9 பேர் போற காரின் விலை தரமட்டத்துக்கு குறையுது! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷம் ஷோரூம்லதான் இருப்பீங்க!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மஹிந்திரா பொலிரோ (Mahindra Bolero). மஹிந்திரா பொலிரோ விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு 25 வருடங்கள் கடந்து விட்டன (கடந்த 2000ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்தான் மஹிந்திரா பொலிரோ முதன் முதலில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது).

ஆனால் இன்னமும் மஹிந்திரா பொலிரோ காரின் விற்பனை மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது. இதற்கு நடப்பு 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதமும் விதிவிலக்கு அல்ல. மஹிந்திரா பொலிரோ காரின் நடப்பு 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), காடிவாடி தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.

Mahindra Bolero Neo Plus

இதன்படி பார்த்தால், மஹிந்திரா பொலிரோ கார் விற்பனையில் 25 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது. அதாவது கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒட்டுமொத்தமாக 6,494 மஹிந்திரா பொலிரோ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. ஆனால் நடப்பு 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த எண்ணிக்கை 8,109 ஆக உயர்ந்துள்ளது.

தற்போதைய நிலையில் மஹிந்திரா பொலிரோ கார் மொத்தம் 3 வெர்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவை மஹிந்திரா பொலிரோ (Mahindra Bolero), மஹிந்திரா பொலிரோ நியோ (Mahindra Bolero Neo) மற்றும் மஹிந்திரா பொலிரோ நியோ ப்ளஸ் (Mahindra Bolero Neo Plus) ஆகியவை ஆகும்.

Mahindra Bolero

இதில், மஹிந்திரா பொலிரோ காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 9.81 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 10.93 லட்ச ரூபாயாக இருக்கிறது. மஹிந்திரா பொலிரோ காரானது, 7 சீட்டர் ஆப்ஷனில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மறுபக்கம் மஹிந்திரா பொலிரோ நியோ காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 9.97 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 12.18 லட்ச ரூபாயாக இருக்கிறது. மஹிந்திரா பொலிரோ நியோ காரும் 7 சீட்டர் ஆப்ஷனில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதே நேரத்தில் மஹிந்திரா பொலிரோ நியோ ப்ளஸ் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 11.41 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 14.06 லட்ச ரூபாயாக இருக்கிறது. மஹிந்திரா பொலிரோ நியோ ப்ளஸ் காரானது 9 சீட்டர் ஆப்ஷனில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அத்துடன் மஹிந்திரா பொலிரோ நியோ ப்ளஸ் காரில், 5 சீட்டர் ஆம்புலன்ஸ் வேரியண்ட் ஒன்றும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த செய்தியில் நாங்கள் கூறியுள்ள அனைத்துமே மஹிந்திரா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் தற்போது குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். ஆனால் ஜிஎஸ்டி (GST) குறைக்கப்பட்டுள்ள காரணத்தால், மஹிந்திரா பொலிரோ காரின் விலை அதிகபட்சமாக 1.14 லட்ச ரூபாய் வரை குறையவுள்ளது.

அதே நேரத்தில் மஹிந்திரா பொலிரோ நியோ காரின் விலை அதிகபட்சமாக 1.27 லட்ச ரூபாய் வரை குறையவுள்ளது. மறுபக்கம் மஹிந்திரா பொலிரோ நியோ ப்ளஸ் காரின் விலை அதிகபட்சமாக 1.15 லட்ச ரூபாய் வரை குறையவுள்ளது. எனவே இனி வரும் மாதங்களில் மஹிந்திரா பொலிரோ காரின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை உயர்வதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: அதிகம் பேர் பயணம் செய்ய கூடிய வகையில் ஒரு முரட்டுத்தனமான எஸ்யூவி ரக காரை வாங்க வேண்டும் என நினைத்து கொண்டுள்ள இந்திய வாடிக்கையாளர்களுக்கு மஹிந்திரா பொலிரோ நல்ல ஆப்ஷன் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 16, 2025, 14:12 [IST]
English summary
Mahindra bolero sales report august 2025 25 per cent growth
மேலும்... #mahindra #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+