காதலர் தினத்துக்காக சாக்லேட் தயாரிக்கிற மாதிரி காரை தயாரிக்கும் மஹிந்திரா.. பிப்ரவரி 14இல் புக்கிங் தொடங்குது!

மஹிந்திரா (Mahindra) நிறுவனம் அதன் புதிய தயாரிப்புகளான எக்ஸ்இவி 9இ (XEV 9e) மற்றும் பிஇ 6 (BE 6) இந்த இரண்டு கார் மாடல்களையும் சமீபத்திலேயே இந்தியாவில் வெளியீடு செய்தது. இரண்டும் எஸ்யூவி ரக எலெக்ட்ரிக் கார் (Electric SUV Car) மாடல்கள் ஆகும். இந்த இரண்டு கார்களும் ஏற்கனவே இந்தியர்களின் மனதைக் கவர தொடங்கிவிட்டன. ஆகையால், புக்கிங்கில் இந்த இரண்டு கார் மாடல்களும் பட்டையைக் கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வருகின்ற பிப்ரவரி 14ஆம் தேதி அன்றே இந்த இரு கார்களுக்குமான புக்கிங்கை ஏற்க மஹிந்திரா நிறுவனம் திட்டமிட்டு இருக்கின்றது. காதலர் தினத்தன்று புக்கிங் பணிகளைத் தொடங்க இருப்பதனாலேயே என்னமோ, மஹிந்திரா நிறுவனம் இந்த காரின் உற்பத்தியை இப்போதே சாக்லேட்டுகளை தயாரிப்புகளைப் போல அதிக வேகத்தில் தயாரிக்கத் தொடங்கிவிட்டது.

Mahindra dispatches 1837 be 6 and xev 9e units

காதலர் தினத்துக்கு எல்லாரும் அவங்கவங்க காதலர்களுக்கு சாக்லேட்டுக்கு பதிலாக இந்த காரை பரிசா தர போறாங்களோ என நினைக்கச் செய்யும் வகையில் அமைந்திருக்கின்றது, நிறுவனத்தின் அதி வேக உற்பத்தி செயல். இந்த இரண்டு கார் மாடல்களையும் ஜனவரி மாசத்திலேயே மஹிந்திரா நிறுவனம் 1,837 யூனிட்டுகளை உற்பத்தி செய்து வெளியேற்றி இருக்கின்றது.

இதுமட்டுமல்ல இப்போது வரை மொத்தமாக இரண்டு மாடல்களிலும் 2 ஆயிரத்து 281 யூனிட்டுகள் வரை உற்பத்தி செய்து வெளியேற்றப்பட்டு இருக்கின்றன. புக்கிங் பணிகள் இன்னும் ஒரு சில தினங்களில் தொடங்கினாலும் டெலிவரி பணிகள் மார்ச் மாதத்தின் மத்தியிலேயே தொடங்க இருக்கின்றன என்பது கவனிக்கத்தகுந்தது.

இந்த நிலையிலேயே உற்பத்தி பணிகளை மஹிந்திரா நிறுவனம் தீவிரப்படுத்தி இருப்பது தெரிய வந்திருக்கின்றது. ஆகையால், புக் செய்பவர்களுக்கு எக்ஸ்இவி 9இ மற்றும் பிஇ 6 கார் மாடல்கள் விரைந்து டெலிவரி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், முதலில் உயர்நிலை தேர்வுகளின் டெலிவரி பணிகளே தொடங்கப்பட இருக்கின்றது.

மஹிந்திரா நிறுவனம் இரண்டு கார் மாடல்களின் அனைத்து வேரியண்டுகளின் விலைகளையும் ஏற்கனவே அறிவித்துவிட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. எக்ஸ்இவி 9இ எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் மாடலுக்கு ரூ. 21.90 லட்சம் தொடங்கி ரூ. 30.50 லட்சம் வரையிலான விலையே நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இதேபோல், பிஇ 6 மாடலுக்கு ரூ. 18.90 லட்சம் தொடங்கி ரூ. 26.90 லட்சம் வரையிலான விலையே நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இவை அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும். இந்த கார் மாடல்களில் ஆரம்ப நிலை தேர்வுகளில் 59 kWh பேட்டரி பேக்கே வழங்கப்பட இருக்கின்றது.

அதேவேளையில், உயர் நிலை வேரியண்டுகளில் 79 kWh திறன் கொண்ட பேட்டரி பேக்கும் வழங்கப்படும் என்பது கவனிக்கத்தகுந்தது. சிறிய பேட்டரி பேக்கில் ஓர் முழு சார்ஜில் 542 கிமீ தூரமும், பெரிய பேட்டரி பேக் தேர்வில் ஓர் முழு சார்ஜில் 656 கிமீ தூரமும் பயணிக்க முடியும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா நிறுவனத்தின் மற்ற தயாரிப்புகளுக்கு கிடைப்பதைப் போலவே இந்த எலெக்ட்ரிக் கார் மாடல்களுக்கும் மிக சிறப்பான வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதன் டெலிவரி பணிகள் முழுமையாக தொடங்கிய பின்னரே என்ன மாதிரியான வரவேற்பை இது நாட்டில் பெற்றுக் கொண்டிருக்கின்றது என்பது தெரிய வரும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 11, 2025, 22:41 [IST]
English summary
Mahindra dispatches 1837 units of be 6 and xev 9e in january 2025
மேலும்... #mahindra #electric car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+