ஜிஎஸ்டி குறையும் வரை வெயிட் பண்ண வேண்டாம்! இப்பவே கம்மி விலையில் இந்த கம்பெனி கார்களை வாங்கலாம்!
செப்டம்பர் மாதம் 22ம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி குறைப்பு நடக்கவுள்ள நிலையில் வாகனங்களின் விலை கணிசமாக குறைகிறது. இந்நிலையில் மஹிந்திரா நிறுவனம் இந்த ஜிஎஸ்டி வரி குறைப்பின் பலன்களை நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளது. அதே நேரம் இந்த வரி குறைப்பிற்காக காத்திருக்க வேண்டிய தேவையில்லை வரி குறைப்பு பின் வழங்கப்படும் விலையை தற்போதே வழங்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
ஜிஎஸ்டி வரிகள் வரும் செப்டம்பர் மாதம் 22ம் தேதி முதல் குறைக்கப்படுகிறது. வாகனங்களுக்கு 28 சதவீத்தில் இருந்து 18 சதவீதமாக குறைகிறது. சொகுசு வாகனங்களுக்கும் 42-50 சதவீதமாக இருந்த வரி தற்போது 40 சதவீதமாக குறைகிறது. இந்நிலையில் மஹிந்திரா நிறுவனம் இதன் பலனை நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளது. இதனால் மஹிந்திரா வாங்களின் விலை ரூ1.01 லட்சம் முதல் ரூ1.56 லட்சம் வரை விலை குறைகிறது.

மஹிந்திர பொலிரோ காருக்கு ரூ1.27 லட்சமும், எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ பெட்ரோல் காருக்கு 1.40 லட்சமும், எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ டீசல் காருக்கு ரூ1.56 லட்சமும், தார் 2 வீல் டிரைவ் காருக்கு ரூ1.06 லட்சமும், தார் 4 வீல் டிரைவ் காருக்கு ரூ1.01லட்சமும், ஸ்கார்பியோ கிளாசிக் காருக்கு ரூ1.35 லட்சமும், ஸ்கார்பியோ என் காருக்கு ரூ1.45 லட்சமும், தார் ராக்ஸ் காருக்கு ரூ1.43 லட்சமும், எக்ஸ்யூவி 700 காருக்கு ரூ1.43 லட்சமும் விலை குறைகிறது.
இது மட்டுமல்ல இந்த விலையில் காரை வாங்க வாடிக்கையாளர்கள் செப்டம்பர் 22 வரை வெயிட் பண்ண தேவையில்லை என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்நிறுவனம் செப்டம்பர் 6ம் தேதி முதலே இதை அமலுக்கு கொண்டுவந்துவிட்டதாகவும், அதனால் வாடிக்கையாளர்கள் இந்த விலையில் கார்களை வாங்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.

அது எப்படி ஜிஎஸ்டி வரியே செப் 22ம் தேதி தான் அமலுக்கு வருகிறது. அதற்கு முன்னர் இந்த விலையில் எப்படி பொருட்களை விற்க முடியும் என்ற கேள்வி எழும். இதற்கு மஹிந்திரா நிறுவனம் தெளிவான விளக்கத்தை தரவில்லை. இருந்தாலும் தற்போது காரை வாங்க பணத்தை வாங்கிவிட்டு அதை முன்பணமாக கருதி, அதற்கு செப்டம்பர் 22ம் தேதிக்கு பில்லிங் செய்து டெலிவரி செய்யவுள்ளதா? அல்லது தற்போது இந்த தொகையை சொந்த தள்ளுபடியாக அறிவித்து வாகனத்தை உடனடியாக டெலிவரி செய்யவுள்ளதா என்பதை தெரிவிக்கவில்லை.
ஆனால் வாடிக்கையாளர்கள் ஜிஎஸ்டிக்கு பிறகான தொகையை செலுத்தி காரை வாங்கலாம் என்று தான் தெரிவித்துள்ளது. செப்டம்பர் மாதம் துவக்கத்திலேயே இ்நத ஜிஎஸ்டி குறைப்பு குறித்து செய்து வெளியான நிலையில் மக்கள் இதற்காக கார் வாங்காமல் காத்திருப்பார்கள். 22 நாள்கள் விற்பனையில்லாமல் அடுத்த 8 நாட்களில் விற்பனை செய்து ஒரே மாத இலக்கை எட்டி பிடிப்பது கடினம். இதனால் தள்ளுபடிகளை வழங்கி விற்பனை தக்க வைக்ககூட இந்த யுக்தியை பின்பற்றலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால் இந்நிறுவனம் தனது கார்களின் விலையை உயர்த்திய நிலையில் ஜிஎஸ்டி குறைப்பு மூலம் கார்களின் விலை குறைந்துள்ளது. இதை பயன்படுத்தி இந்த மாத விற்பனையை தக்க வைக்க இந்நிறுவனம் ஜிஎஸ்டிக்கு பிறகான விலையில் தற்போதே கார்களை விற்க போட்ட திட்டம் நல்ல வரவேற்ப்பை பெறும் இதனால் ஜிஎஸ்டி வரிகுறைப்புக்க பிறகு வரும் கூட்ட நெரிசல் குறையும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications
