சென்னைல நடைபெற்ற பிரமாண்ட கார் டெலிவரி சம்பவம்.. ஒரே நாள், ஒரே நேரம், ஒரே இடத்துல இத்தன பேருக்கு கொடுத்தாங்களா
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் பிரமாண்ட கார் டெலிவரி சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. ஒரே நாள், ஒரே நேரம், ஒரே இடத்தில் பத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு காரை டெலிவரி வழங்கி இருக்கின்றது ஓர் கார் டீலர்ஷிப் நிர்வாகம். மஹிந்திரா (Mahindra) கார் விற்பனையாளரே இந்த அரிய வகை நிகழ்வை அரங்கேற்றி இருக்கின்றார். மஹிந்திராவின் லேட்டஸ்ட் அறிமுகமான எக்ஸ்இவி 9இ (XEV 9e) மற்றும் பிஇ 6 (BE 6) ஆகிய கார் மாடல்களையே டெலிவரி கொடுத்திருக்கின்றனர்.
இரண்டுமே எஸ்யூவி ரக எலெக்ட்ரிக் கார் (SUV Electric Car) மாடல் ஆகும். இந்த காருக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டுள்ளன. இதை உறுதிப்படுத்தும் விதமாக சென்னையில் அரங்கேறிய பிரமாண்ட டெலிவரி சம்பவம் அமைந்திருக்கின்றது.

இதுமட்டுமல்ல, இந்த கார்களுக்கு புக்கிங் பணிகள் தொடங்கிய முதல் நாளிலேயே 30 ஆயிரத்து 179 பேர் புக்கிங் செய்திருந்தனர். எக்ஸ்இவி 9இ மற்றும் பிஇ 6 இந்த இரண்டு கார் மாடலுக்கும் சேர்ந்து கிடைத்த புக்கிங் எண்ணிக்கை இதுவாகும். மேலும், இது நிறுவனத்தால் தெரிவிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ தகவல் ஆகும்.
இந்த நிலையிலேயே சென்னை வாசிகளும் இந்த காரை அதிக பேர் புக்கிங் செய்திருக்கின்றனர் என்பது தெரிய வந்திருக்கின்றது. இதேபோல், பிஇ 6 எலெக்ட்ரிக் கார் மாடலைக் காட்டிலும், எக்ஸ்இவி 9இ மாடல் மீதே இந்தியர்களுக்கு அதிக ஆர்வம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மொத்த புக்கிங்கில் 56 சதவீதம் வரை எக்ஸ்இவி 9இ மாடலுக்கு கிடைத்தவை ஆகும். மீதம் உள்ள 44 சதவீதம் புக்கிங்கே பிஇ 6-க்கானவை ஆகும். இது அவ்வளவு பெரிய வித்தியாசம் இல்லை என்பது கவனிக்கத்தகுந்தது. மஹிந்திரா நிறுவனம் இந்த இரண்டும் எலெக்ட்ரிக் கார்களையும் அதிக அட்வான்ஸ்டு அம்சங்கள் கொண்டதாக தயார் செய்திருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.
எக்ஸ்இவி 9இ: இந்த கார் இந்தியாவில் ரூ. 21.9 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்த காரை கூபே வகை காரை போல காட்சியளிக்கும் வகையிலேயே மஹிந்திரா தயார் செய்திருக்கின்றது.

மிகப் பெரிய உருவம் கொண்ட எஸ்யூவி ரக காராகவும் இந்த காரை மஹிந்திரா ரெடி செய்துள்ளது. 12.3 அங்குல திரை, பின் இருக்கையாளர்களுக்கான பொழுதுபோக்கு திரை, விஷன் எக்ஸ் எச்யூடி திரை, மஹிந்திராவின் ஏஐ வசதி, 7 ஏர் பேக்குகள், லெவல் 2 வகை அடாஸ் அம்சம் மற்றும் 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன.
பிஇ 6: எக்ஸ்இவி 9இ மாடலைக் காட்டிலும் சிறிய காராக இதனை மஹிந்திரா தயார் செய்திருக்கின்றது. இதற்கு அறிமுகமாக ரூ. 18.90லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். மூன்று விதமான வேரியண்டுகளில் இந்த கார் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும். அனைத்தும் பிரீமியம் அம்சங்களை அதிகம் தாங்கிய வேரியண்டுகள் ஆகும். எக்ஸ்இவி 9இ மாடலைப் போலவே அதிக ஆடம்பர அம்சங்களை இது தாங்கி இருக்கும்.

அந்தவகையில், எதிரொளிக்கும் பிஇ லோகோ கொண்ட ஸ்டியரிங் வீல், மிதக்கின்ற ஸ்டைலிலான இரண்டு திரைகள், மெல்லிய ஏசி துவாரங்கள், லெவல் 2 வகை அடாஸ், 360 டிகிரி கேமிரா, பாதுகாப்பான பேட்டரி பேக்குகள், ஏழு ஏர் பேக்குகள் உள்ளிட்ட அம்சங்களே இதில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுமட்டுமல்ல எல்இடி லைட்டுடன் கூடிய கிளாஸ் ரூஃப்-ம் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது.
பேட்டரி பேக் மற்றும் இ-மோட்டார் விபரம்: 59 kWh மற்றும் 79 kWh ஆகிய பேட்டரி பேக் ஆப்ஷன்களே இந்த இரண்டு கார் மாடல்களிலும் வழங்கப்படுகின்றது. முதல் பேட்டரி பேக் ஓர் முழு சார்ஜில் 542 கிமீ ரேஞ்சையும், இரண்டாவது பேட்டரி பேக் ஓர் முழு சார்ஜில் 656 கிமீ ரேஞ்சையும் வழங்கும்.
இப்போதைக்கு இந்த காரில் ரியர் வீல் டிரைவ் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படுகின்றது. விரைவில் அனைத்து வீல் இயக்கம் கொண்ட ஆப்ஷன் வழங்கப்படும் என கூறப்படுகின்றது. இதை உறுதிப்படுத்துகின்ற விதமான தகவல்களே இப்போது வெளியாகிக் கொண்டிருக்கின்றது. எனவே சீக்கிரமே அது விற்பனைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கலாம்.
இரண்டு கார் மாடல்களிலும் இந்த ஆல் வீல் டிரைவ் ஆப்ஷன் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் வாயிலாக உருவத்தில் மட்டுமே இந்த இரண்டு கார் மாடல்களும் வித்தியாசத்துடன் இருக்கும், சிறப்பம்சங்கள் விஷயத்தில் அவை அப்படி இருக்காது என்பதும் தெரிகின்றது. மஹிந்திராவின் இந்த தயாரிப்பிற்கு பிரபலங்கள் மத்தியிலும் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
சமீபத்தில் பிரபல இந்தி மற்றும் தமிழ் பட நடிகர் அனுராக் காஷ்யப் இந்த காரை டெலிவரி பெற்றார். இவர் மட்டுமல்ல இந்த காரை இசைப் புயல் ஏஆர் ரஹ்மானும் புக்கிங் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களை போல இன்னும் பலரும் இந்த எலெக்ட்ரிக் காரை வரும் நாட்களில் வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
குறிப்பாக, இந்த காரில் ஒலிக்கும் ஒலிகள் சில ஏஆர் ரஹ்மானின் கை வண்ணத்தில் இசை அமைக்கப்பட்டவை ஆகும். இதை மஹிந்திரா நிறுவனமும் ஏற்கனவே உறுதிச் செய்துவிட்டது என்பது கவனிக்கத்தகுந்தது. இது மஹிந்திரா எக்ஸ்இவி 9இ மற்றும் பிஇ 6 இரண்டு கார் மாடல்களுக்கும் கூடுதல் சிறப்பு சேர்க்கும் விதமாக அமைந்திருக்கின்றது.
இந்தியாவில் மஹிந்திரா எக்ஸ்இவி 9இ மற்றும் பிஇ 6 இந்த இரண்டு கார் மாடல்களின் வருகை முன்னணி இ-கார் மாடல்களுக்கு மிகப் பெரிய போட்டியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. குறிப்பாக, டாடா நெக்ஸான் இவி, எம்ஜி விண்ட்ஸர் இவி, மாருதி சுஸுகி இ விட்டாரா மற்றும் ஹூண்டாய் கிரெட்டா எலெக்ட்ரிக் ஆகிய மின்சார கார் மாடல்களுக்கே இதன் வருகை மிகப் பெரிய தலைவலியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மஹிந்திராவின் இந்த எலெக்ட்ரிக் கார் மாடலுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருப்பதை உறுதிப்படுத்தும் விதமாக சென்னையில் இந்த அரங்கேறிய இந்த கார் டெலிவரி நிகழ்வு அரங்கேறி இருக்கின்றது. வரும் நாட்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நாட்டில் அதிகம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









