ஜிஎஸ்டி குறைத்ததன் எதிரொலி... மஹிந்திரா கார் ஷோரூம்களுக்கு படையெடுக்கும் மக்கள்!!
மஹிந்திரா (Mahindra) நிறுவனம், கடந்த 2025 அக்டோபர் மாதத்தில் இதுவரை இல்லாத அளவு அதிக எஸ்யூவி கார்கள் விற்பனையைப் பதிவு செய்துள்ளது. அதன் மூலமாக, பயணிகள் கார் விற்பனையில் மாருதி சுஸுகிக்கு அடுத்து இரண்டாவது பெரிய நிறுவனமாக மஹிந்திரா திகழ்கிறது. மஹிந்திராவின் கடந்த மாத உள்நாட்டு கார்கள் விற்பனை எண்ணிக்கை இதுவரையில் எந்தவொரு மாதத்திலும் இல்லாத உட்சமாக 71 ஆயிரத்து 624 யூனிட்டுகளாக உயர்ந்துள்ளது.
இது, 2024 அக்டோபரில் மஹிந்திரா விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கையை காட்டிலும் 31% அதிகரிப்பாகும். அதேபோல், 2025 செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையிலும், மஹிந்திராவின் கடந்த மாத உள்நாட்டு கார்கள் விற்பனை 27% அதிகரித்துள்ளது. பண்டிகைக் கால தேவை அதிகரிப்பு மற்றும் ஜி.எஸ்.டி குறைப்பு ஆகியவை இந்த அபார வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன.

இதன் எதிரொலியாக, கடந்த ஆண்டு அக்டோபரில் 13.7% ஆக இருந்த கார்கள் சந்தையில் மஹிந்திராவின் பங்கு, கடந்த அக்டோபரில் 1.6% அதிகரித்து 15.3% ஆக உயர்ந்துள்ளது. மஹிந்திராவின் ஸ்கார்ப்பியோ, பொலிரோ, எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ கார்கள் மற்றும் தார் போன்ற முக்கிய வாகனங்கள் இந்த விற்பனை வேகத்தை முன்னெடுத்துச் செல்கின்றன.
தீபாவளியை டார்க்கெட் செய்து கடந்த அக்டோபர் மாதத்தில் புதிய பொலிரோ மற்றும் பொலிரோ நியோ கார்களை மஹிந்திரா அறிமுகம் செய்தது. மேலும், இந்த மாத இறுதியில் மஹிந்திரா தனது புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி காரான எக்ஸ்.இ.வி 9எஸ் (XEV 9s)-ஐ அறிமுகப்படுத்தவுள்ளது. இவ்வாறான புதிய அறிமுகங்களினால், 2024 அக்டோபரில் 54 ஆயிரத்து 504 கார்களை விற்ற மஹிந்திரா, கடந்த அக்டோபர் மாதத்தில் 71 ஆயிரத்து 624 கார்களை விற்றுள்ளது.

2025 செப்டம்பரில் 56 ஆயிரத்து 233 மஹிந்திரா கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. ஸ்கார்பியோ/N கார்கள் கடந்த மாதம் 17 ஆயிரத்து 880 யூனிட்டுகள் விற்பனையாகி, இந்த விற்பனைப் பட்டியலில் முதலிடம் வகிக்கின்றன. ஆனால், 2024 அக்டோபரில் 15 ஆயிரத்து 677 ஸ்கார்பியோ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டதுடன் ஒப்பிடுகையில், கடந்த மாத விற்பனை 14% வளர்ச்சியாகும்.
இருப்பினும், 2025 செப்டம்பரில் விற்கப்பட்ட 18 ஆயிரத்து 372 ஸ்கார்பியோ கார்களுடன் ஒப்பிடுகையில், விற்பனை 3% குறைந்துள்ளது. ஸ்கார்பியோவுக்கு அடுத்து 2வது இடத்தை பிடித்துள்ள பொலிரோ காருக்கு கடந்த மாதத்தில் நல்ல தேவை இருந்தது. கடந்த மாதம் 14 ஆயிரத்து 343 பொலிரோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 2024 அக்டோபரில் விற்கப்பட்ட 9 ஆயிரத்து 849 யூனிட்டுகளுடன் ஒப்பிடுகையில் 46% வளர்ச்சியாகும்.

அதுவே, 2025 செப்டம்பரில் வெறும் 2 ஆயிரத்து 747 பொலிரோ கார்கள் மட்டுமே விற்பனையானதால், அதனுடன் ஒப்பிடுகையில் கடந்த மாத விற்பனை 422% உயர்ந்துள்ளது. மஹிந்திரா நிறுவனத்தின் இந்த விற்பனைப் பட்டியலில் எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ கார் 12 ஆயிரத்து 237 யூனிட்கள் விற்பனை உடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
ஆனால், 2024 அக்டோபரில் 9 ஆயிரத்து 562 யூனிட்டுகளும், 2025 செப்டம்பரில் 9 ஆயிரத்து 32 யூனிட்டுகளும் இந்த மஹிந்திரா கார் விற்பனை செய்யப்பட்ட விற்பனை எண்ணிக்கைகள் உடன் ஒப்பிடுகையில், முறையே 28% மற்றும் 35% வளர்ச்சியாகும். இவை இல்லாமல், 12 ஆயிரத்து 29 தார் வாகனங்கள், 10 ஆயிரத்து 139 எக்ஸ்யூவி700 கார்கள், 2 ஆயிரத்து 708 எக்ஸ்இவி 9இ, 2 ஆயிரத்து 134 பிஇ 6 மற்றும் 152 எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் கார்கள், இரண்டு மராஸ்ஸோ கார்களையும் கடந்த அக்டோபர் மாதத்தில் மஹிந்திரா விற்பனை செய்துள்ளது.

| No | Mahindra Sales | Oct-25 | Oct-24 | Diff | Growth % YoY | Share % Oct 25 |
|---|---|---|---|---|---|---|
| 1 | Scorpio / N | 17,880 | 15,677 | 2,203 | 14.05 | 24.96 |
| 2 | Bolero | 14,343 | 9,849 | 4,494 | 45.63 | 20.03 |
| 3 | XUV 3X0 | 12,237 | 9,562 | 2,675 | 27.98 | 17.09 |
| 4 | Thar / ROXX | 12,029 | 7,944 | 4,085 | 51.42 | 16.79 |
| 5 | XUV 700 | 10,139 | 10,435 | -296 | -2.84 | 14.16 |
| 6 | XEV 9e | 2,708 | 0 | 2,708 | - | 3.78 |
| 7 | BE 6 | 2,134 | 0 | 2,134 | - | 2.98 |
| 8 | XUV 400 | 152 | 1,000 | -848 | -84.80 | 0.21 |
| 9 | Marazzo | 2 | 37 | -35 | -94.59 | 0.00 |
| - | Total | 71,624 | 54,504 | 17,120 | 31.41 | 100.00 |
Source: AUTO PUNDITZ
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஜிஎஸ்டி குறைப்பு மற்றும் பண்டிகை கால தேவை உள்ளிட்டவை தான் திடீரென ஏற்பட்டுள்ள இந்த அதிகப்படியான மஹிந்திரா கார்கள் தேவைக்கு காரணம் என்றாலும், மஹிந்திரா நிறுவனம் 2026/27-க்குள் எட்டு புதிய எஸ்யூவி கார்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டு, தீவிர சோதனை ஓட்டங்களை நடத்தி வருவதால், இந்த இந்திய கார் உற்பத்தி நிறுவனத்தின் விற்பனை வரும் மாதங்களில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications









