9 பேர் போற காரை அடி மாட்டு ரேட்ல வித்து தள்றாங்க! மக்கள் எதோ செல்போன் வாங்கற மாதிரி வாங்கீட்டு போறாங்க!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மஹிந்திரா பொலிரோ (Mahindra Bolero). மஹிந்திரா பொலிரோ இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு சுமார் கால் நூற்றாண்டு காலம் கடந்து விட்டது. கடந்த 2000ம் ஆண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட மஹிந்திரா பொலிரோ இன்றளவும், வாடிக்கையாளர்களின் விருப்பமான கார்களில் ஒன்றாக இருக்கிறது.

இதன் காரணமாக ஒவ்வொரு மாதமும் மிகவும் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை மஹிந்திரா பொலிரோ பதிவு செய்து வருகிறது. இந்த வரிசையில் நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதமும் மஹிந்திரா பொலிரோ காரின் விற்பனை மிகவும் சிறப்பாக இருந்துள்ளது. காடிவாடி தளத்தில் வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) மூலமாக நமக்கு இந்த தகவல் தெரிய வந்துள்ளது.

Mahindra Bolero Neo Plus

இதன்படி பார்த்தால், மஹிந்திரா நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒட்டுமொத்தமாக 14,343 பொலிரோ கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒட்டுமொத்தமாக வெறும் 9,849 மஹிந்திரா பொலிரோ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன.

அதாவது கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், 4,494 மஹிந்திரா பொலிரோ கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலமாக மஹிந்திரா பொலிரோ கார் விற்பனையில் 46 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது.

Mahindra Bolero

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மஹிந்திரா பொலிரோ கார் மொத்தம் 3 வெர்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில், மஹிந்திரா பொலிரோ ஒன்றாகும். இதன் ஆரம்ப விலை வெறும் 7.99 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 9.69 லட்ச ரூபாயாக இருக்கிறது. இது 7 சீட்டர் ஆப்ஷனில் மட்டும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த காரின் மற்றொரு வெர்ஷன், மஹிந்திரா பொலிரோ நியோ (Mahindra Bolero Neo) ஆகும். இதன் ஆரம்ப விலை 8.49 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 10.49 லட்ச ரூபாயாக இருக்கிறது. இதுவும் 7 சீட்டர் ஆப்ஷனில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த காரின் கடைசி வெர்ஷன், மஹிந்திரா பொலிரோ நியோ ப்ளஸ் (Mahindra Bolero Neo Plus) ஆகும். இதன் ஆரம்ப விலை 10.77 லட்ச ரூபாயாக இருக்கிறது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 12.90 லட்ச ரூபாயாக உள்ளது. இது 9 சீட்டர் ஆப்ஷனில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அத்துடன் 5 சீட்டர் மாடலில் ஆம்புலன்ஸ் வேரியண்ட்டும் ஒன்றும் மஹிந்திரா பொலிரோ நியோ ப்ளஸ் வெர்ஷனில் கிடைக்கிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். மேலும் இந்த செய்தியில் நாங்கள் கூறியுள்ள அனைத்துமே மஹிந்திரா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மஹிந்திரா பொலிரோ வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பு ஆகும். இதன் காரணமாகவே அறிமுகம் செய்யப்பட்டு 25 வருடங்களை கடந்த பின்னரும் கூட, தற்போதும் பிரம்மாண்டமான விற்பனை எண்ணிக்கையை மஹிந்திரா பொலிரோ பதிவு செய்து வருகிறது என நாங்கள் கருதுகிறோம்.

More from DriveSpark

Article Published On: Friday, November 14, 2025, 14:17 [IST]
English summary
Mahindra bolero sales report october 2025 46 per cent growth
மேலும்... #mahindra #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+