பெட்ரோல், டீசல் கார்களுக்கு குட் பை சொல்லுங்க! ரெண்டே 2 கார்கள் மூலம் மொத்தத்தையும் மாற்றிய மஹிந்திரா!

மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிமுகம் செய்யப்பட்ட எலக்ட்ரிக் கார்கள் (Electric Cars) பிஇ6 (BE 6) மற்றும் எக்ஸ்.இ.வி 9இ (XEV 9e) ஆகும். கடந்த 2024 டிசம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த எலக்ட்ரிக் கார்களின் விலைகள் அப்போதே அறிவிக்கப்பட்டுவிட்டன. ஆனால், இந்த எலக்ட்ரிக் கார்களுக்கான முன்பதிவுகள் கடந்த பிப்ரவரி மாதத்தில்தான் துவங்கப்பட்டன. அதனை தொடர்ந்து, கார்களை புக் செய்தவர்களுக்கு டெலிவிரி கொடுக்கும் பணிகள் கடந்த மார்ச் மாத மத்தியில் துவங்கப்பட்டன.

இதனால்தான், கடந்த சில வாரங்களாக வரிசையாக மஹிந்திரா எலக்ட்ரிக் கார் டெலிவிரிகளை பார்த்து வருகிறோம். இத்தனைக்கும் இந்த மஹிந்திரா எலக்ட்ரிக் காரின் விலைமிக்க டாப் வேரியண்ட்களின் டெலிவிரிகள் மட்டுமே தற்போதைக்கு துவங்கப்பட்டுள்ளன. விலை குறைவான வேரியண்ட்களின் டெலிவிரிகள் வருகிற ஜூன் மாதத்திற்கு பிறகே துவங்கப்பட உள்ளன.

mahindra electric cars delivery

இதனால், ஜூன் மாதத்திற்கு பிறகுதான் இன்னும் நிறைய பேர் இந்த மஹிந்திரா எலக்ட்ரிக் கார்களை அடுத்தடுத்து டெலிவிரி பெறுவதை பார்க்க முடியும். தற்போது இந்த எலக்ட்ரிக் கார்களை டெலிவிரி பெறும் பலரும் பணக்காரர்களாகவும், சமூகத்தில் பிரபலமானவர்களாகவும் உள்ளனர். குறிப்பாக, சினிமா துறையை சேர்ந்தவர்கள் மஹிந்திரா பிஇ 6 மற்றும் எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் கார்களை டெலிவிரி பெறுவதை கடந்த சில வாரங்களாக அதிக முறை பார்த்துள்ளோம்.

இந்த நிலையில், பிஇ 6 மற்றும் எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் கார்களின் டெலிவிரிகளில் புதிய மைல்கல்லை மஹிந்திரா கடந்துள்ளது. இதுவரையில் சுமார் 3 ஆயிரம் மஹிந்திரா பிஇ 6 மற்றும் எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் கார்கள் புக் செய்த வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி கொடுக்கப்பட்டுள்ளன. இத்தனைக்கும் இன்னும் அதிக பேரால் முன்பதிவு செய்யப்படும் இந்த மஹிந்திரா எலக்ட்ரிக் கார்களின் விலை குறைவான வேரியண்ட்களின் டெலிவிரிகள் துவங்கப்படவில்லை.

mahindra electric cars delivery

மார்ச் 20ஆம் தேதி இந்த புதிய எலக்ட்ரிக் கார்களுக்கான டெலிவிரிகள் துவங்கப்பட்ட நிலையில், வெறும் 20 நாட்களில் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு மஹிந்திரா பிஇ 6 மற்றும் எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் கார்கள் டெலிவிரி செய்யப்பட்டுள்ளன. இந்த இரு எலக்ட்ரிக் கார்களில் எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் கார்கள் அதிக எண்ணிக்கையில் கஸ்டமர்களுக்கு டெலிவிரி செய்யப்பட்டு இருப்பது ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது.

அதாவது, பிஇ 6 எலக்ட்ரிக் கார்களை (41%) காட்டிலும் எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் கார்களை (59%) அதிக பேர் புக் செய்துள்ளனர். இது ஆச்சிரியத்தை ஏற்படுத்துவதற்கு காரணம், பிஇ 6 எலக்ட்ரிக் காரை காட்டிலும் எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் கார் ஆனது விலைமிக்கது. இதில் இருந்து, பெரும் பணக்காரர்களையும் மஹிந்திராவின் இந்த புதிய எலக்ட்ரிக் கார்கள் கவர்ந்துள்ளதை அறிய முடிகிறது.

mahindra electric cars delivery

இந்த எலக்ட்ரிக் கார்களுக்கு கஸ்டமர்கள் குவிய குவிய, புக் செய்தவர்கள் இந்த எலக்ட்ரிக் கார்களை டெலிவிரி பெற காத்திருக்க வேண்டிய கால அளவும் அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்தியாவின் சில பகுதிகளில் இந்த மஹிந்திரா எலக்ட்ரிக் கார்களை டெலிவிரி பெறுவதற்கு 6 மாதங்கள் வரையில் கூட காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

மிகுந்த வரவேற்பை பெற்றுவரும் மஹிந்திராவின் விலையுயர்ந்த எலக்ட்ரிக் காரான எக்ஸ்இவி 9இ மொத்தம் 4 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. பேக் ஒன், பேக் டூ, பேக் த்ரீ செலெக்ட் மற்றும் பேக் த்ரீ என்பன அந்த 4 வேரியண்ட்கள் ஆகும். இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.21.90 லட்சத்தில் இருந்து ரூ.30.50 லட்சம் வரையில் உள்ளன.

மஹிந்திரா பிஇ 6 எலக்ட்ரிக் கார் ஆனது மொத்தம் 5 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. பேக் ஒன், பேக் ஒன் அபோவ், பேக் டூ, பேக் த்ரீ செலெக்ட் மற்றும் பேக் த்ரீ என்பன அந்த 5 வேரியண்ட்கள் ஆகும். இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.18.90 லட்சத்தில் இருந்து ரூ.26.90 லட்சம் வரையில் உள்ளன.

டிரைவ்ஸ்பார் கருத்து: ஏற்கனவே கோடி ரூபாய் மதிப்பிலான பல சொகுசு கார்களை வைத்திருப்பவர்கள் கூட மஹிந்திராவின் இந்த புதிய எலக்ட்ரிக் கார்களை வாங்குகின்றனர். இதில் இருந்து மஹிந்திரா பிஇ 6 மற்றும் எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் கார்கள் மார்க்கெட்டில் ஏற்படுத்தி இருக்கும் தாக்கத்தை அறிய முடிகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 9, 2025, 19:36 [IST]
English summary
Mahindra delivers 3000 all electric suv cars across india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X