புதிய மஹிந்திரா எலக்ட்ரிக் கார்கள் எங்கு பார்த்தாலும் இருப்பதற்கு இதுதான் காரணமா!! கஸ்டமர்ஸ் கூடிட்டே போறாங்க!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தில் இருந்து மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஹெரியர்.இவி எலக்ட்ரிக் கார் (Harrier.ev Electric Car) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விற்பனையில் இந்த டாடா எலக்ட்ரிக் காருக்கு போட்டியாக ஏற்கனவே மஹிந்திரா நிறுவனம் அதன் பிஇ 6 (BE 6) மற்றும் எக்ஸ்.இ.வி 9இ (XEV 9e) எலக்ட்ரிக் கார்களை கடந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்தது. இன்னும் சொல்லப்போனால், டாடா ஹெரியர்.இவி எலக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பே மேற்கூறப்பட்ட மஹிந்திரா எலக்ட்ரிக் கார்கள் 10 ஆயிரம் கார்கள் சாலைக்கு வந்துவிட்டன. இதனை பற்றிய கூடுதல் விபரங்களை தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

மஹிந்திரா நிறுவனத்தில் இருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாத துவக்கத்திலேயே பிஇ 6 மற்றும் எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் கார்கள் அறிமுகம் செய்யப்பட்டு விட்டாலும், இவற்றிற்கான முன்பதிவுகள் கடந்த பிப்ரவரி மாதத்தில்தான் துவங்கப்பட்டன. அதனை தொடர்ந்து, கடந்த மார்ச் 20ஆம் தேதியில் இருந்து இந்த எலக்ட்ரிக் கார்களை புக் செய்த கஸ்டமர்களுக்கு டெலிவிரி கொடுக்கும் பணிகளை மஹிந்திரா துவங்கியது.

mahindra electric cars delivery

அதற்குள்ளாக, 2.5 மாதங்களில் சுமார் 10 ஆயிரம் மஹிந்திரா பிஇ 6 மற்றும் எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் கார்கள் கஸ்டமர்களுக்கு டெலிவிரி செய்யப்பட்டுள்ளன. கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்த எலக்ட்ரிக் கார்களின் டெலிவிரியில் 3 ஆயிரத்தை கடந்ததாக மஹிந்திரா அறிவித்து இருந்த நிலையில், அடுத்த 1.5 மாதங்களில் 7,000 கார்கள் டெலிவிரி செய்யப்பட்டு இருப்பது மிகுந்த ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது.

இத்தனைக்கும் இந்த புதிய எலக்ட்ரிக் கார்களின் விலைமிக்க டாப் வேரியண்ட்களின் டெலிவிரிகள் மட்டுமே துவங்கப்பட்டுள்ளன. விலை குறைவான வேரியண்ட்களின் டெலிவிரிகள் இந்த ஜூன் மாதத்தில் இருந்துதான் துவங்கப்பட உள்ளன. இதனாலேயே இந்த புதிய மஹிந்திரா எலக்ட்ரிக் கார்களை பணக்காரர்களும், அரசியல் மற்றும் சினிமா பிரபலங்களாக டெலிவிரி பெற்றுவரும் நிலையில், 2.5 மாதங்களில் 10,000 எலக்ட்ரிக் கார்கள் டெலிவிரி செய்யப்பட்டுள்ளன.

mahindra electric cars delivery

இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், வெறும் 70 நாட்களில் மேற்கூறப்பட்ட இரு மஹிந்திரா எலக்ட்ரிக் கார்கள் 10,000 யூனிட்களுக்கும் மேல் டெலிவிரி செய்யப்பட்டுள்ளன. சராசரியாக ஒவ்வொரு நாளும் 140இல் இருந்து 145 கார்கள் டெலிவிரி செய்யப்பட்டுள்ளன. இந்த 10 ஆயிரம் கார்களில் மஹிந்திராவின் பிஇ 6 மற்றும் எக்ஸ்இவி 9இ என இரு எலக்ட்ரிக் கார்களும் அடங்குகின்றன.

இருப்பினும், இந்த இரண்டில் எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் காருக்கு தான் சிறப்பான வரவேற்பு கிடைத்து வருவதை தொடர்ந்து பார்த்து வருகிறோம். மஹிந்திராவின் இந்த புதிய எலக்ட்ரிக் கார்களுக்கு இதுவரையில் சுமார் 30 ஆயிரத்து 179 புக்கிங்குகள் கிடைத்துள்ளன. நீங்கள் இந்த செய்தியை படித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் சிலர் இந்த எலக்ட்ரிக் கார்களை புக் செய்திருப்பர்.

mahindra electric cars delivery

இதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் புக் செய்வது எக்ஸ்இவி 9இ என்கிற விலைமிக்க மஹிந்திரா எலக்ட்ரிக் காரை ஆகும். மீதி 40- 41 சதவீதத்தினர் மட்டுமே பிஇ 6 எலக்ட்ரிக் காரை புக் செய்வதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், உடனடியாக டெலிவிரி பெறுவதற்காக இந்த எலக்ட்ரிக் கார்களின் விலைமிக்க டாப் வேரியண்ட்டான 'பேக் த்ரீ' (Pack Three)-ஐ தான் அதிக பேர் புக் செய்வதாக மஹிந்திரா நிறுவனம் தெரிவிக்கிறது.

மஹிந்திரா எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் கார் ஆனது பேக் ஒன், பேக் டூ, பேக் த்ரீ செலெக்ட் மற்றும் பேக் த்ரீ என 4 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.21.90 லட்சத்தில் இருந்து ரூ.30.50 லட்சம் வரையில் தற்சமயம் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: வெறும் 70 நாட்களில் 10 ஆயிரம் எலக்ட்ரிக் கார்கள் டெலிவிரி என்பது உண்மையில் ஆச்சிரியமான விஷயமாகும். இது, மஹிந்திராவின் எலக்ட்ரிக் கார்களுக்கு கிடைத்துவரும் வரவேற்பை காட்டுவது மட்டுமின்றி, இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களை தைரியமாக வாங்குவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதை காட்டுகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, June 3, 2025, 23:59 [IST]
English summary
Mahindra delivered 10000 be6 and xev 9e electric cars in just 70 days
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X