9 சீட்டர்! 3 குடும்பம் ஒரே கார்ல ஒன்னா போகலாம்! ஆனா விலை இவ்ளோதானா!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மஹிந்திரா பொலிரோ (Mahindra Bolero). இதன் நடப்பு 2025ம் ஆண்டு ஜூன் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால், மஹிந்திரா பொலிரோ காரின் விற்பனை 2 சதவீதம் உயர்ந்துள்ளது.
அதாவது கடந்த 2024ம் ஆண்டு ஜூன் மாதம் 7,365 மஹிந்திரா பொலிரோ கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. இந்த எண்ணிக்கை நடப்பு 2025ம் ஆண்டு ஜூன் மாதம் 7,478 என சற்றே உயர்ந்துள்ளது. இது 2 சதவீத வளர்ச்சி ஆகும். மஹிந்திரா பொலிரோ கார் தற்போதைய நிலையில் மொத்தம் 3 மாடல்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அவை மஹிந்திரா பொலிரோ, மஹிந்திரா பொலிரோ நியோ மற்றும் மஹிந்திரா பொலிரோ நியோ ப்ளஸ் ஆகியவை ஆகும். இதில், மஹிந்திரா பொலிரோ 7 சீட்டர் ஆப்ஷனில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் ஆரம்ப விலை 9.81 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 10.93 லட்ச ரூபாய் ஆகவும் உள்ளது.
அதே நேரத்தில் மஹிந்திரா பொலிரோ நியோவும் 7 சீட்டர் ஆப்ஷனில்தான் விற்பனையாகி கொண்டுள்ளது. இதன் ஆரம்ப விலை 9.97 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 12.17 லட்ச ரூபாய் ஆகவும் உள்ளது. மறுபக்கம் மஹிந்திரா பொலிரோ நியோ ப்ளஸ் 9 சீட்டர் ஆப்ஷனில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதன் ஆரம்ப விலை 11.41 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 12.51 லட்ச ரூபாய் ஆகவும் இருக்கிறது. மஹிந்திரா பொலிரோ நியோ ப்ளஸ் மாடலில் ஆம்புலன்ஸ் வேரியண்ட் ஒன்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது 5 சீட்டர் ஆகும். இதன் விலை 14.06 லட்ச ரூபாயாக இருக்கிறது.
இவை அனைத்துமே எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். மஹிந்திரா பொலிரோ காரின் 3 மாடல்களிலும், டீசல் இன்ஜின் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த காரில் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் கிடையாது. இருப்பினும் விற்பனை சிறப்பாக இருந்து வருவதை, தற்போது வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட் உறுதி செய்கிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: அதிகம் பேர் பயணம் செய்ய கூடிய வகையில் ஒரு கம்பீரமான எஸ்யூவி ரக காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு, மஹிந்திரா பொலிரோ ஏற்றதாக இருக்கும் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து. மஹிந்திரா பொலிரோ விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாகி விட்டன.
இது இந்திய சந்தையில் கடந்த 2000ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட கார் ஆகும். ஆனால் தொடர்ச்சியான அப்டேட்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், இன்றளவும் மஹிந்திரா பொலிரோ காரின் விற்பனை மிகவும் சிறப்பாக இருக்கிறது. இது தற்போதைய நிலையில் மிகவும் அதிகமாக விற்பனையாகி வரும் மஹிந்திரா கார்களில் ஒன்றாகும். இதன் மூலம் மஹிந்திரா நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கையை உயர்த்துவதில், பொலிரோ மிக முக்கியமான பங்களிப்பை வழங்கி வருகிறது.


Click it and Unblock the Notifications








