மஹிந்திரா கார்கள் என்றால் மட்டும் எங்கிருந்துதான் இவ்வளவு கூட்டம் வருதோ... கடல் கடந்து போகுது!!

மஹிந்திரா (Mahindra), இந்தியாவின் முன்னணி எஸ்யூவி (SUV) மற்றும் கமர்ஷியல் வாகன உற்பத்தி நிறுவனம் என்பதை நான் கூற வேண்டியது இல்லை. குறிப்பாக, கடந்த சில மாதங்களாக மஹிந்திரா கார்கள் விற்பனை சிறப்பாக இருந்து வருகிறது. அதே சிறப்புடன் 2024ஆம் ஆண்டை முடித்துக் கொண்டுள்ள மஹிந்திரா, கடந்த டிசம்பர் மாத விற்பனையிலும் கணிசமான முன்னேற்றத்தை 2023 டிசம்பர் உடன் ஒப்பிடுகையில் கண்டுள்ளது. இதைவிட முக்கியமாக, மஹிந்திரா கார்கள் ஏற்றுமதி ஆனது சுமார் 70% அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கார்கள் விற்பனையில் மாருதி சுஸுகி, ஹூண்டாய் மற்றும் டாடா மோட்டார்ஸுக்கு அடுத்து 4வது மிக பெரும் கார் நிறுவனமாக மஹிந்திரா விளங்குகிறது. மஹிந்திராவில் இருந்து நடந்து முடிந்த 2024 டிசம்பர் மாதத்தில் மொத்தம் 41 ஆயிரத்து 424 கார்களை மஹிந்திரா விற்பனை செய்துள்ளது. 2023 டிசம்பரில் மஹிந்திரா விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கையை காட்டிலும் இது 17.78% அதிகமாகும்.

mahindra cars exports increased

ஏனெனில், அந்த மாதத்தில் வெறும் 35 ஆயிரத்து 171 கார்களை மட்டுமே மஹிந்திரா விற்பனை செய்திருந்தது. ஆனால், கடந்த 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், டிசம்பரில் 4,798 கார்களை மஹிந்திரா குறைவாக விற்பனை செய்துள்ளது. ஏனென்றால், அந்த மாதத்தில் 46 ஆயிரத்து 222 கார்கள் விற்பனை உடன் டாடா மோட்டார்ஸை முந்தி 3வது இடத்தை மஹிந்திரா பிடித்திருந்தது.

ஒட்டுமொத்தமாக, கடந்த 2024ஆம் ஆண்டின் கடைசி 3 மாதங்களில் 1 லட்சத்து 42 ஆயிரத்து 150 கார்களை மஹிந்திரா இந்தியாவில் விற்பனை செய்துள்ளது. இது, 2023ஆம் ஆண்டின் கடைசி 3 மாதங்களில் மஹிந்திரா விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கையை காட்டிலும் 19.59% அதிகமாகும். ஏனெனில், அந்த ஆண்டில் 1 லட்சத்து 18 ஆயிரத்து 860 கார்களை மட்டுமே மஹிந்திரா விற்பனை செய்திருந்தது.

mahindra cars exports increased

கடந்த 2024ஆம் ஆண்டில் மே மாதத்தில் எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ கார் அறிமுகம் செய்யப்பட்டதற்கு பிறகு தான் மஹிந்திரா கார்கள் விற்பனை மேலும் அதிகரிக்க ஆரம்பித்தது. கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து டிசம்பர் மாதம் வரையில் இந்த 8 மாத காலத்தில் மொத்தமாக 4 லட்சத்து 2 ஆயிரத்து 360 கார்களை மஹிந்திரா இந்தியாவில் விற்பனை செய்துள்ளது.

அதுவே, 2023ஆம் ஆண்டில் இதே கடைசி 8 மாதங்களில் 3 லட்சத்து 33 ஆயிரத்து 764 கார்களை மட்டுமே மஹிந்திரா உள்நாட்டில் விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் பார்த்தால், கடந்த 8 மாதங்களில் மஹிந்திரா கார்கள் விற்பனை ஆனது 21% அதிகரித்துள்ளது. இவ்வளவு நேரம் நாம் பார்த்தது எல்லாம், இந்தியாவில் மஹிந்திரா விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கை ஆகும்.

mahindra cars exports increased

வெளிநாட்டிற்கும் மஹிந்திரா இந்தியாவில் இருந்து கார்களை ஏற்றுமதி செய்கிறது. அந்த வகையில் பார்த்தால், கடந்த டிசம்பர் மாதத்தில் மொத்தம் 3 ஆயிரத்து 92 கார்களை இந்தியாவில் உற்பத்தி செய்து மஹிந்திரா வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. ஆனால், 2023 டிசம்பரில் இதனை காட்டிலும் சுமார் 70% குறைவாக ஆயிரத்து 819 கார்களை மட்டுமே மஹிந்திரா ஏற்றுமதி செய்திருந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வாறு மஹிந்திரா கார்கள் விற்பனை ஒருபக்கம் அதிகரித்து வரும் நிலையில், மறுப்பக்கம் மஹிந்திரா கமர்ஷியல் வாகனங்களின் விற்பனை கணிசமாக குறைந்து வருகிறது. குறிப்பாக, 2 டன்களுக்கும் குறைவான எடை கொண்ட கமர்ஷியல் வாகனங்களின் விற்பனை ஆனது 10- 15% குறைந்துள்ளது. இதனை சரி செய்வதற்கான வேலைகளிலும் மஹிந்திரா ஈடுப்பட்டு வருகிறது என நம்புகிறோம்.

More from DriveSpark

Article Published On: Friday, January 3, 2025, 12:19 [IST]
English summary
Mahindra cars exports increased by 70 percent check all details here
மேலும்... #mahindra #car sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X