அடி மாட்டு விலையில் விற்கப்படும் 9 சீட்டர் கார்! எவ்ளோ பெரிய குடும்பமா இருந்தாலும் ஒன்னா உக்காந்து போகலாம்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மஹிந்திரா பொலிரோ (Mahindra Bolero). இந்த காரின் நடப்பு 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால் மஹிந்திரா நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 8,690 பொலிரோ கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கையானது, கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10,113 ஆக இருந்தது. அதாவது 1,423 கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இது 14.07 சதவீத வீழ்ச்சியாகும். வருடாந்திர ரீதியில் பார்த்தால் மஹிந்திரா பொலிரோ கார் விற்பனையில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. மறுபக்கம் மாதாந்திர ரீதியில் பார்த்தாலும் மஹிந்திரா பொலிரோ கார் பெரிய அளவில் சோபிக்கவில்லை. அதாவது நடப்பு 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 8,682 மஹிந்திரா பொலிரோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

Mahindra Bolero

ஆனால் அதன்பின் வந்த பிப்ரவரி மாதம் இந்த எண்ணிக்கை 8,690 ஆக உயர்ந்தது. அதாவது 8 கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 0.09 சதவீத வளர்ச்சி ஆகும். இந்த புள்ளி விபரங்கள் நடப்பு 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மஹிந்திரா பொலிரோவிற்கு நன்றாக செல்லவில்லை என்பதை காட்டுகின்றன.

இருப்பினும் வரும் மாதங்களில் மஹிந்திரா பொலிரோ கார் விற்பனையில் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்யும் என நாம் எதிர்பார்க்கலாம். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் பொலிரோ, பொலிரோ நியோ மற்றும் பொலிரோ நியோ ப்ளஸ் என இந்த காரில் மொத்தம் 3 வெர்ஷன்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

Mahindra Bolero Neo Seat

இதில், பொலிரோ கார் 9.79 லட்ச ரூபாய் முதல் 10.91 லட்ச ரூபாய் வரையிலான விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபக்கம் பொலிரோ நியோ காரானது 9.95 லட்ச ரூபாய் முதல் 12.15 லட்ச ரூபாய் வரையிலான விலைகளில் விற்பனையாகி கொண்டுள்ளது.

அதே நேரத்தில் பொலிரோ நியோ ப்ளஸ் காரானது, 11.39 லட்ச ரூபாய் முதல் 14.04 லட்ச ரூபாய் வரையிலான விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவை அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இந்த விலைக்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக மஹிந்திரா பொலிரோ கார் கருதப்படுகிறது.

மஹிந்திரா பொலிரோ காரானது, 5 சீட்டர் (ஆம்புலன்ஸ்), 7 சீட்டர் மற்றும் 9 சீட்டர் உள்ளிட்ட ஆப்ஷன்களில் கிடைக்கிறது. எனவே அதிகம் பேர் பயணம் செய்ய கூடிய வகையிலான ஒரு காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு மஹிந்திரா பொலிரோ ஏற்றதாக இருக்கும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மஹிந்திரா பொலிரோ முரட்டுத்தனமான கார்களில் ஒன்று. நடைமுறை பயன்பாட்டிற்கு ஏற்ற இந்த காரின் ஆஃப்-ரோடு திறன்களும் புகழ் பெற்றவையாக உள்ளன. அத்துடன் ஓரளவிற்கு விலை குறைவானது என்பதும், மஹிந்திரா பொலிரோ காரின் ப்ளஸ் பாயிண்ட்களில் ஒன்றாக இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 25, 2025, 23:55 [IST]
English summary
Mahindra bolero suv sales report february 2025 full details here
மேலும்... #mahindra #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+