இந்திய விவசாயத்துக்கு வர பிரசாதம்... அதற்குள் 11 வருடங்களாகி விட்டதா? உருவாக்குவது யார் தெரியுமா?
இந்தியாவின் முன்னணி டிராக்டர் நிறுவனமான மஹிந்திரா டிராக்டர்ஸ் (Mahindra Tractors), அதன் பிரபலமான 'நோவோ' (NOVO) டிராக்டர்களை அறிமுகம் செய்து 11 ஆண்டுகளை நிறைவு செய்ததைக் கொண்டாடுகிறது. மஹிந்திரா நோவோ டிராக்டர்கள், வலுவான கட்டுமானம், மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் சக்திவாய்ந்த, அதேசமயம் எரிபொருள் சிக்கனமான என்ஜின் ஆப்ஷன்களைக் கொண்டதாக உள்ளன.
அதேபோல், 49 எச்பி முதல் 74 எச்பி வரையிலான பல குதிரைத்திறன் ஆப்ஷன்களில் கிடைக்கும் மஹிந்திரா நோவோ டிராக்டர்கள் உழுதல், உரம் இடுதல், விதைத்தல் மற்றும் போக்குவரத்து என பல்வேறு விவசாயப் பயன்பாடுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. அதிகபட்ச டார்க் மற்றும் சிறந்த பேக்கப் டார்க் மூலம் நோவோ டிராக்டர்கள் பலவிதமான விவசாய கருவிகளுடன் சிறப்பான செயல்பாட்டை வழங்குகின்றன.

நோவோ 605 DI PS, நோவோ 605 DI PP, நோவோ 655 DI PP மற்றும் நோவோ 755 DI PP போன்ற மஹிந்திரா நோவோ டிராக்டர்கள் 2-வீல்-டிரைவ் (2WD) மற்றும் 4-வீல்-டிரைவ் (4WD) வகைகளில் கிடைக்கின்றன. இதில் ஒவ்வொரு மாடலும் குறிப்பிட்ட விவசாய நிலைமைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டு, செயல்திறன், வசதி மற்றும் பல்துறை திறனில் புதிய தரநிலைகளை கொண்டுள்ளன.
இவ்வாறு இந்திய டிராக்டர்கள் துறையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ள நோவோ டிராக்டர்களை முதல்முறையாக அறிமுகம் செய்து 11 வருடங்கள் ஆனதை கொண்டாடும் வகையில், மஹிந்திரா டிராக்டர்ஸ் நிறுவனம் நோவோ டிராக்டர்கள் சீரிஸில் இந்திய விவசாய சூழல்களுக்கேற்ப வடிவமைக்கப்பட்ட பிரீமியம் அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
கிரீப்பர் மோட், எம்பூஸ்ட் (mBoost) தொழில்நுட்பம், ஸ்மார்ட் பேலன்சர் தொழில்நுட்பம் மற்றும் 'QLift' உடன் கூடிய பெரிய லிஃப்ட் ஹைட்ராலிக் சிஸ்டம் ஆகியவை இந்த பிரீமியம் அம்சங்களில் அடங்குகின்றன. இதில், கிரீப்பர் கியர் மோட் ஆனது மணிக்கு 0.3 முதல் 0.4 கி.மீ. என்ற மிகக் குறைந்த வேகத்தில் டிராக்டர் செயல்பட உதவுகிறது.
இதன் மூலம் வெங்காய செடி நடுதல் மற்றும் வாழை கன்றுகளை நடுதல் போன்ற துல்லியமான பணிகளை ரோட்டவேட்டர் போன்ற கருவிகளைப் பயன்படுத்தி செய்ய முடியும். இந்த அம்சம் மென்மையான பயிர்களை கவனமாக கையாளவும் உதவும். இதன் மூலம் சேதத்தைக் குறைத்து மகசூலை அதிகரிக்க முடியும்.
மஹிந்திரா டிராக்டர்களின் எதிர்காலத்திற்கான CRDe என்ஜினைப் பயன்படுத்தி, நோவோ டிராக்டர்கள் மூலம் தொழில்துறையின் முதல் mBoost தொழில்நுட்பத்தை மஹிந்திரா அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அம்சம் மூலம் டீசல் சேவர், நார்மல் மற்றும் பவர் என மூன்று வெவ்வேறு டிரைவ் மோட்களில் டிராக்டரை இயக்கி அவற்றின் செயல்படுதிறனை மேம்படுத்த முடியும். இது பலவிதமான விவசாய மற்றும் வணிக நடவடிக்கைகளுக்கு ஏற்றது ஆகும்.
ஸ்மார்ட் பேலன்சர் தொழில்நுட்பம் ஆனது என்ஜின் சத்தம் மற்றும் அதிர்வுகளைக் குறைத்து, நீண்ட நேரம் வேலை செய்யும்போது கூட அமைதியான மற்றும் வசதியான பயணத்தை உறுதி செய்கிறது. இது ஃபார்வர்ட்-ரிவர்ஸ் (FR) ஷட்டில் உடன் மேம்படுத்தப்பட்டுள்ளது. இது கட்டுமானம், சுரங்கம் மற்றும் பிற தொழில்களில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் லோடர் மற்றும் டோசர் பயன்பாடுகளுக்கு ஏற்றது.
மஹிந்திரா நோவோ டிராக்டர்களில் புதியதாக வழங்கப்பட்டு உள்ள அடுத்த தலைமுறை லிஃப்ட் ஹைட்ராலிக்ஸ் சிஸ்டம் ஆனது 2700 - 2900 கிலோ வரையில் எடை கொண்ட பொருட்களை தூக்கும் திறனை வழங்குகிறது. இதில் உள்ள 'QLift' பட்டன் மூலம் இயங்கும் ஹைட்ராலிக் சிஸ்டம், தடையில்லா செயல்பாடுகளை உறுதி செய்கிறது. இது, பம்ப் ஃப்ளோ, சூப்பர் சீடர்ஸ் மற்றும் உருளைக்கிழங்கு பிளாண்டர்ஸ் போன்ற கனமான கருவிகளை எளிதாக தூக்க உதவுகிறது.
இந்த புதிய அப்டேட்கள் அனைத்தும் 50hp-க்கும் அதிகமான இயக்க ஆற்றலில் இயக்கும் நோவோ டிராக்டர்களில் கிடைக்கும். தற்போது, நோவோ டிராக்டர்கள் அனைத்தும் பிரீமியம் தரத்திலான மெட்டாலிக் ரெட் ஃபினிஷில் வருகிறது. நோவோ டிராக்டர்கள் அனைத்திற்கும் 6 வருட ஸ்டாண்டர்ட் வாரண்டியையும் மஹிந்திரா வழங்குகிறது.
இவற்றுடன், மஹிந்திரா நோவோ டிராக்டர்கள் மஹிந்திராவின் அடுத்த தலைமுறை DigiSense தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளன. இது விவசாயிகள் தங்கள் ஸ்மார்ட்போன்கள் மூலம் டிராக்டர்களை ரிமோட் மூலம் கண்காணிக்க உதவுகிறது. DigiSense மூலம் எரிபொருள் எந்த அளவிற்கு பயன்படுத்தப்படுகிறது, பயிரிடப்பட்ட பகுதி, பயணங்கள் மற்றும் டிராக்டரின் செயல்திறன் பற்றிய தகவல்களை வழங்குகிறது. கூடுதலாக, ஜியோஃபென்சிங் அம்சம் டிராக்டர் வரையறுக்கப்பட்ட எல்லைகளுக்குள் இருப்பதை உறுதி செய்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய விவசாய துறையை சமீப காலத்தில் நவீனமயமாக்கியதில் மஹிந்திரா நோவோவின் பங்களிப்பு முக்கியமானது ஆகும். ஆதலால், இத்தகைய பிரபலமான நோவோ டிராக்டர்களின் 11 ஆண்டு கால நிறைவை கொண்டாடும் விதமாக, நோவோ டிராக்டர்களில் புதிய தொழிற்நுட்ப அம்சங்களை மஹிந்திரா அறிமுகம் செய்து இருப்பது சரியான முடிவாகும்.


Click it and Unblock the Notifications








