மஹிந்திரா கார்கள் விற்பனை படு ஜோர்... தார் வாகனத்தை வாங்க மக்கள் போட்டா போட்டி!!

மஹிந்திரா (Mahindra), கார்கள் விற்பனையில் கடந்த சில மாதங்களில் பெரிய அளவில் முன்னேற்றம் கண்டுவரும் நிறுவனம். குறிப்பாக, கடந்த 2024ஆம் ஆண்டின் கடைசி 2 மாதங்களில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான கார்களை விற்பனை செய்து அசத்தி உள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் எந்தெந்த மஹிந்திரா கார்கள் எத்தனை யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்பதை பற்றி இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம், வாங்க.

இந்தியாவில் கார்கள் விற்பனையில் மாருதி சுஸுகி, ஹூண்டாய், டாடா மோட்டார்ஸ் நிறுவனங்களுக்கு அடுத்து 4வது பெரிய கார் நிறுவனமாக விளங்குகிறது. கடந்த டிசம்பர் மாதத்தில் மொத்தம் 41 ஆயிரத்து 424 கார்களை மஹிந்திரா நிறுவனம் விற்பனை செய்துள்ளது. அதுவே, 2023 டிசம்பர் மாதத்தில் 35 ஆயிரத்து 171 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது.

Mahindra Cars Model Wise Sales Report

இந்த வகையில் பார்த்தால், மஹிந்திரா கார்கள் விற்பனை ஆனது 17.78% அதிகரித்துள்ளது. அதாவது, 2023 டிசம்பரை காட்டிலும் 2024 டிசம்பரில் 6 ஆயிரத்து 253 மஹிந்திரா கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், 2024 நவம்பரில் 46 ஆயிரத்து 222 கார்களை மஹிந்திரா விற்பனை செய்து இருந்தது. இதன்படி பார்த்தால், நவம்பரை காட்டிலும் டிசம்பரில் 4 ஆயிரத்து 798 கார்களை மஹிந்திரா குறைவாக விற்பனை செய்துள்ளது.

நவம்பர் மாதத்தில் தொடர்ச்சியாக வந்த பண்டிகை நாட்கள் இதற்கு முக்கிய காரணமாகும். கடந்த டிசம்பர் மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட மஹிந்திரா கார் ஸ்கார்பியோ (Scorpio) ஆகும். கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட ஸ்கார்பியோ கார்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 195 ஆகும். அதுவே 2023 டிசம்பரில் 11 ஆயிரத்து 355 ஸ்கார்பியோ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

2023 நவம்பரில் 12 ஆயிரத்து 704 ஸ்கார்பியோ கார்களை மஹிந்திரா விற்பனை செய்து இருந்தது. ஸ்கார்பியோவுக்கு அடுத்து இந்த வரிசையில் 2வது இடத்தில் தார்/ ராக்ஸ் உள்ளது. பொதுவாக இந்த இடத்தை எக்ஸ்யூவி700 கார் தான் பிடிப்பது வழக்கம். ஆனால், இந்த முறை எக்ஸ்யூவி700 காரை முந்தி தார் 2வது இடத்தை தனதாக்கி உள்ளது.

கடந்த டிசம்பர் மாதத்தில் 7 ஆயிரத்து 659 தார் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2023 டிசம்பரில் 5,793 தார் வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. ஏனெனில் அந்த சமயத்தில் தார் ராக்ஸ் 5-கதவு வாகனம் விற்பனையில் இல்லை. 3வது இடத்தில் உள்ள எக்ஸ்யூவி700 கடந்த மாதத்தில் 7,337 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 2023 டிசம்பரில் 5,881 எக்ஸ்யூவி700 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

4வது இடத்தில் எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஒ கார் 7 ஆயிரம் கார்கள் விற்பனை உடன் உள்ளன. 2023 டிசம்பர் சமயத்தில் அந்த சமயத்தில் விற்பனையில் இருந்த எக்ஸ்யூவி300 கார் வெறும் 3,550 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தது. ஆனால், 2024 நவம்பர் 7,656 எக்ஸ்யூஇ 3எக்ஸ்.ஓ கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வரிசையில் 5வது இடத்தில் பொலேரோ 5,921 யூனிட்கள் விற்பனை உடன் உள்ளது.

2023 டிசம்பரில் 7,995 பொலேரோ கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. 2024 நவம்பரிலும் 7,045 பொலேரோ கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. மஹிந்திராவின் எலக்ட்ரிக் காரான எக்ஸ்யூவி400 இவி இந்த வரிசையில் 6வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட எக்ஸ்யூவி400 இவி எலக்ட்ரிக் கார்களின் எண்ணிக்கை 1,296 ஆகும். இவை இல்லாமல், 16 மராஸ்ஸோ கார்களையும் கடந்த மாதத்தில் மஹிந்திரா விற்பனை செய்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கடந்த ஆண்டில் எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ கார் அறிமுகம் செய்யப்பட்டதற்கு பிறகு மஹிந்திராவின் ரேஞ்சே மாறிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அது கடந்த டிசம்பர் மாதத்திலும் தொடர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் பிஇ 6 மற்றும் எக்ஸ்இவி 9இ என்கிற புதிய எலக்ட்ரிக் கார்களையும் அறிமுகம் செய்துள்ளதால், மஹிந்திரா நிறுவனத்தின் விற்பனை வரும் மாதங்களில் மேலும் அதிகரிக்கும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, January 15, 2025, 13:00 [IST]
English summary
Mahindra cars model wise sales report december 2024
மேலும்... #mahindra #car sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+