ஸ்கார்பியோ எல்லாம் ஒரம்போ! இனி இந்த காரை பத்தி தான் ஊரே பேசும்!
மஹிந்திரா நிறுவனம் தனது பொலிரோ காரின் புதிய அவதாரத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது. இந்த கார் நீண்ட ஆண்டுகளாக விற்பைனயில் இருக்கும் நிலையில் தற்போது விற்பனையாகி வரும் ஸ்கார்பியோவை விட சிறந்த காராக இதன் வடிவமைப்பு மாற்றியமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் புதிய வடிவமைப்பை பெறப்போகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
மஹிந்திரா நிறுவனம் தனது இந்தியாவில் மிகப்பெரிய எஸ்யூவி வாகன நிறுவனமாக மாறியுள்ளது. தற்போது இந்நிறுவனம் புதிய தலைமுறை மாடல் பொலிரோ காரை உருவாக்கி வருகிறது. அடுத்தாண்டு இந்த பொலிரோ கார் விற்பனைக்காக அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் தற்போது முழுமையாக மூடப்பட்ட வெர்ஷனில் தற்போது இந்திய சாலைகளில் சோதனை செய்யப்பட்டு வருவதை சமூகவலைத்தளங்களில் காண முடிகிறது.

இந்த வீடியோ மற்றும் புகைப்படத்தை பார்க்கும் போது பொலிரோ கார் முற்றிலும் வித்தியாசமான லுக்கில் இரக்கிறது. இந்த கார் கடந்த 25 ஆண்டுகளாக இந்திய மார்கெட்டில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளது. இந்த புதிய அப்டேட்டில் மஹிந்திரா நிறுவனம் இந்த காரின் பாக்ஸி லுக்கை அப்படியே வைத்துள்ளது. ஃபிளாட்டான ரூஃப் லைன் டெயில் பில்லர் எல்லாம் அப்படியே உள்ளது. டிசைன் அப்படியே தற்போது உள்ள பொலிரோ காரிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்.
மஹிந்திராவின் இந்த புதிய பொலிரோ கார் ஸ்கார்பியோ என் காரின் லுக்கை ஒத்தபடி இருக்கிறது. தற்போது சோதனை செய்யப்படும் கார் முற்றிலும் மறைக்கப்பட்ட காராக இருப்பதால் இந்த காரின் டிசைனில் பல அம்சங்களை நம்மால் சரியாக கணிக்க முடியவில்லை. முக்கியமாக இந்த காரின் முகப்பு பகுதியில் லுக் முற்றிலுமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது நமக்கு தெரிகிறது. முக்கியமாக வட்ட வடிவிலான புரேஜெக்டர் ஹெட்லைட்டுகள் இதில் வழங்கப்பட்டுள்ளன.

இது போக ஃபிளார்டு ஆர்ச் வீல்கள், பிளாஷ் பிட்டிங் டோர் ஹேண்டில்கள், மார்டனான லுக், பெரிய அலாய் வீல்கள், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட ஓஆர்விஎம், பின்பக்கம் வெர்டிகலான டெயில் லைட்டும், ஃபிளர்டான ஹிங்குடு டெயில் கேட், மற்ற பின்பக்க டெயில் கேட்டில் ஸ்பேர் வீல் உள்ளிட்ட அம்சங்கள் இந்த காரில் இடம் பெற்றுள்ளது.
மஹிந்திரா நிறுவனம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி என்எஃப்ஏ என்ற புதிய ஃபிளாட்ஃபார்மை வெளியிடப்போகிறது. இது இந்நிறுவனத்தின் புதிய கான்செப்ட் வாகனங்களுக்கு ஒரு அடிதளமாக அமையும். இந்த காரும் இனி அந்த ஃபிளட்ஃபார்மில் தயாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இ்நத காரின் அறிமுகம் குறித்த தகவல்களும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பொலிரோ கார் நீண்ட ஆண்டுகளாக மக்கள் மத்தியில் நம்பிக்கையை பெற்ற காராக இருக்கிறது.இந்த காரை மக்கள் பலர் விரும்பி வாங்கி வருகின்றனர். ஏன் அரசு துறைக்கு கூட இந்த வாகனம் அப்பொழது வாங்கப்பட்டது. இதற்கு இதில் உள்ள பிராக்டிக்கல் அம்சம் முக்கியமான காரணம். புதிய அப்டேட் காரிலும் இந்த அம்சங்கள் இடம் பெறும் என எதிர்பார்ககலாம்.


Click it and Unblock the Notifications









