இனி மாசம் 8,000 இவி கார் தயாரிக்க போறாங்க! டாடாவை வீழ்த்த மஹிந்திராவின் சூப்பர் ஐடியா!
மஹிந்திரா நிறுவனம் வரும் 2026ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் தனது எலெக்ட்ரிக் கார்களின் தயாரிப்பை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இதன்படி தற்போது நடந்து வரும் உற்பத்தி திறனை இரு மடங்காக மாற்ற திட்டமிட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
மஹிந்திரா நிறுவனம் சமீபத்தில் தனது எக்ஸ் இவி 9எஸ் என்ற 3 வரிசை சீட்டர் கொசண்ட எலெக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தியது.இந்த காருடன் சேர்த்து மஹிந்திரா நிறவனம் எக்ஸ்இவி 9இ, பிஇ6, எக்ஸ்யூவி 400 ஆகிய கார்களை தயாரித்து வருகிறது. தற்போது அந்நிறுவனம் மாதம் 4000-5000 கார்களை தயாரித்து வருகிறது.

இந்நிலையில்இந்நிறுவனத்திற்கு ஆர்டர்கள் குவிந்து வருவதால் தனது தயாரிப்பு திறனை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. இதன் படி இந்நிறுவனம் வரும் 2026ம் ஆண்டு மார்ச் மாத இறுதிக்குள் மாத தயாரிப்பு திறனை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி மாதம் 8000 கார்களை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களை தனது சக்கன் ஆலையில் வைத்து தயாரிக்கிறது. இந்த ஆலையில் தற்போது மாதம் 10,000 வாகனங்களை தயாரிக்கும் அளவிற்கு திறன் உள்ளது. இதில் பாதியை தான் தற்போது பயன்படுத்தி வருகிறது. விரைவில் 8000 வாகனங்கள் தயாரிக்கும் அளவிற்கு மாறும் என எதிர்பாரக்கப்படுகிறது.

மஹிந்திரா நிறுவனம் மொத்தம் தயாரிக்கும் கார்களில் 7.5 சதவீதம் எலெக்ட்ரிக் கார்களாக உள்ளன. இதில் பிஇ6 மற்றணம் எக்ஸ்இவி 9இ ஆகிய கார்கள் சிறப்பான விற்பனையை பெற்று வருகின்றரன். இந்நிலையில் எக்ஸ்இவி9 எஸ் கார் விற்பனைக்கு வந்துள்ளது. இது இன்னும் விற்பனையை அதிகரிக்கும் என எதரி்பார்க்கலாம். 2028ம் ஆண்டு தற்போது7.5 சதவீதமானக இருக்கும் எலெக்ட்ரிக் கார்கள் விற்பனை 20-25 சதவீதமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது தயாரிப்பு திறனை அதிகரிக்க முடிவு செய்திருந்தாலும் எந்தெந்த கார்கள் எவ்வளவு தயாரிக்கப்படும் என்ற தகவல்கள் இதுவரை தெளிவாக தெரியவில்லை. விரைவில் இது மிகப்பெரிய காத்திருப்பு பட்டியலை குறைக்கும் என எதிர்பார்க்கலாம். கார் புக் செய்தவர்களுக்கு எதிர்பார்த்த நேரத்தைவிட கார் விரைவாக கிடைக்க வாய்ப்புள்ளது.

மஹிந்திரா நிறுவனம் தற்போது இவி விற்பனையில் டாடா நிறுவனத்திற்கு போட்டி போட்டு வருகிறது. ஒரு காலத்தில் இவி டாடா கார்கள் தான் நினைவிற்கு வரும் நிலையில் தற்போது மஹிந்திராவிலும் ஏகப்பட்ட தயாரிப்புகள் வர துவங்கிவிட்டன. இதனால் எதிர்காலத்தில் இவி விற்பனவையில் கடும் போட்டியை வழங்கும் வகையில் இந்த வாகனம் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் சிறப்பான வகையில் வாகனங்களை தயாரித்து விற்பனைக்காக அனுப்பி வருகின்றனர். இதி்ல மஹிந்திரா நிறுவனம் சிறப்பான இவி கார்களை அதிகம் தயாரித்தால் விற்பனை விரைவில் அதிகரிக்க துவங்கும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









