ஒரே காரில் 9 பேரை ஒன்னா ஏத்தீட்டு போலாம்! விலை இவ்ளோதானா! இன்னும் எத்தன வருஷம் ஆனாலும் இதை அடிச்சுக்க முடியாது
இந்திய சந்தையில் எஸ்யூவி ரக கார்களுக்கு (SUV Cars), வாடிக்கையாளர்கள் மத்தியில் எப்போதுமே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அப்படி இந்திய வாடிக்கையாளர்களை அதிக அளவில் கவர்ந்து வரும் எஸ்யூவி ரக கார்களில் ஒன்றாக மஹிந்திரா பொலிரோ (Mahindra Bolero) திகழ்கிறது.
இந்திய சந்தையில் மஹிந்திரா பொலிரோ கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு சுமார் 25 வருடங்கள் கடந்து விட்டன. சரியாக சொல்வதென்றால், கடந்த 2000ம் வருடம் ஆகஸ்ட் மாதம் 4ம் தேதிதான் மஹிந்திரா பொலிரோ கார், இந்திய சந்தையில் முதன் முதலில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

அறிமுகம் செய்யப்பட்ட கால் நூற்றாண்டு காலம் கடந்திருந்தாலும் கூட, இன்னமும் மஹிந்திரா பொலிரோ காரின் விற்பனை மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது. இதற்கு நடப்பு 2025ம் ஆண்டு ஜூலை மாதமும் விதிவிலக்கு அல்ல. மஹிந்திரா பொலிரோ காரின் நடப்பு 2025ம் ஆண்டு ஜூலை மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது.
AUTO PUNDITZ தளத்தில் வெளியாகியுள்ள இந்த சேல்ஸ் ரிப்போர்ட்படி பார்த்தால், மஹிந்திரா நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு ஜூலை மாதம் ஒட்டுமொத்தமாக 7,513 பொலிரோ கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. ஆனால் கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் இந்த எண்ணிக்கை வெறும் 6,930 ஆக மட்டுமே இருந்தது.

அதாவது கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2025ம் ஆண்டு ஜூலை மாதத்தில், 583 மஹிந்திரா பொலிரோ கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலமாக மஹிந்திரா பொலிரோ கார் விற்பனையில் 8 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது.
மஹிந்திரா பொலிரோ கார் தற்போதைய நிலையில் மொத்தம் 3 வெர்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவை மஹிந்திரா பொலிரோ, மஹிந்திரா பொலிரோ நியோ (Mahindra Bolero Neo) மற்றும் மஹிந்திரா பொலிரோ நியோ ப்ளஸ் (Mahindra Bolero Neo Plus) ஆகியவை ஆகும்.
இதில், மஹிந்திரா பொலிரோ காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 9.81 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 10.93 லட்ச ரூபாய் ஆகவும் உள்ளது. மஹிந்திரா பொலிரோ கார் 7 சீட்டர் ஆப்ஷனில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மறுபக்கம் மஹிந்திரா பொலிரோ நியோ காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 9.97 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 12.18 லட்ச ரூபாய் ஆகவும் உள்ளது. மஹிந்திரா பொலிரோ காரை போலவே, மஹிந்திரா பொலிரோ நியோ காரும் 7 சீட்டர் ஆப்ஷனில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.
அதே நேரத்தில் மஹிந்திரா பொலிரோ நியோ ப்ளஸ் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 11.41 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 14.06 லட்ச ரூபாய் ஆகவும் உள்ளது. இந்த காரானது, 9 சீட்டர் ஆப்ஷனில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரத்தில் மஹிந்திரா பொலிரோ நியோ ப்ளஸ் காரின் ஆம்புலன்ஸ் வேரியண்ட் 5 சீட்டர் ஆப்ஷனில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: அதிகம் பேர் பயணம் செய்ய கூடிய வகையில் ஒரு கம்பீரமான எஸ்யூவி ரக காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு மஹிந்திரா பொலிரோ ஏற்றது என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து. மிக கடினமான நிலப்பரப்புகளையும் எளிதாக கடக்க கூடிய திறனை முரட்டுத்தனமான தோற்றம் கொண்ட மஹிந்திரா பொலிரோ கார் பெற்றுள்ளது. இது இந்த காரின் மிக முக்கியமான ப்ளஸ் பாயிண்ட்களில் ஒன்றாகும்.


Click it and Unblock the Notifications








