செய்யப்படுகின்றன என்பதை குறித்து வைத்துக் கொள்ளும் வாஹான் (Vahan) அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி, சில்லறை விற்பனையில் மஹிந்திராவை ஹூண்டாய் முந்துவதுதான் இதில் ஆச்சிரியப்பட வேண்டிய விஷயமாகும்.
மொத்தம் விற்பனை செய்யப்பட்ட 43 ஆயிரத்து 973 ஹூண்டாய் கார்களில் சில்லறையாக விற்பனை செய்யப்பட்டவை 42 ஆயிரத்து 661 ஆகும். அதுவே, மொத்தம் 49 ஆயிரத்து 871 கார்களை விற்பனை செய்துள்ள மஹிந்திரா நிறுவனம் சில்லறை விற்பனையாக வெறும் 41 ஆயிரத்து 476 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் இருந்து இன்னும் குறைவாக, வெறும் 39 ஆயிரத்து 795 கார்கள் மட்டுமே சில்லறையாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதாவது, சில்லறை விற்பனையிலும் மஹிந்திராவை விட டாடா மோட்டார்ஸ் பின்தங்கியே உள்ளது. இதே நிலைமை தான் வரும் மாதங்களுக்கும் தொடரும் போல் தோன்றுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வீழ்ச்சிக்கு காரணம் என்ன? அதேநேரம் மஹிந்திராவின் குறுகிய கால வளர்ச்சிக்கு காரணம் என்ன? என்பதை ஏற்கனவே நமது செய்தித்தளத்தில் விரிவாக ஒரு தொகுப்பில் சமீபத்தில் பார்த்து இருந்தோம். அது, கடந்த ஜூலை மாதத்திலும் தொடர்ந்திருப்பது சற்று ஆச்சிரியத்தை தந்தாலும், நமக்கு பழக்கமாகி விட்டது.


Click it and Unblock the Notifications









