1.85 டன் சரக்கை ஈஸியா எடுத்துத்து போகலாம்! செலவும் ரொம்ப கம்மி!
மஹிந்திரா நிறுவனம் தனது பொலிரோ மேக்ஸ் பிக்அப் எச்டி 1.9 சிஎன்ஜி வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வாகனம் ரூ11.19 லட்சம் என்ற விலையில் அறிமுகமாகியுள்ளது. இதில் ஓரு முறை சிஎன்ஜியை நிரப்பினால் 400 கி.மீ வரை பயணிக்க முடியும் என தெரிவித்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
மஹிந்திரா நிறுவனம் தனது பொலிரோ பிக்கப் லைன்அப்பில் புதிய வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி பொலிரோ மேக்ஸ் பிக்அப் எச்டி 1.9 சிஎன்ஜி என்ற பெயரில் இந்த வாகனம் அறிமுகமாகியுள்ளது. இதில் 21.5 லிட்டர் டர்போ சார்ஜ்டு சிஎன்ஜி இன்ஜினை அந்நிறுவனம் பொருத்தியுள்ளது. து 82 எச்பி பவர் மற்றம் 220 என்எம் டார்க் திறனை வெளியிடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வாகனம் கமர்ஷியல் பயன்பாட்டில் முழு லோடில் சிறப்பாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாகனத்தில் ஒரு முறை சிஎன்ஜியை ஏற்றினால் 400 கி.மீ வரை பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வாகனத்தில் பவர் ஸ்டியரிங் இருக்கிறது. இதை நீங்கள் அர்பன் மற்றும் செமி அர்பன் ஆகிய செட்டிங்கில் வைத்துக்கொள்ள முடியும். இந்த வாகனம் ரக்கட் பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக லீஃப் ஸ்பிரிங் சஸ்பென்சன் வழங்கப்பட்டுள்ளது. இது இரண்டு ஆக்ஸிலிலும் வழங்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்தில் 16 இன்ச் டயர் பொருத்தப்ப்டடுள்ளது.
இந்த டயர் அனைத்து விதமான சாலைகளிலும் பயணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளுது. இந்த பொலிரோ மேக்ஸ் பிக்கப் எச்டி 1.9 சிஎன்ஜி வாகனம் ஐமேக்ஸ் கனெக்டெட் பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டுள்ளது. இது ரியல் டைம் டெலிமேட்டிக்ஸ், ஃப்யூயல் மானிட்டரிங், டிரிப் டிராக்கிங், இன்ஜின் டையக்னாஸ்டிக்ஸ், வாகன பயன்பாட்டு டேட்டா உள்ளிட்ட விஷயங்கள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த வாகனத்தில் ஏசி வழங்கப்பட்டுள்ளுது. டிரைவர் சீட் உயரத்தை அட்ஜெஸ்ட் செய்ய மடியும். டிரைவர் உடன் கூடுதலாக இரண்டு பேர் இதில் பயணம் செய்யலாம். இந்த வாகனம் தற்போது உள்ள வாகனத்தை விட சிறப்பானதாகவும், இதை மக்கள் விரும்பி வாங்கும் வகையில் வடிவமைத்துள்ளனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சரக்கு வாகனங்கள் இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருக்கும். இந்நிலையில் இந்த வாகனம் குறைவான பட்ஜெட்டில் அதிக தூரம் பயணிக்கும் வாகனமாக இருப்பதால் மக்கள் பலர் இந்த வாகனத்தை வாங்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இந்த வாகனம் குறித்த
உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications








