மாதத்திற்கு மாதம் கஸ்டமர்ஸ் அதிகமாகிட்டே போறாங்க! மஹிந்திராவுக்கு கூரையை பிச்சிக்கிட்டு கொட்டும் வருவாய்!!

மஹிந்திரா & மஹிந்திரா (Mahindra & Mahindra) நிறுவனம் 2025 நவம்பர் மாதத்தில் சிறப்பான விற்பனையைப் பதிவு செய்துள்ளது. ஏற்றுமதியுடன் அதன் மொத்த வாகன விற்பனை 92,670 யூனிட்டுகளை எட்டி, 2024 நவம்பரை காட்டிலும் 19% வளர்ச்சி கண்டுள்ளது. எஸ்யூவி (SUV) கார்களுக்கான தேவை, விரிவடையும் எலெக்ட்ரிக் கார்களின் வரிசை மற்றும் கமர்ஷியல் வாகனங்களின் நிலையான ஆதரவு இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணங்கள் ஆகும்.

2025 நவம்பரில், மஹிந்திராவின் உள்நாட்டு கார்கள் விற்பனை 56,336 யூனிட்டுகளாக இருந்தது (கடந்த ஆண்டின் நவம்பரில் 46,222 யூனிட்டுகளை விட 22% அதிகம்). ஏற்றுமதியுடன் சேர்த்து, கடந்த நவம்பர் மாதத்தில் 57,598 மஹிந்திரா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. நடப்பு 2025-26 நிதியாண்டில் இதுவரையிலான மஹிந்திரா கார்கள் விற்பனை 4,25,530 யூனிட்டுகளாக உயர்ந்து, முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 18% வளர்ச்சியை கண்டுள்ளது.

mahindra cars sales report

மேலும், மஹிந்திராவின் கமர்ஷியல் வாகனப் விற்பனையும் முன்னேற்றம் கண்டுள்ளது. 2 டன்களுக்கும் குறைவான எடை கொண்ட இலகு ரக வர்த்தக வாகனங்கள் (LCV) 3,255 யூனிட்கள் (2024 நவம்பரை விட 5% உயர்வு) விற்கப்பட்டு உள்ளது. 2- 3.5 டன்களில் எடை கொண்ட LCV வாகன பிரிவில் பொலிரோ மேக்ஸ் PUP HD 1.9, HD 2.0 வாகனங்களுடன் 21,588 யூனிட்கள் (20% உயர்வு) என்கிற வலுவான விற்பனையை மஹிந்திரா பதிவு செய்துள்ளது.

எலெக்ட்ரிக் மூன்று சக்கர வாகனங்கள் உட்பட, மஹிந்திராவின் மூன்று சக்கர வாகனப் பிரிவு 8,568 யூனிட்கள் (7% உயர்வு) விற்பனையை கடந்த மாதத்தில் பதிவு செய்துள்ளது. நடப்பு நிதியாண்டில் மூன்று சக்கர வாகன விற்பனை 28% அதிகரித்து, கடைசி மைல் போக்குவரத்தில் வலுவான தேவையை உணர்த்தியுள்ளது.

mahindra cars sales report

இவற்றுடன், மஹிந்திராவின் கடந்த மாத ஏற்றுமதியும் சிறப்பாக இருந்தது. 2025 நவம்பரில் 2,923 வாகனங்களை இந்த நிறுவனம் ஏற்றுமதி செய்துள்ளது (2024 நவம்பரை விட 5% உயர்வு). நடப்பு 2025-26 நிதியாண்டில் இதுவரையிலான மஹிந்திரா வாகனங்களின் ஏற்றுமதிகள் 27,241 யூனிட்டுகளுடன் 2024 நவம்பரை விட 30% உயர்ந்துள்ளன.

மஹிந்திராவின் வாகனப் பிரிவு தலைமைச் செயல் அதிகாரி நளினிகாந்த் கொல்லகுண்டா, கடந்த நவம்பர் மாத விற்பனை குறித்து கூறுகையில், "நவம்பரில் நாங்கள் 56,336 யூனிட் எஸ்யூவி கார்கள் விற்பனையை அடைந்து 22% வளர்ச்சியைக் கண்டுள்ளோம். மொத்த வாகன விற்பனை 92,670 யூனிட்டுகளாக உள்ளது, இது ஆண்டுக்கு ஆண்டு 19% வளர்ச்சி ஆகும்" என்று குறிப்பிட்டார்.

mahindra cars sales report

மேலும் அவர், "எங்களின் எலக்ட்ரிக் ஆரிஜின் எஸ்யூவி கார்களின் ஓராண்டு நிறைவைக் கொண்டாடினோம். இந்தியாவின் முதல் 7 இருக்கை எலக்ட்ரிக் எஸ்யூவி காராக எக்ஸ்இவி 9எஸ் (XEV 9S) மற்றும் உலகின் முதல் ஃபார்முலா இ தீம் கொண்ட மஹிந்திரா பிஇ 6 ஃபார்முலா இ எடிஷன் (BE 6 Formula e Edition) ஆகியவற்றையும் அறிமுகப்படுத்தினோம்" என்று தெரிவித்தார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திராவின் மொத்த விற்பனையான 92,670 யூனிட்டுகளில் எஸ்யூவி கார்கள், 3.5 டன் வரையிலான LCVகள், மூன்று சக்கர வாகனங்கள் (மின்சார மாடல்கள் உட்பட) மற்றும் வெளிநாட்டு ஏற்றுமதி என அனைத்தும் அடங்குகின்றன. இந்தியாவின் வருட இறுதி பண்டிகை காலங்கள் முடிந்துவிட்டாலும், ஜிஎஸ்டி 2.0 திருத்தத்தினால் வரும் மாதங்களிலும் மஹிந்திரா கார்களின் விற்பனை சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.

More from DriveSpark

Article Published On: Monday, December 1, 2025, 16:28 [IST]
English summary
Mahindra cars sales report of november 2025 check all details here
மேலும்... #mahindra #car sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X